கே. என். ஒய் பதஞ்சலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பதஞ்சலி
KNY Patanjali.jpg
பிறப்புககர்லாபுடி நரசிம்ம யோகா பதஞ்சலி
மார்ச்சு 29, 1952(1952-03-29)
அலமந்தா, விசயநகர மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு11 மார்ச்சு 2009(2009-03-11) (அகவை 56)
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிபத்திரிகையாளர், எழுத்தாளர், புதின ஆசிரியர்
வாழ்க்கைத்
துணை
பிரமிளா
பிள்ளைகள்
  • சாந்தி
  • நீலிமா
  • சாலினி

கே. என். ஒய் பதஞ்சலி (K. N. Y. Patanjali) இவர் ஆந்திராவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமாவார். இவர் ஈனாடு, ஆந்திர பூமி, உதயம், ஆந்திர பிரபா போன்ற பல்வேறு செய்தித்தாள்களில் பணியாற்றினார். சாக்சி என்ற செய்தித்தாளின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். இவர் பல புதினங்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது பெரும்பாலான எழுத்துக்கள் இவரது சொந்த நையாண்டி பாணியைக் கொண்டுள்ளன. [1] இவர் 2009 மார்ச் 11 அன்று விசாகப்பட்டினத்தில் காலமானார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பதஞ்சலி 1952 மார்ச் 29 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசயநகர மாவட்டத்தில் அலந்தா என்ற ஊரில் கே. வி. வி. கோபால இராஜு மற்றும் சீதா தேவி ஆகியோருக்கு பிறந்தார். [2] [3] தொடக்கக் கல்வியைத் தொடரும் போதே, ஆயுர்வேதத்தையும் தனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார். சிறு வயதிலிருந்தே எழுதத் தொடங்கினார்.

பத்திரிகையாளர்[தொகு]

1975 ஆம் ஆண்டில் ஈநாடு செய்தித்தாளில் ஒரு பத்திரிகையாளராக சேர்ந்தார். 1984 வரை அங்கு பணியாற்றினார். 1984 முதல் 1990 வரை உதயம் செய்தித்தாளில் பணியாற்றினார். பின்னர் இவர் ஆந்திர பூமி, மற்றும் மகாநகர் ஆகியவற்றிலும் பணியாற்றினார். இவர் பதஞ்சலி பத்ரிகா என்ற சொந்த செய்தித்தாளை தொடங்கி 16 மாதங்கள் அதை வெளியிட்டார். பின்னர் 2003 ல் ஆந்திர பிரபாவில் சேர்ந்தார். இவர் சாக்சியின் ஆசிரியராக பொறுப்பேற்பதற்கு முன்பு சில மாதங்கள் டிவி 9 என்ற தொலைக்காட்சியுடன் பணிபுரிந்தார். சிறிது நேரம் கழித்து நோய்வாய்ப்பட்ட இவர் 2009 மார்ச் 11 அன்று விசாகப்பட்டினத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். [2]

எழுத்தாளர்[தொகு]

இரவி சாஸ்திரியின் எழுத்துக்களால் இவர் ஈர்க்கப்பட்டார். [4] இவரது படைப்புகளில் பெம்புடு ஜந்துவ் (செல்லப்பிராணிகள்) என்பது பத்திரிகையாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. காக்கி வனம் என்பது காவல்துறையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

விருதுகள்[தொகு]

இரவி சாஸ்திரி, சாகந்தி சோமயாஜுலு என்ற பெயரில் நிறுவப்பட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார். கிருட்டிண வம்சி இயக்கிய சிந்தூரம் படத்திற்கான வசனங்களையும் இவர் எழுதியுள்ளார். இந்த படத்திற்காக தங்கநந்தி விருதை வென்றுள்ளார். [2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._என்._ஒய்_பதஞ்சலி&oldid=2897651" இருந்து மீள்விக்கப்பட்டது