கேரன்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேரன்டான் துறைமுகம்

கேரன்டான் (Carentan) பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரம். பிரான்சு வடமேற்கு பகுதியில் நார்மாண்டி பிரதேசத்தில் உள்ள கோடெண்டின் தீபகற்பத்தில் அமைந்துள்ளது. சுமார் 6000 மக்கள் தொகை கொண்ட இந்நகரம் பிரான்சின் கம்யூன் வகை நிர்வாகப் பிரிவாகவும் உள்ளது. டூவ் ஆற்று முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ள இத்துறைமுக நகரில் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கப் படைகளுக்கும் நாசி ஜெர்மனியின் படைகளுக்கும் கடும் சண்டை நடந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரன்டான்&oldid=1358626" இருந்து மீள்விக்கப்பட்டது