உள்ளடக்கத்துக்குச் செல்

கேலோபெர்டிக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேலோபெர்டிக்சு
சிவப்பு சுண்டங்கோழி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாசியானிடே
துணைக்குடும்பம்:
பெர்டிசினே
பேரினம்:
கேலோபெர்டிக்சு
மாதிரி இனம்
டெட்டிராவ் இசுபேடிசெசு (சிவப்பு சுண்டங்கோழி)
ஜெமிலின், 1789
சிற்றினம்

உரையினைக் காண்க

கேலோபெர்டிக்சு (Galloperdix) என்பது பெசண்ட் குடும்பமான பாசியானிடேவில் உள்ள மூன்று சிற்றினங்களைக் கொண்ட பறவைகளின் பேரினமாகும். இந்த தரைவாழ் பறவைகள் இந்தியத் துணைக் கண்டத்தில், சிவப்பு சுண்டங்கோழி மற்றும் வண்ணந்தீட்டிய சுண்டங்கோழிகளுடன் இந்தியாவில் உள்ள காடுகள் மற்றும் புதர்க்காடுகளில் காணப்படுகின்றன. மேலும் இலங்கைச் சுண்டங்கோழி இலங்கையின் காடுகளில் உள்ளன. ஆப்பிரிக்காவில் பரவலாகக் காணப்படும் டெர்னிசுடிசு பேரினத்தின் உறுப்பினர்களுடன் "சுண்டங்கோழி" என்ற பொதுவான பெயரை இவை பகிர்ந்து கொள்கின்றன.[1]

முட்டை, வைசுபேடன் அருங்காட்சியக சேகரிப்பில்

வகைப்பாட்டியல்

[தொகு]

கேலோபெர்டிக்சு பேரினமானது 1845ஆம் ஆண்டில் ஆங்கில விலங்கியல் வல்லுநரான எட்வர்ட் ப்ளைத் என்பவரால் சிவப்பு சுண்டங்கோழி என்ற ஒற்றை சிற்றினத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இது மாதிரி இனமாகும்.[2] பேரினப் பெயர் இலத்தீன் வார்த்தையான கேலசு "பண்ணைச் சேவல்" என்பதற்கான பெர்டிக்சுடன் "பார்ட்ரிட்ஜ்" என்று பொருள்படும்.

கேலோபெர்டிக்சு பேரினமானது பாலிபிளெக்ட்ரான் பேரினத்தின் சகோதர குழுவாகும். இவை ஒன்றாக ஹேமடார்டிக்சின் சகோதர இனக்குழுவினை உருவாக்குகின்றன.[3][4]

சிற்றினங்கள்

[தொகு]

கேலோபெர்டிக்சு பேரினமானது மூன்று சிற்றினங்களைக் கொண்டுள்ளது. அவை:[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Pheasants, partridges, francolins". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  2. Edward Blyth (1845). "On the Leiotrichane Birds of the Subhemalayas by B.H. Hodgson, Esq.: with some additions and annotations, — a Synopsis of the Indian Pari, — and of the Indian Fringillidae, By E. Blyth". Journal of the Asiatic Society of Bengal 13, Part 2 (156): 933-944 [936 note]. https://www.biodiversitylibrary.org/page/40126029.  Although the title page is dated 1844, the article was not published until 1845.
  3. Sun, K; Meiklejohn, K. A; Faircloth, B. C; Glenn, T. C; Braun, E. L; Kimball, R. T (2014). "The evolution of peafowl and other taxa with ocelli (eyespots): A phylogenomic approach". Proceedings of the Royal Society B: Biological Sciences 281 (1790): 20140823. doi:10.1098/rspb.2014.0823. http://www.faircloth-lab.org/assets/pdf/keping-et-al-2014-prsb.pdf. 
  4. Kimball, R.T.; Hosner, P.A.; Braun, E.L. (2021). "A phylogenomic supermatrix of Galliformes (Landfowl) reveals biased branch lengths". Molecular Phylogenetics and Evolution 158: 107091. doi:10.1016/j.ympev.2021.107091. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேலோபெர்டிக்சு&oldid=3776898" இலிருந்து மீள்விக்கப்பட்டது