கேரோப்பியைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரோப்பியைட்டு (Carobbiite) என்பது KF என்ற |மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பொட்டாசியம் புளோரைடு என்றழைக்கப்படும் இக்கனிமம் இலேசானது ஆகும். மோவின் கடினத்தன்மை அளவுகோலில் இக்கனிமத்திற்கு 2-2.5 என்ற எண் மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது. நிறமற்று கனசதுர வடிவத்தில் இக்கனிமம் படிகமாகிறது [1]. நேபிள்சு மாகாணத்தின் சோம்மா மலைகள், இட்டாலியின் வெசுவியசு மலைகள் போன்ற இடங்களில் கேரோப்பியைட்டு காணப்படுகிறது. 1956 ஆம் ஆண்டு இத்தாலி நிலவியலாளர் குய்டோ கேரோப்பி இக்கனிமத்தைக் கண்டறிந்தார் [2]. சப்பானின் ஒக்கைடோ தீவிலும் இது காணப்படுவதாக கூறப்படுகிறது [3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரோப்பியைட்டு&oldid=2596859" இலிருந்து மீள்விக்கப்பட்டது