கேரட் சாறு
கேரட் சாறு அல்லது மஞ்சள் முள்ளங்கிச் சாறு (Carrot juice) என்பது மஞ்சள் முள்ளங்கியில் இருந்து தயாரிக்கப்படும் சாறாகும் .
கண்ணோட்டம்
[தொகு]கேரட் சாற்றில் உயிர்ச்சத்து ஏ வின் ஆதாரமான β- கரற்றீன் அதிகமாக உள்ளது, ஆனால் இது இலைக்காடி போன்ற உயிர்ச்சத்து பி மற்றும் கால்சியம், செப்பு, மக்னீசியம், பொட்டாசியம், பாசுபரசு மற்றும் இரும்பு உள்ளிட்ட பல தாதுக்களிலும் அதிகமாக உள்ளது. ஒரு இறாத்தல் (454கிராம்) கேரட்டில் சுமார் 236 மில்லி சாறு பெறலாம்.[சான்று தேவை], இது ஆப்பிள் மற்றும் தோடம்பழம் போன்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த மகசூல் கொண்டது. கேரட் சாற்றில் இருந்து கூழ் பிரிப்பது கடினமானதாகும்.
பீட்டா-கரற்றீன் அதிகமுள்ள பல தயாரிப்புகளைப் போலவே, இது தற்காலிக கரோட்டீனோடெர்மாவை (மஞ்சள் தோல்) ஏற்படுத்தலாம், இது ஒரு தீங்கற்ற தோல் நிலையாகும், இதன் விளைவாக மேற்புறத்திற்கு ஆரஞ்சு-மஞ்சள் நிறம் உருவாகலாம். [1]
கேரட் சாறு செறிவூட்டப்பட்ட கேரட்டின் தனித்துவமான இனிப்புச் சுவை கொண்டது. பல சாறுகளைப் போலல்லாமல், இது ஒளிபுகாது. இது பெரும்பாலும் சத்துணவு பானமாக உட்கொள்ளப்படுகிறது. கேரட்டைக் கொண்டு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சூப்கள் மற்றும் பழச்சாறுகள் தயாரிக்கப்படுகிறது.
ஊட்டச்சத்து தகவல்
[தொகு]1 கப் கேரட் சாறு (236 மில்லி) அமெரிக்க ஐக்கிய நாடுகள் வேளாண்மைத் துறையின் தகவலின் படி பின்வரும் ஊட்டச்சத்து தகவல்களைக் கொண்டுள்ளது:[2]
- கலோரிகள்: 95
- கொழுப்பு: 0.35
- கார்போஹைட்ரேட்டுகள்: 21.90
- நார்ச்சத்து: 1.9
- புரதம்: 2.24
- கொலஸ்டிரால்: 0.010
மேற்கோள்
[தொகு]- ↑ Kristin Mortensen. "Toxicity of Carrot Juice". Livestrong.com. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.
- ↑ "NDL/FNIC Food Composition Database Home Page". usda.gov. Archived from the original on 3 March 2015. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Beta Carotene, Mayo Clinic