உள்ளடக்கத்துக்குச் செல்

கேரளபுரம் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மகாதேவர் கோவில்
Mahadeva Temple, Keralapuram
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:கோயில் தெரு, கேரளபுரம், கல்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பத்மநாபபுரம்
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி
கோயில் தகவல்
மூலவர்:மகாதேவர்
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கேரளபுரம் மகாதேவர் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் கேரளபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பிரசிபெற்ற சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

அமைவிடம்

[தொகு]

கேரளபுரம் மகாதேவர் திருக்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் கேரளபுரம் என்னும் அழகான ஊரில் அமைந்துள்ளது.

தக்கலை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருக்கோயில் உள்ளது. தக்கலை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ மூலமாக திருக்கோவிலுக்கு செல்லலாம்.

அருகில் உள்ள இரயில் நிலையம் இரணியல் இரயில் நிலையம் சுமார் நான்கு கி மீ தொலைவில் உள்ளது.

அருகில் உள்ள விமானநிலையம் திருவனந்தபுரம் விமானநிலையம் சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது.

கோயில் சிறப்பு

[தொகு]

கேரளபுரம் மகாதேவர் திருக்கோயில் கேரள கட்டிடகலையும் தமிழக கட்டிட கலையும் இணைந்து காணப்படுகிறது.

பன்னிரண்டு சிவாலயங்களுடைய பாதையில் அமைந்திருந்தாலும் சிவாலயங்களில் இந்த கோயில் வராது.

நவராத்திரி பூஜைக்காக சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலிலிருந்தும் குமாரகோயில் முருகன் கோவிலிலிருந்தும் சுவாமி பவனியும், பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து வாளும் திருவனந்தபுரத்திற்கு வருடா வருடம் செல்வது வழக்கம். யானையோடு சுவாமி பவனி கேரளபுரம் மகாதேவர் திருக்கோவில் வந்து செல்வது தனிச் சிறப்பு.

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் மகாதேவர் சன்னதியும், அதிசயவநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன.

அனைத்து பிரதோஷ நாட்களிலும் சதுர்த்தி நாட்களிலும் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

மாசி மாதம் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது, 9 வது நாள் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறுகிறது,பத்தாம் திருவிழா அன்று சுவாமி பவனியாக திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம் எடுத்து செல்லபடுகிறார் அங்கு ஆறாட்டு நடைபெறுகிறது.ஆறாட்டுக்கு பின் மீண்டும் கேரளபுரம் திரும்புகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.