உள்ளடக்கத்துக்குச் செல்

கு. அண்ணாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கே. அண்ணாமலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அண்ணாமலை குப்புசாமி
அண்ணாமலை (2024)
தமிழக மாநிலத் தலைவர், பாரதிய சனதா கட்சி
பதவியில்
16 சூலை 2021 – 11 ஏப்ரல் 2025
முன்னையவர்எல். முருகன்
பின்னவர்நயினார் நாகேந்திரன்
தமிழக மாநில துணைத் தலைவர், பாரதிய சனதா கட்சி
பதவியில்
29 ஆகத்து 2020 – 7 சூலை 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அண்ணாமலை

சூன் 4, 1984 (1984-06-04) (அகவை 40)[1]
தொட்டம்பட்டி, சின்னதாராபுரம், கரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா[2]
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
துணைவர்அகிலா சுவாமிநாதன்
பிள்ளைகள்2
பெற்றோர்குப்புசாமி கவுண்டர்
பரமேஸ்வரி
வாழிடம்கரூர், தமிழ்நாடு, இந்தியா
முன்னாள் மாணவர்பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
இந்திய மேலாண்மை கழகம் லக்னோ
பணிஅரசியல்வாதி
தொழில்முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி
விவசாயி

அண்ணாமலை குப்புசாமி (Annamalai Kuppusamy, பிறப்பு: 4 சூன் 1984), ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் காவல்துறை அதிகாரியும் ஆவார்.[3][4] இவர் தமிழ்நாட்டின் பாரதிய சனதா கட்சியின், மேனாள் மாநிலத் தலைவராவார்.

இளமையும் குடும்பமும்

அண்ணாமலை, கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டியில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக விவசாயக் குடும்பத்தில் சூன் 4, 1984 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் குப்புசாமி, பரமேஸ்வரி ஆகியோர் ஆவர்.[5] இவர் அகிலா சுவாமிநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[6]

கல்வி

அண்ணாமலை, கரூரிலும் நாமக்கல் மாவட்டத்திலும் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து, பொது சேர்க்கைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகப் படிப்பை முடித்தார். பின்னர், மத்திய அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் 2011-ஆம் ஆண்டிற்கான இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றார்.[7]

அண்ணாமலை, தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.[8]

காவல்துறை பணி

அண்ணாமலை, 2011-ஆம் ஆண்டு, கருநாடக மாநில காவல்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 2013-ஆம் ஆண்டு உடுப்பி மாவட்டம் கர்கலாவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டார். பின்னர், உடுப்பி, சிக்கமகளூரு மாவட்டங்களில் காவல்துறைக் கண்காணிப்பாளராக பணியாற்றி, அக்டோபர் 2018-இல் பெங்களூர் நகர தெற்கு காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். 2019-ஆம் ஆண்டு இவர் தனது காவல்துறைப் பணியை விட்டு விலகினார்.[9]

விவசாயமும் சமூகப் பணியும்

அண்ணாமலை, ஒரு பேச்சாளராக, இயற்கை விவசாயியாக ஆர்வம் காட்டினார். இவர் ஒன்றிய அரசுப்பணி பயிற்சி மையம், தலைவர்கள் அறக்கட்டளை உள்ளிட்ட பல இலாப நோக்கற்ற அறக்கட்டளைகளையும் தொடங்கினார்.[10]

அரசியல் வாழ்க்கை

2024 இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உடன் ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலை

அண்ணாமலை, ராசுடிரிய சுயம்சேவாக் சங்க கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்.[11][12] தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பாரதிய சனதா கட்சித் தலைவர் அமித் சா ஆகியோரைச் சந்தித்து அரசியலில் ஒன்றிணைந்து வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புவதாகத் தன்னை வெளிப்படுத்தினார்.[13] ஆகத்து 25, 2020 அன்று, தேசிய பொதுச் செயலாளர் பி. முரளிதர ராவ், கருநாடக அமைச்சரான சி. டி. இரவி, தமிழகத் தலைவர் லோ. முருகன் ஆகியோர் முன்னிலையில் முறையாக பாரதிய சனதா கட்சியில் இணைந்தார்.[14]

அண்ணாமலை, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 24,816 வாக்குகள் பின்னடைவில் திமுக சார்பாகப் போட்டியிட்ட இரா. இளங்கோவிடம் தோற்றார்.[15][16] முருகன் மத்திய அமைச்சரான பிறகு, இவர் தமிழ்நாட்டின் பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் சூலை 8, 2021 அன்று நியமிக்கப்பட்டார்.[17][18] 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில், பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 1,18,068 வாக்குகள் பின்னடைவில் திமுக சார்பாகப் போட்டியிட்ட கணபதி பி. இராஜ் குமாரிடம் தோற்றார்.[19]

போட்டியிட்ட தேர்தல்கள்

சட்டமன்றத் தேர்தல்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் விழுக்காடு எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி வாக்கு சதவீதம்
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அரவக்குறிச்சி பா.ஜ.க தோல்வி 68,553 38.71% [20] இரா. இளங்கோ திமுக 52.72% [20]

மக்களவைத் தேர்தல்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் விழுக்காடு எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி வாக்கு சதவீதம்
2024 இந்தியப் பொதுத் தேர்தல் கோயம்புத்தூர் பா.ஜ.க தோல்வி 450,132 32.8% [21] கணபதி ப. ராஜ்குமார் திமுக 41.4% [21]

திரைப்படங்களில்

அண்ணாமலை கன்னட மொழியில் ‘அரபி’ என்ற படத்தில் மாற்றுத்திறனாளி நீச்சல்காரனுக்கு நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.[22]

மேற்கோள்கள்

  1. T Muruganandham (8 July 2021). "It's official: Former IPS officer Annamalai Kuppusamy is new chief of Tamil Nadu BJP". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 1 December 2023.
  2. "தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்". இந்து தமிழ். 8 சூலை 2021. Retrieved 1 December 2023.
  3. "Ex-IPS officer Annamalai Kuppusamy appointed Karnataka BJP vice president". ANI news (in ஆங்கிலம்). 29 August 2020. Archived from the original on 25 November 2022. Retrieved 12 February 2024.
  4. "Ex-IPS Officer Annamalai Kuppusamy Appointed Karnataka BJP Vice President". Businessworld (in ஆங்கிலம்). 29 August 2020. Archived from the original on 2 February 2023. Retrieved 1 December 2023.
  5. "Why Annamalai was chosen over senior leaders to lead BJP in Tamil Nadu". The News Minute (in ஆங்கிலம்). 16 July 2021. Archived from the original on 5 July 2023. Retrieved 26 September 2021.
  6. "Meet K Annamalai, the youngest Tamil Nadu BJP president ever". livemint (in ஆங்கிலம்). 8 July 2021. Archived from the original on 5 February 2024.
  7. "Bengaluru DCP 'Singam' Annamalai quits, says IPS officer's death made him 're-examine' life". The News Minute (in ஆங்கிலம்). 25 May 2019. Archived from the original on 26 January 2023. Retrieved 30 August 2021.
  8. "Annamalai Kuppusamy: Age, Biography, Education, Wife, Caste, Net Worth & More". Oneindia (in ஆங்கிலம்). Retrieved 10 January 2022.
  9. "Ace IPS officer Annamalai puts in papers". Deccan Herald (in ஆங்கிலம்). 29 May 2019. Retrieved 1 December 2023.
  10. "Why Tamil Nadu BJP chief Annamalai traded in the quiet life he dreamt of for 'toxic' politics". The Print (in ஆங்கிலம்). 28 February 2023. Retrieved 1 December 2023.
  11. "'Karnataka's Singham' Annamalai to join RSS and start 'shakha' in Coimbatore?". Asianet News Network (in ஆங்கிலம்). Retrieved 30 August 2021.
  12. "Political plunge? No plans, says Annamalai". Deccan Herald (in ஆங்கிலம்). 22 May 2019. Retrieved 30 August 2021.
  13. Upadhyaya, Prakash (18 May 2020). "Ex-IPS officer K Annamalai announces his entry to politics, to contest next election from Tamil Nadu". IBT Times (in ஆங்கிலம்). Retrieved 30 August 2021.
  14. "முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்". இந்து தமிழ். 25 ஆகத்து 2020. Retrieved 1 December 2023.
  15. "Ex-IPS officer Annamalai sweats it out in Aravakurichi". Deccan Herald (in ஆங்கிலம்). 26 March 2021. Retrieved 30 August 2021.
  16. "அரவக்குறிச்சி சட்டசபைத் தேர்தல் முடிவு". ஒன் இந்தியா.
  17. "Ex-IPS officer, 'Singham' Annamalai, is BJP's new chief in Tamil Nadu". Hindustan Times (in ஆங்கிலம்). 8 July 2021. Retrieved 30 August 2021.
  18. "Meet K Annamalai, the youngest Tamil Nadu BJP president ever". Livemint (in ஆங்கிலம்). 8 July 2021. Retrieved 26 October 2021.
  19. "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024 Parliamentary Constituency 20 - COIMBATORE (Tamil Nadu)". இந்தியத் தேர்தல் ஆணையம்.
  20. 20.0 20.1 "2021 Aravakurichi Tamilnadu Elections".
  21. 21.0 21.1 "Detailed results and vote counts for the Coimbatore constituency".
  22. "TN BJP Leader K Annamalai plays a coach in a Kannada film". Times Now (in ஆங்கிலம்). 16 March 2024. Retrieved 1 April 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._அண்ணாமலை&oldid=4252505" இலிருந்து மீள்விக்கப்பட்டது