கேரள மாநிலப் பானங்கள் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள மாநிலப் பானங்கள் கழகம்
வகைஅரசு பொதுக் கழகம்
நிறுவுகைபிப்ரவரி 23, 1984
தலைமையகம்திருவனந்தபுரம், கேரளம்
சேவை வழங்கும் பகுதிகேரள மாநிலம்
தொழில்துறைசில்லரை மற்றும் மொத்த மது விற்பனை (இந்திய நிர்மாண வெளிநாட்டு மதுபானம்)
இணையத்தளம்www.ksbc.kerala.gov.in

வரையறுக்கப்பட்ட கேரள மாநிலப் பானங்கள் கழகம் (Kerala State Beverages Corporation Ltd-BEVCO) கேரள அரசிற்கு சொந்தமான பொதுவுடமைத் தொழில் நிறுவனமாகும். இது கேரள மாநிலத்தில் சில்லரையாகவும் மொத்தமாகவும் மது விற்பனை செய்யும் தனிப்பட்ட அதிகாரம் கொண்டுள்ளது. கேரள மாநிலம் முழுவதும் இந்திய தயாரிப்ப்பான வெளிநாட்டு மதுபானங்களின் சில்லரை விற்பனையையும் பீர் வாணிபத்தையும் கட்டுப்படுத்துகிறது. கேரள மாநிலத்தில் அதிக இலாபந்தரும் பொது நிறுவனங்களில் இதுவும் ஒன்று[1]. ஓணம், கிறித்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகையின்போது விற்பனையின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. சாலக்குடியில் பதிவான விற்பனையளவு மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது[2] சாலக்குடியின் மது விற்பனை நாளொன்றுக்கு சாராசரியாக 5-7 இலட்ச ரூபாயாக உள்ளது.[3]

வரலாறு[தொகு]

நீதியக ஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் 1984-ல் அப்காரி சட்ட திருத்த வாயிலாக சாராயம் தயாரிப்பிற்கும் வினியோகத்திற்கும் ஒரு பொதுக்கழகம் ஏற்படுத்தப் பட்டது. இக்கழகம் குடிக்கும் சாராயத்தில் மற்றுள்ள பொருட்களைச் சேர்த்து, குப்பியில் அடைத்து, முத்திரையிட்டு விற்பனை மற்றும் வினியோகம் செய்கிறது. மேலும் இக்கழகத்திற்கு இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களை விற்பதற்கான அதிகாரமும் தரப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. A REVIEW OF PUBLIC ENTERPRISES IN KERALA 2004-2005, Bureau of Public Enterprises, Government of Kerala
  2. "'Kerala sells alcohol worth Rs 34 crore in a day'". Deccan Chronicle. 2009-09-01. Archived from the original on 2010-11-19. பார்க்கப்பட்ட நாள் 2010-10-04.
  3. "'Kerala tops in rum sales '". Business Standard. 2010-03-29. பார்க்கப்பட்ட நாள் 2010-10-04.

வெளியிணைப்புகள்[தொகு]