கேர்ள்ஸ் ஜெனரேஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேர்ள்ஸ் ஜெனரேஷன்
கேர்ள்ஸ் ஜெனரேஷன் செப்டம்பர் 2015 இல்
சன்னி, க்வோன் யூ-ரி, இம் யூன்-ஆ, சியோஹூன், தையியோன், சோய் சூ-யூங், டிஃப்பனி யங் மற்றும் கிம் ஹியோ-யியோன்
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்சியோல், தென் கொரியா
இசை வடிவங்கள்
இசைத்துறையில்2007–2017
வெளியீட்டு நிறுவனங்கள்
இணையதளம்Official website
உறுப்பினர்கள்
  • சன்னி
  • க்வோன் யூ-ரி
  • இம் யூன்-ஆ
  • சியோஹூன்
  • தையியோன்
  • சோய் சூ-யூங்
  • டிஃப்பனி யங்
  • கிம் ஹியோ-யியோன்
முன்னாள் உறுப்பினர்கள்ஜெசிகா ஜங்
கொரியப் பெயர்
அங்குல் எழுத்துமுறை소녀시대
Hanja少女時代
சப்பானியப் பெயர்
Kanji 少女時代
ஹிரகனா எழுத்துக்கள் しょうじょじだい

கேர்ள்ஸ் ஜெனரேஷன் (소녀시대)[1] என்பது எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் 2007 முதல் 2017 ஆம் ஆண்டு வரை இயங்கிவந்த தென் கொரிய நாட்டு பெண்கள் இசைக்குழு ஆகும். இந்த குழு 2007 ஆம் ஆண்டு சன்னி, க்வோன் யூ-ரி, இம் யூன்-ஆ, சியோஹூன், தையியோன், ஜெசிகா, சோய் சூ-யூங்,[2][3] டிஃப்பனி யங் மற்றும் கிம் ஹியோ-யியோன் போன்ற ஒன்பது உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. செப்டம்பர் 2014 அன்று ஜெசிகா இக்குழிவில் இருந்து விலகி தற்பொழுது எட்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

இக்குழுவானது தென் கொரியாவில் முக்கிய குழுவில் ஒன்றாகவும் மற்றும் உலகளவில் மிகவும் பிரபலமான கே-பாப் குழுக்களில் ஒன்றாகவும் உள்ளது. இது ஏராளமான பாராட்டுக்களையும் 'தி நேஷன்ஸ் கேர்ள் குரூப்' என்ற மரியாதைக்குரிய புனைப்பெயரையும் தங்கள் சொந்த நாட்டிலே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குழு ஆகஸ்ட் 2007 இல் "இன்ட் தி நியூ வேர்ல்ட்" என்ற தனிப்பாடலுடன் அறிமுகமானது. மற்றும் 2009 ஆம் ஆண்டில் "கீ" என்ற தனிப்பாடலுடன் புகழ் பெற்றது, இது தொடர்ச்சியாக ஒன்பது வாரங்களுக்கு சாதனை படைத்த கேபிஎஸ் தொலைக்காட்சியின் 'மியூசிக் பேங்க்' என்ற நிகழ்ச்சியில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Anggota Taeyeon

Sunny Tiffany Hyoyeon Yuri Sooyoung Yoona Seohyun

Mantan anggota Jessica

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேர்ள்ஸ்_ஜெனரேஷன்&oldid=3658206" இருந்து மீள்விக்கப்பட்டது