கே. ஆனந்த நம்பியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ஆனந்த நம்பியார் (1918 - 11 அக்டோபர் 1991) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மயிலாடுதுறை மற்றும் திருச்சிராப்பள்ளி தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக பணியாற்றினார்

அரசியல்[தொகு]

1946 ஆம் ஆண்டில், நம்பியாா் மெட்ராஸ் சட்டமன்றத் தேர்தலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 முதல் 1951 வரை இவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1951 முதல் 1957 வரை மயிலாடுதுறை அல்லது மாயூராம் மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1962 முதல் 1971 வரை திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலிருந்தும் உறுப்பினராக தேர்ந்தெடுகபட்டு பணியாற்றினார்.

இறப்பு[தொகு]

நம்பியார் மாரடைப்பால் 1991 அக்டோபர் 11 இல் திருச்சிராப்பள்ளியில் இறந்தார்.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆனந்த_நம்பியார்&oldid=3164308" இருந்து மீள்விக்கப்பட்டது