கேரின் கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரின் கருவி (Hare's apparatus ) என்பது இராபர்ட் ஹரே எனும் வேதியல் விஞ்ஞானியால் நீர்மங்களின் ஒப்படர்த்திக் காணபதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு எளிய கருவியாகும்.

இக்கருவியில் பலகையிலான ஒரு சிறிய அடிப்பகுதியும் அதில் செங்குத்தாக அமைந்த பலகையுமுள்ளது.ஒரு யு (U tube ) வடிவக் குழாய் தலைகீழாக செங்குத்தான பலகையில் பொருத்தப்பட்டுள்ளது.யு வடிவக் குழாயின் உச்சிப் பகுதியில் ஒரு பக்கக் குழாய் உள்ளது.இந்தப் பக்கக் குழாயில் ரப்பர் குழாய் ஒன்று பொருத்தப்பட்டள்ளது.ரப்பபர் குழாயில் ஓர் இடுக்கி உள்ளது.இடுக்கியைப் பயன்படுத்தி குழாயில் நீர்மத்தின் உயரத்தினை நிலைநிறுத்த முடியும்.இரு கரங்களுக்குமிடையே ஒர் அளவுகோல் பொருத்தப்பட்டுள்ளது. யு வடிவக் குழாயின் திறந்த கரங்கள் சிறு முகவையிலுள்ள நீர்மங்களில் மூழ்கி இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன.

செயல்முறை[தொகு]

ஒரு முகவையில் ஒப்படர்த்திக் காணவேண்டிய நீர்மத்தினையும் அடுத்த முகவையில் நன்நீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.இடுக்கியைத் தளர்த்தி ரப்பர் குழாய் வழியாக சிறிது வளியினை அகற்றும் போது,யு வடிவக் குழாயின் இரு கரங்களிலும் நீர்மங்கள் மேலேறும்.இடுக்கியை பயன்படுத்தி நீர்மத் தம்பங்களை நிலைபெறச் செய்து கொள்ளவேண்டும்.குழாயில் நீர்மத்தின் உயரத்தினையும் நண்ணீரின் உயரத்தினையும் கவனமாக் குறித்துக் கொள்ள வேண்டும்.இந்த உயரங்கள் முறையே H1,H2 என்போம்.இவைகளின் அடர்த்தி d1 ,d2 என்றும் கொள்வோம்.வளிமண்டல அழுத்தம் P எற்றும் இருந்தால்,இரு நீர்மத் தம்பங்களின் மேலுள்ள காற்றின் அழுத்தம் ஒன்றுபோல் இருப்பதால்,நீர்மத்தின் மேலுள்ள வளி அழுத்தம் P- H1d1g க்குச் சமம்.இது போல் தண்ணீரின் மேலுள்ள கற்றின் அழுத்தம் P - H2d2g ஆகும்.இவ்விரண்டும் ஒரே அளவுகளாகும். எனவே,

P -H1 d1 g = P - H2 d2 g. எனவே

H1 d1 =H2 d2.

d1/d2 = H2/H1

ஒப்படர்த்தி =நீரின் உயரம்\நீர்மத்தின் உயரம்.

பலமுறை இச்சோதனையினைச் செய்து சராசரி மதிப்பினைக் காணமுடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரின்_கருவி&oldid=3596775" இலிருந்து மீள்விக்கப்பட்டது