உள்ளடக்கத்துக்குச் செல்

கேமு கலானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேமு கலானி
1983இல் இந்திய அரசால் வெளியிடப்பட்ட ஓர் அஞ்சல் முத்திரையில் கேமு கலானி
பிறப்பு(1923-03-23)23 மார்ச்சு 1923
சுக்கூர் (சிந்த்),
மும்பை மாகாணம்,
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
(தற்போதைய:
சுக்கூர்,
சிந்து மாகாணம்,
பாக்கித்தான்)
இறப்பு21 சனவரி 1943(1943-01-21) (அகவை 19)
பணிபுரட்சிகர வீரர், சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல் ஆர்வலர்
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்

கேமு கலானி ( Hemu Kalani) (1923 மார்ச் 23 - 1943 சனவரி 21) இவர் இந்தியச் சுதந்திர இயக்கத்தின் போது சிந்தி புரட்சிகர மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தியாகம் செய்த இளைய புரட்சியாளர்களில் ஒருவரான இவர், தனது 20 வது பிறந்தநாளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் 19 வயதாக இருந்தபோது ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். இவர் அகில இந்திய மாணவர் கூட்டமைப்புடன் இணைந்த ஒரு மாணவர் அமைப்பான சுய இராச்சிய சேனையின் தலைவராக இருந்தார், [1]

ஆரம்பக் கால வாழ்க்கை

[தொகு]

இவர் 1923 மார்ச் 1923 அன்று சிந்து (இப்போது பாக்கித்தான் ) சுக்கூர் என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் பெசுமல் கலானியும், ஜெதி பாய் ஆகியோராவர். ஓர் இளைஞனாக இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணிப்பதற்காகப் பிரச்சாரம் செய்தார். மேலும் சுதேசி பொருட்களைப் பயன்படுத்த மக்களை வற்புறுத்த முயன்றார். புரட்சிகர நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்ட இவர், பிரித்தானியரை விரட்டியடிக்கும் நோக்கத்துடன் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கத் தொடங்கினார். இவர் பிரித்தானிய இராச்சியத்திற்கு எதிரான தாக்குதல்களையும் அவர்களுக்குச் சொந்தமான வாகனங்களை எரிப்பதிலும் ஈடுபட்டிருந்தார்.

சுதந்திரப் போராட்டம்

[தொகு]
கேமு கலானியின் இறுதிச் சடங்கு, 21 சனவரி 1943

1942 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது, மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இவர் சேர்ந்தார். சிந்தில் இயக்கத்திற்கு ஆதரவு பிரித்தானிய ஆட்சியாளர்கள் ஐரோப்பியப் படைவீரர்களைக் கொண்ட சிறப்புத் துருப்புக்களை அனுப்ப வேண்டியிருந்தது. இந்தத் துருப்புக்களின் இரயிலும், அவற்றின் பொருட்கள் தனது நகரத்தின் வழியாகச் செல்லும் என்று இவர் கண்டுபிடித்தார். இரயில் பாதையிலிருந்து உலோகப் பட்டிகளை அகற்றுவதன் மூலம் அதைத் தடம் புரள முடிவு செய்தார். இவருக்கோ அல்லது இவருடைய சகாக்களுக்கோ தேவையான கருவிகள் இல்லை. எனவே இதற்காக ஒரு கயிற்றைப் பயன்படுத்த வேண்டியிருந்தது [2] .

நாசவேலை முடிவதற்கு முன்னர் இவர்கள் பிரித்தானியத் துருப்புக்களால் கண்டுபிடிக்கப்பட்டனர். இவர் பிடிபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இவரது சக சதிகாரர்களின் பெயர்களைக் கூறச் சித்திரவதை செய்யப்பட்டார். இவர் எந்தத் தகவலையும் வெளியிட மறுத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். சிந்து மக்கள் ஆளுநரிடம் கருணையைக் கோரினர். ஆனால் அதை வழங்குவதற்கான நிபந்தனை என்னவென்றால், இவரது இணைச் சதிகாரர்களின் அடையாளத்தை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். இவர் மீண்டும் தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார். இவர் சனவரி 21, 1943 அன்று தூக்கிலிடப்பட்டார் [3] .

மரண தண்டனை வழங்கப்பட்டதில் இவர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக, இவர் தண்டனைக்கும், மரணதண்டனைக்கும் இடையேயான நேரத்தில் இவர் ஒரு நல்ல உடல் எடையைப் பெற்றார். மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட நாளில், இவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். பகவத் கீதையின் நகலை கையில் வைத்துக் கொண்டு தூக்கு மேடைக்குச் சென்றார், முழு வழியிலும் புன்னகைத்துக் கொண்டே இருந்தார்.

மேலும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Archived copy". Archived from the original on 24 January 2016. பார்க்கப்பட்ட நாள் 23 February 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. https://eparlib.nic.in/bitstream/123456789/58672/1/Eminent_Parliamentarians_Series_Shahed_Hemu_Kalani.pdf
  3. https://eparlib.nic.in/bitstream/123456789/58672/1/Eminent_Parliamentarians_Series_Shahed_Hemu_Kalani.pdf

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கேமு கலானி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமு_கலானி&oldid=3832320" இலிருந்து மீள்விக்கப்பட்டது