கேரளக் காவல்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கேரளக் காவல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கேரள மாநிலக் காவல்துறை
Kerala State Police
കേരള പോലീസ്
சின்னம்
சின்னம்
கொடி
சுருக்கம்KP
குறிக்கோள்മൃദു ഭാവെ ദൃഢ കൃത്യേ, "மென்மையான மற்றும் உறுதியான"
""இயல்பில் மென்மை, செயலில் உறுதி"
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்நவம்பர் 1, 1956
ஆண்டு வரவு செலவு திட்டம்4,406 கோடி (US$550 மில்லியன்) (2021–22 est.)[1]
அதிகார வரம்பு அமைப்பு
செயல்பாட்டு அதிகார வரம்புகேரளம், IN
கேரளக் காவல்துறையின் அதிகார வரம்பு
அளவு15,008.13 sq mi (38,870.88 km2)
மக்கள் தொகை34,630,192
சட்ட அதிகார வரம்புAs per operations jurisdiction
ஆட்சிக் குழுகேரள அரசு
Constituting instrument
  • கேரளக் காவல்துறைச் சட்டம், 2011
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
Overviewed byஉட்துறை, கேரள அரசு
தலைமையகம்வழுத்தக்காடு, திருவனந்தபுரம், கேரளம் – 695010

Mகேரளக் காவல்துறையின் அதிகார வரம்பு.
காவல்துறை அதிகாரிகள்62,618 (அனுமதிக்கப்பட்டது) [2]
57,819 (நடப்பில்)
அமைச்சர்
துறை நிருவாகி
Child agency
  • திருவனந்தபுரம் நகரக் காவல்துறை
    கொச்சி நகரக் காவல்துறை
    திரிசூர் நகரக் காவல்துறை
    கொல்லம் நகரக் காவல்துறை
அலகுகள்
List of units
  • சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (L&O)
  • குற்றப்பிரிவு (Crime Branch)
  • மாநில புலனாய்வு பிரிவு (SSB)
  • பயிற்சி
  • ஆயுதமேந்திய போலீஸ் பட்டாலியன் (Armed Police)
  • கடலோர பாதுகாப்பு பிரிவு
  • மாநில குற்றப் பதிவுப் பணியகம்
  • சிவில் உரிமைகள் பாதுகாப்பு
  • தலைமையகம் (நிர்வாகம்)
சிறப்புப் பிரிவுகள்s
List of units
  • நெடுஞ்சாலை போலீஸ்
  • சுற்றுலா போலீஸ்
  • போக்குவரத்து அமலாக்கம் பிரிவு
  • ரயில்வே போலீஸ்
  • குதிரை போலீஸ்
  • கடலோர போலீஸ்
  • தடயவியல் பிரிவு
  • பெண்கள் செல்
  • பிங்க் காவல் ரோந்து
  • K9 அணி
  • உயர் தொழில்நுட்ப குற்றப்பிரிவு
  • பயங்கரவாத எதிர்ப்புப் படை
  • சிறப்பு செயல்பாட்டுக் குழு
  • தண்டர்போல்ட்ஸ் (கமாண்டோ பிரிவு)
  • மாநில போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப் படை
வசதிகள்
காவல் நிலையம்s564 (as of 2021)[2]
Police vehiclesForce Gurkha
Mahindra Bolero
Tata Sumo
Mahindra TUV300
Toyota Innova
Chevrolet Tavera
Mahindra Thar
Swift Dzire
BoatsSpeed boats
Dogs82 (41 Sniffer Dogs)
Horses25
Notables
Programme
Significant Operation
  • Operation P-Hunt
இணையத்தளம்
keralapolice.gov.in

கேரள மாநிலக் காவல்துறை (Kerala Police) என்பது கேரள மாநிலத்தின் சட்ட அமலாக்க முகமை ஆகும். கேரளக் காவல், மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. காவல் பயிற்சிக் கல்லூரி 20-ம் நூற்றாண்டின் மத்தியில் திருவிதாங்கூர் மன்னரால் தோற்றுவிக்கப்பட்டது. 2004-ல் திருச்சூரில் கேரளக் காவல் பயிற்சிக்கழகம் உருவாக்கப்பட்டது. மிருது பாவெ, திரட கிருத்ய என்பது வட மொழியில் இக்காவல்படையின் குறிக்கோள் பல்லவியாகும், அதாவது மிதமான குணம், திடமான செயல். கேரள காவல்த் துறை 2006-ல் 21-ம் நூற்றாண்டில் சமூகம் நேரிடும் பிரச்சனைகளுக்கேற்ப நவீனப்படுத்தப்பட்டது.

வடிவமைப்பு[தொகு]

கேரள காவலகம் கேரள அரசின் உள்விவகாரத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருவதாகும். தற்போதைய உள்விவகாரத் துறைக்கான அமைச்சர் திரு பிணராயி விஜயன் ஆவார். காவல் துறை மாநில காவல் தளபதியினால் தலைமைத்தாங்கப் படுகிறது. லோகநாத் பெகேரா கேரளக் காவலின் தற்போதைய மாநில காவல் தளபதி ஆவார்.

சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதே மாநிலப் படைக்கு தரப்பட்டுள்ள முக்கியப் பணியாகும். இதற்காக, மாநிலம் இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, (வட மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம்) ஒவ்வொன்றும் ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜி) தலைமையில். ஒவ்வொரு மண்டலமும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு காவல் துணை பொது ஆய்வாளர் (டிஐஜி) தலைமை தாங்குகிறார். கண்ணனூர் கோட்டமும் திருச்சூர் கோட்டமும் வடக்கு மண்டலத்தின் கீழும், அதேபோல் கொச்சி கோட்டமும் திருவனந்தபுரம் கோட்டமும் தென் மண்டலத்தின் கீழும் வருகிறது. கேரளத்தின் ஐந்து மாநகரங்களுக்காக மாநகர காவல் ஆணையரின் தலைமையில் ஐந்து ஆணையகங்கள் (Commissionerate) உள்ளன. ஐந்து ஆணையகங்கள் திருவனந்தபுரம் மாநகர காவல், கொச்சி மாநகர காவல், கோழிக்கோடு மாநகர காவல், கொல்லம் மாநகர காவல் மற்றும் திருச்சூர் மாநகர காவல் ஆகியவற்றிக்காக காணப்படுகிறது.

கேரள காவலகத்திற்கு சொந்தமான ஒரு சிற்றுந்து

பதவித் தரம்[தொகு]

கேரளக் காவல் படையில் பயன்படுத்தப்படும் பதவிப் பெயர்கள் கீழே;

உயர் அதிகாரிகள்

துணை அதிகாரிகள்

  • காவல் ஆய்வாளர் (IP அல்லது CI)
  • காவல் துணை ஆய்வாளர் (SI)
  • காவல் உதவி துணை ஆய்வாளர் (ASI)
  • முதிர்ந்த குடிமைக் காவல் அலுவலர் (தலைமை காவலர்-HC)
  • குடிமைக் காவல் அலுவலர் (காவலர்-PC)

சட்டமும் கேரளக் காவலும்[தொகு]

கேரளக் காவல் தொடர்பான சட்டம், கேரளக் காவல் சட்டம்-2011, எனும் குறுந்தலைப்பில் அறியப்படுகிறது.

இந்த சட்டத்தின் நீண்ட தலைப்பும் முன்னுரையும் சட்டத்தின் முக்கியத் துவத்தையும், அதன் நோக்கத்தையும் எடுத்துரைக்கிறது.

முன்னுரை[தொகு]

இந்திய அரசியல் அமைப்பின் படி நாட்டின் நேர்மை மற்றும் பாதுகாப்பை காத்திட, மற்றும் முறைப்படி வெளிப்படையாக சட்டத்தின் விதிகளை உறுதிசெய்திட, மற்றும் அனைத்து நபர்களின் உயிர், உடைமை, தன்னிச்சை, மதிப்பு, மற்றும் மனித உரிமைக்கு தகுந்த கருதல் தந்திட, ஒரு தொழிற்சார், பயிற்சி பெற்ற, திறமையான, ஒழுங்குற்ற, அர்ப்பணிப்புள்ள காவல் முறையை விரைந்து தருவதாக இது 'இருப்பதனால், மற்றும், போதுமான சட்டபூர்வ செயல்திறன்கள் மற்றும் பொருப்புகள் தந்து செயல்திறன்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு தகுதியுற்றவர்களாக காவல்துறையை உருவாக்குவதற்கு இது தேவையாக இருப்பதனால், மற்றும், நவீன ஜனநாயக சமூகத்துடன் பொருந்தி செயல்படுவதும், பொது ஒற்றுமை மற்றும் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவதுமான காவல் முறைக்கு இது தேவையாக இருப்பதனால், மற்றும், காவல்துறையினருக்கான செயல்திறன்கள் தவறாக பயன்படுத்தப்பட வில்லை என்றும் காவல்துறை செயல்பாடுகள் சட்டபூர்வமானதும் முறையான கட்டுபாடுகளுக்கு உட்பட்டது என்றும் உறுதிப்படுத்த, கட்டாயப் படுத்துவதாக இது இருப்பதனால், இப்போது, கேரள மாநிலத்தின் காவல் படையின் உருவாக்கம், கட்டுப்படுத்தல், செயல்திறன்கள், கடமைகள் தொடர்பான சட்டத்தை ஒருமைபடுத்தவும், திருத்தங்கள் கொண்டுவரவும் இது கட்டாயம் என்பதால் இது இந்தியாவின் அறுபத்தி-ஒன்றாவது குடியரசு ஆண்டில் பின் வருமாறு சட்டமாக்கப்பட்டு இருக்கிறது.

காவல்துறையின் பொதுவான கடமைகள்[தொகு]

இந்திய அரசியல் அமைப்பிற்கும் அதன் கீழ் உருவாக்கப் பட்டுள்ள சட்டங்களுக்கும் உட்பட்டு ஜனங்களுக்கு இடையில் செயல்படும் சேவை பரிவு என்ற நிலைக்கு, அமைதி மற்றும் ஒழுங்கு,தேசத்தின் ஒற்றுமை, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை காத்தல் ஆகியவை உறுதி செய்யப் படுவதின் வாயிலாக, சட்டத்தின் கீழ் கிடைக்கும் தன்னிச்சைகள் மற்றும் உரிமைகள் அகியன அனைத்து நபர்களும் அனுபவித்தலை உறுதிப் படுத்துவதற்கு, காவல்துறை, சட்டத்துடன் இனங்கி செயல்பட வேண்டும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Kerala Budget Analysis 2021-2022" (PDF). prsindia.org. 2021. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 https://bprd.nic.in/WriteReadData/News/DoPO-21f%20%20.pdf பரணிடப்பட்டது 2023-03-05 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளக்_காவல்துறை&oldid=3789052" இலிருந்து மீள்விக்கப்பட்டது