கே. ஆர். சீனிவாச ஐயங்கார்
கே. ஆர். சீனிவாச ஐயங்கார் K. R. Srinivasa Iyengar | |
---|---|
பிறப்பு | ஏப்பிரல் 17, 1908 சாத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | ஏப்பிரல் 15, 1999 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
வாழிடம் | சென்னை |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | ஆங்கிலம் |
பணியிடங்கள் | ஆந்திரப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | இந்திய ஆங்கில எழுத்தாளராக |
விருதுகள் | சாகித்திய அகாதமி ஆய்வுத்தொகை |
கே. ஆர். சீனிவாச ஐயங்கார் (K. R. Srinivasa Iyengar) என அனைவராலும் நன்கறியப்படும் கொடக நல்லூர் இராமசாமி சீனிவாச ஐயங்கார் (ஏப்ரல் 17, 1908 - 1999), ஓர் இந்திய ஆங்கில எழுத்தாளராகவும் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராகவும் விளங்கியவர் ஆவார். இவருக்கு 1935 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமியின் புத்தாய்வு மாணவர் நிலை வழங்கப்பட்டது.
வாழ்க்கை
[தொகு]இவர் 1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆந்திரா பல்கலைகழகத்தின் ஆங்கில மொழிக்கான துறையில் சேர்ந்தார்.[1] 1966ஆம் ஆண்டு சூன் 30 ஆம் நாள் ஆந்திரா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பதவியேற்ற அவர், 1968ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாள் வரை அப்பதவியில் தொடர்ந்தார். இப்பல்கலைக்கழகத்தின் மிகப் பழமையான துறைகளுள் ஒன்றான ஆங்கில மொழித் துறையானது நவீன ஐரோப்பிய மொழிகளுக்கானத் துறையிலிருந்து உருவாக்கப்பட்டதாகும்.
பின்னர் அவர் 1969 முதல் 1977 வரை சாகித்திய அகாதெமியின் துணைத் தலைவராகவும் 1977 முதல் 1978 வரை அதன் பொறுப்புத் தலைவராகவும் பணியாற்றினார். மேலும் அவர் இந்திய பத்திரிக்கைக் குழுமத்தின் உறுப்பினராகவும், 1970 முதல் 1979 வரை சிம்லாவிலுள்ள இந்திய உயராய்வு நிறுவனத்தின் ஆளுநர் வாரிய உறுப்பினராகவும், பி. இ. என். இந்திய மையத்தின் நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். இவருக்குஆந்திரா மற்றும் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகங்கள் கவுரவ முதுமுனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தன. 1980 ஆம் ஆண்டில் ஆன் தி மதர் என்னும் இவரது படைப்பு சாகித்திய அகாதெமியின் விருதினைப் பெற்றது.[2]
1958 ஆம் ஆண்டில் லீட்சு பல்கலைக் கழகத்தில் பேசுவதற்கு இவரால் தயாரிக்கப்பட்ட 'இந்தியரின் ஆங்கில ஆக்கங்கள்' என்னும் தலைப்பிலான உரை பிற்காலத்தில் புகழ் பெற்ற நூலாக உருவானது.
இவர் 1972 ஆம் ஆண்டு சிம்லாவிலுள்ள இந்திய உயராய்வு நிறுவனத்தில், அரவிந்தர் எழுதிய 'சாவித்திரி' என்னும் நூலைப் பற்றி ஆற்றிய ஆறு தொடர் உரைகளில் அமைந்த கருப் பொருள்கள் வருமாறு: யோகியும் கவிஞனும், புராணப் பெண் சாவித்திரி, அசுவபதி ஒரு முன்னோடி, சாவித்திரியும் சத்தியவானும், சாவித்திரியின் யோகா, விடியலிலிருந்து பெரும் விடியலுக்கு.[3]
ஐயங்கார், பிரித்தானிய, அமெரிக்க மற்றும் காமன்வெல்த்து நாடுகளின் இலக்கியங்கள் பற்றியும் ஒப்பீட்டு அழகியல் குறித்தும் இந்திய ஆன்மிக மரபு பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். அவர் 40 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.[2]
இலக்கியப் பணி
[தொகு]- லிட்டன் ஸ்டிராச்சி (1938)
- இந்தோ ஆங்கில இலக்கியம் (1943)
- இந்தியாவில் இலக்கியமும் நூலாசிரியர்தன்மையும் (1943)
- ஆங்கில இலக்கியத்திற்கு இந்தியாவின் பங்களிப்பு (1945)
- அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு (1945)ref>Complete book of Sri Aurobindo Biography at scribd.</ref>
- ஜெரார்டு மேன்லே ஹாப்கின்ஸ் (1948)
- ஆன் தி மதர் (1952)
- ஷேக்சுபியர் (1964)
- கல்வியும் புதிய இந்தியாவும் (1967)
- குழுமத்திலுள்ள இந்திய எழுத்தாளர்கள்[4]
- Leaves from a Log: Fragments of a Journey.
- இரவீந்திரநாத் தாகூர்(1965)
- மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கான முக்கிய கல்வி பேச்சுகள் (1968)
- குரு நானக் - ஒரு அஞ்சலி (1973)
- இந்தியரின் ஆங்கில படைப்புகள் (1983)
- ஆஸ்திரேலியா ஹெலிக்சு (1983)
- சீதாயனா (1987)
- திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு (1988)
- ஏழு தாய்களின் சாகா (1991)
- கிருட்டிண கீதம் (1994)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Department of English at Andhra University". Archived from the original on 2009-05-11. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.
- ↑ "Savitri: the light of the Supreme blog". Archived from the original on 2011-07-28. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Complete book of Indian Writers in Council at Google Books.