கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு
கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு | |
---|---|
வகை | இலாப நோக்கற்ற அமைப்பு |
Purpose/focus | மதிப்பீடு வாரியம் - ஆங்கிலத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் தகைமை பெற |
தலைமையகம் | கேம்பிரிட்ச், UK |
Region served | உலகளவில் - வருடத்திற்கு 130 நிலையங்களில் 4 மில்லியனுக்கு மேற்பட்டோர் |
உறுப்புரிமை | 40,000+ |
Parent organization | கேம்பிரிச்சு மதிப்பீடு |
வலைத்தளம் | www |
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக இ.எஸ்.ஓ.எல். தேர்வு அல்லது கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு (Cambridge English Language Assessment) என்பது ஆங்கில மொழியை தாய் மொழியாக பெற்றிராமல் பேசுபவர்களுக்கும், ஆங்கில கற்பித்தல் தரத்திற்காகவும் ஆங்கில மொழியில் தேர்வு வழங்கும் ஓர் இலாப நோக்கற்ற மதிப்பீடாகும்.[1]
மேலோட்டம்
[தொகு]கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு முன்பு கேம்பிரிச்சு இ.எஸ்.ஓ.எல். (Cambridge ESOL) என அறியப்பட்டது. இ.எஸ்.ஓ.எல். (ESOL) என்பதன் அர்த்தம் "ஏனைய மொழிகளைப் பேசுபவர்களுக்காக ஆங்கிலம்" ("English for Speakers of Other Languages") என்பதாகும்.
கேம்பிரிச்சு ஆங்கிலத் தேர்வினை ஒவ்வொரு வருடமும் 130 நாடுகளில் இருந்கு நான்கு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர். இத் தேர்வுகள் பொது ஆங்கிலம், வணிப ஆங்கிலம், கல்வி நோக்கத்திற்கான ஆங்கிலம், இளம் பயிலுனர்களுக்கான ஆங்கிலம் ஆகிய வகைகளில் அமைகின்றன.
தனிப்பட்ட தேர்வுகள்
[தொகு]பொது ஆங்கிலம்
[தொகு]- கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆரம்ப ஆங்கிலத் தேர்வு - (Key English Test, KET)
- கேம்பிரிச்சு ஆங்கிலம்: முன்னோட்ட ஆங்கிலத் தேர்வு - (Preliminary English Test, PET)
- கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் முதல் சான்றிதழ் - (Certificate in English, FCE)
- கேம்பிரிச்சு ஆங்கிலம்: மேம்பட்ட ஆங்கிலச் சான்றிதழ் - Certificate in Advanced English, CAE)
- கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் திறமையான சான்றிதழ் (Certificate of Proficiency in English, CPE)
பாடசாலைக்கான ஆங்கிலம்
[தொகு]- கேம்பிரிச்சு ஆங்கிலம்: பாடசாலைக்கான ஆரம்ப ஆங்கிலத் தேர்வு - (KET for Schools)
- கேம்பிரிச்சு ஆங்கிலம்: பாடசாலைக்கான முன்னோட்டமான ஆங்கிலத் தேர்வு - (PET for Schools)
- கேம்பிரிச்சு ஆங்கிலம்: பாடசாலைக்கான ஆங்கிலத்தில் முதல் சான்றிதழ் - (FCE for Schools)
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ Our Organisation, It is part of the University of Cambridge, UK.