கே. என். சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. என். சீனிவாசன் (K. N. Srinivasan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் சென்னை மாநகரத் தந்தையாகப் பணியாற்றியவர் ஆவார்.[1] இவர் நவம்பர் 1956ஆம் ஆண்டு முதல்[2] டிசம்பர் 1957 வரை இப்பதவியிலிருந்தார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சீனிவாசன் செப்டம்பர் 20, 1914இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தார். சென்னை, கிறித்துவக் கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் உயர்கல்வி பயின்றார் . சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக 1945இல் சேர்ந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

சீனிவாசன் தனது ஆரம்பக் காலத்திலிருந்தே இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். இவர் தமிழக காங்கிரசு குழுவின் உறுப்பினராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். செங்கல்பட்டு மாவட்ட மாநாட்டிலும் உறுப்பினராக இருந்தார். நவம்பர் 29, 1956இல், இவர் சென்னை மாநகரத் தந்தையாக நியமிக்கப்பட்டார்[2] மற்றும் டிசம்பர் 1957 வரை பணியாற்றினார். இவருக்குப் பின் தாரா செரியன் வெற்றி பெற்று இபபதவியினை வகித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Civic Affairs, Volume 5, Issues 5-8; Published by P. C. Kapoor at the Citizen Press, 1957
  2. 2.0 2.1 "dated November 29, 1956: New Mayor of Madras". The Hindu. 29 November 2006. 2 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
முன்னர்
வி. ஆர். இராமநாத ஐயர்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1956-1957
பின்னர்
தாரா செரியன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._என்._சீனிவாசன்&oldid=3148871" இருந்து மீள்விக்கப்பட்டது