கே. இராகவன் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே.ராகவன் பிள்ளை (1920-1987) இந்தியாவின் கேரளாவின் எழுத்தாளரும், அறிஞருமாவார்.

நன்கு அறியப்பட்ட புதின ஆசிரியரான இவர் 1920 நவம்பரில் கோட்டயம் மாவட்டத்தில் செங்கன்னூருக்கு அருகிலுள்ள புலியூரில் என்.சங்கரன், இலட்சுமி ஆகியோருக்குப் பிறந்தார். இவர்,சமசுகிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, இண்டனில் முனைவர் பட்டம் பெற்று, 1948 முதல் 1951 வரை ஆராய்ச்சி உதவியாளராக பணியாற்றினார்.

கேரளா திரும்பியதும், 1951-1955 க்கு இடையில் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் சமசுகிருதத விரிவுரையாளராகவும், பின்னர் 1956 முதல் 1958 வரை சான் பிரான்சிஸ்கோவின் ஆசிய ஆய்வுகள் கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1958 முதல் திருவனந்தபுரத்தின் கையெழுத்துப் பிரதி நூலகத்தின் பாதுகாவலராகவும், தலைவராகவும் இருந்த இவர், 1966ஆம் ஆண்டு வரை, கீழை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கையெழுத்துப் பிரதி நூலகத்தின் இயக்குநரானார். 1982 இல் அந்தப் பதவியை விட்டு விலகினார்.

1955 ஆம் ஆண்டில் கல்வி நிபுணர்களின் தூதுக்குழுவின் உறுப்பினராக சீனாவுக்கு சென்றார். மேலும் இவர் பல கல்வி அமைப்புகள் மற்றும் குழுக்களில் உறுப்பினராக இருந்தார். இவர் ஏப்ரல் 25, 1987 அன்று இறந்தார். [1] [2]

குறிப்புகள்[தொகு]

  1. Akhilavijnanakosam; D.C.Books; Kottayam
  2. Sahithyakara Directory ; Kerala Sahithya Academy,Thrissur
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._இராகவன்_பிள்ளை&oldid=3101874" இருந்து மீள்விக்கப்பட்டது