கேரளா காங்கிரஸ் கட்சி
கேரள காங்கிரசு கட்சி | |
---|---|
![]() | |
சுருக்கக்குறி | கே. கா. க |
தலைவர் | பி. ஜே. ஜோசப்[1] |
நிறுவனர் |
|
மக்களவைத் தலைவர் | கே. பிரான்சிசு ஜார்ஜ் |
தொடக்கம் | 9 அக்டோபர் 1964[2] |
தலைமையகம் | மாநில கமிட்டி அலுவலகம், கோட்டயம், கேரளா |
மாணவர் அமைப்பு | கேரள மாணவர்கள் காங்கிரஸ் |
இளைஞர் அமைப்பு | கேரள இளைஞர் முண்ணனி |
பெண்கள் அமைப்பு | கேரள வனிதா காங்கிரஸ் |
தொழிலாளர் அமைப்பு | கேரள தொழிலாளர்கள் ஒன்றிய காங்கிரஸ் |
கொள்கை | தாராளவாதம் |
நிறங்கள் | வெள்ளை மற்றும் சிவப்பு[3] |
இ.தே.ஆ நிலை | மாநில கட்சி |
கூட்டணி |
|
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (கேரள சட்டமன்றம்) | 2 / 140 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இந்தியா அரசியல் |
கேரள காங்கிரசு (Kerala Congress) என்பது கேரளா கோட்டயத்தில் 9 அக்டோபர் 1964 அன்று கே. எம். ஜார்ஜ் தலைமையிலான முன்னாள் இந்திய தேசிய காங்கிரசு தலைவர்களால் நிறுவப்பட்ட ஓர் இந்திய அரசியல் கட்சியாகும்.[4] இந்தக் கட்சி, கேரளாவில் முதன்மையாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு வருகிறது.[5][6] ஆரம்பத்தில் இதனை சிரிய கிறிஸ்தவர்கள், தெற்கு கேரளாவின் நாயர் சமூகத்தினர் ஆதரித்தனர்.[7]
கேரள காங்கிரசு, ஆர். சங்கர் தலைமையிலான காங்கிரசு அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பி. டி. சாக்கோவின் ராஜினாமாவும், பின்னர் அவரின் மறைவுக்குப் பின்னர் தொடங்கப்பட்டது.[5][8] கேரள சட்டமன்றத்தின் காங்கிரசின் பதினைந்து அதிருப்தி உறுப்பினர்கள் சங்கர் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தனர்.[5] கே. எம். ஜார்ஜ், இரா. பாலகிருஷ்ண பிள்ளை, பிற தலைவர்கள், சிரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபை மற்றும் நாயர் சமூக சேவை தலைவர் மன்னத்து பத்மநாபன் ஆகியோரின் ஆதரவுடன், 9 அக்டோபர் 1964 அன்று கோட்டயம் திருநாக்கர மைதானத்தில் "கேரள காங்கிரசு" கட்சியினைத் தொடங்கினர்.[4][5][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PJ Joseph elected Kerala Congress chairman". 28 April 2021.
- ↑ Fic, Victor M. (1970). "Split of Political Parties". Kerala: Rise of Communist Power, 1937-1969. Nachiketa Publications. pp. 184–85.
- ↑ "unrecognized political parties and the symbols allotted to them when they were recognized parties". 3 June 2021 இம் மூலத்தில் இருந்து 3 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210603024808/http://www.ceo.kerala.gov.in/pdf/SYMBOLS/ElectionSymbols.pdf.
- ↑ 4.0 4.1 Fic, Victor M. (1970). "Split of Political Parties". Kerala: Rise of Communist Power, 1937-1969. Nachiketa Publications. pp. 184–85.Fic, Victor M. (1970).
- ↑ 5.0 5.1 5.2 5.3 Philip, Shaju (23 October 2020). "The Long History of Kerala Congress Splits and Factions, from Mani to Son". The Indian Express. https://indianexpress.com/article/explained/the-long-history-of-kerala-congress-splits-factions-from-mani-to-son-6843627/.
- ↑ Jacob, George (9 October 2014). "50 years on, Kerala Congress Tries to Redefine Itself". The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/50-years-on-kerala-congress-tries-to-redefine-itself/article6482669.ece.
- ↑ Kochukudy, Anand (18 April 2023). "Modi image, Syrian Christian base can help BJP in Kerala. But leadership crisis a spoilsport". The Print. https://theprint.in/opinion/kerala-konnect/modi-image-syrian-christian-base-can-help-bjp-in-kerala-but-leadership-crisis-a-spoilsport/1524885/.Kochukudy, Anand (18 April 2023).
- ↑ 8.0 8.1 "How Kerala Congress Mastered the Art of Split and Rise". Malayala Manorama. 10 April 2019. https://www.onmanorama.com/news/kerala/2019/06/17/kerala-congress-organic-party-split-growth.html.