கே. ஆர். நாகராஜ்
கே. ஆர். நாகராஜ் | |
|---|---|
| உறுப்பினர்-தெலங்காணா சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் திசம்பர் 2023 | |
| முன்னையவர் | அரூரி இரமேசு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
கே. ஆர். நாகராஜ் (K. R. Nagaraj)(பிறப்பு 1963) தெலங்காணா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் வாரங்கல் மாவட்டத்தில் வரதனாபேட்டைச் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][2][3]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]நாகராஜ் வாரங்கலைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் கே. கார்பன். 1988ஆம் ஆண்டில் காகதீய பல்கலைக்கழகத்துடன் இணைந்த அனுமக்கொண்டா நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பை முடித்தார்.[4] இவர் ஒரு இந்தியக் காவல் பணி அதிகாரியாக இருந்தார். நிஜாமாபாத் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.[1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]2023 தெலங்காணா சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வரதனாபேட்டைச் சட்டமன்றத் தொகுதியில் நாகராஜ் வெற்றி பெற்றார். இவர் 106,696 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான பாரத் இராட்டிர சமிதி கட்சியின் அரோரி இரமேசை 19,458 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5][6]
தேர்தல் செயல்பாடு
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கே. ஆர். நாகராஜ் | 106,696 | 48.77 | ||
| பா.இரா.ச. | அரூரி ரமேசு | 87,238 | 39.88 | ||
| பா.ஜ.க | கொண்டேதி சிறீதர் | 12,275 | |||
| நோட்டா | நோட்டா | 3,612 | |||
| வாக்கு வித்தியாசம் | 19,458 | ||||
| பதிவான வாக்குகள் | 2,18,776 | 83.96 | |||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Former IPS officers political entry: Nagaraj registers victory, Praveen Kumar tastes defeat" (in en-IN). The Hindu. 2023-12-04. https://www.thehindu.com/news/national/telangana/former-ips-officers-political-entry-nagaraj-registers-victory-praveen-kumar-tastes-defeat/article67602547.ece.
- ↑ "Former IPS Officer K.R. Nagaraj Clinches Wardhannapet Seat for Congress". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). 2023-12-03. Retrieved 2024-07-14.
- ↑ "Wardhanapet Constituency Election Results 2023: Wardhanapet Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-07-14.
- ↑ "K.R.Nagaraj.K(Indian National Congress(INC)):Constituency- WARADHANAPET (SC)(WARANGAL) - Affidavit Information of Candidate:". www.myneta.info. Retrieved 2024-07-14.
- ↑ "Waradhanapet Assembly Election Results 2023 Highlights: INC's K.r.nagaraj.k wins Waradhanapet with 106696 votes". India Today (in ஆங்கிலம்). 2023-12-03. Retrieved 2024-07-14.
- ↑ "Telangana Election Results 2023: Full list of winners". The Indian Express (in ஆங்கிலம்). 2023-12-03. Retrieved 2024-07-14.
- ↑ "Wardhanapet Assembly Election Results 2023". Retrieved 2026-04-03.