கேமலதா சௌத்ரி
கேமலதா சௌத்ரி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், உத்தரப் பிரதேசம் | |
| பதவியில் மார்ச்சு 2012 – மார்ச்சு 2017 | |
| முன்னையவர் | கௌகப் ஹமீத் கான் |
| பின்னவர் | யோகேசு தாமா |
| தொகுதி | பாகுபத் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 30 திசம்பர் 1969[1] மீரட் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா[1] |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பகுஜன் சமாஜ் கட்சி[1] |
| துணைவர் | பிரசாந்த் சௌத்ரி (கணவர்)[1] |
| பிள்ளைகள் | 2 மகன்கள் & 1 மகள் |
| பெற்றோர் | இந்திரதேவ் சிங் (தந்தை)[1] |
| முன்னாள் மாணவர் | சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம்[2] |
| தொழில் | அரசியல்வாதி |
கேமலதா சௌத்ரி (Hemlata Chaudhary)(பிறப்பு 30 திசம்பர் 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் 16ஆவது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் பாகுபத் சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[3][4]
இளமையும் கல்வியும்
[தொகு]கேமலதா சௌத்ரி உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் குர்ஜார் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை இந்தர் தியோ சிங் உத்தரப் பிரதேச காவல்துறையில் துணை கண்காணிப்பாளராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இவர் சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் பயின்றார். மேலும் இளங்கலை கல்வியியல், முதுகலை கலை பட்டம் பெற்றுள்ளார். அரசியலில் சேருவதற்கு முன்பு கேமலதா வரலாற்று ஆசிரியராக இருந்தார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]கேமலதா சௌத்ரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரசாந்த் சௌத்ரியின் மனைவி ஆவார். இவர் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் பாகுபத் சட்டமன்றத் தொகுதிக்கு 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
| # | முதல் | வரை | பதவி |
|---|---|---|---|
| 01 | மார்ச் 2012 | மார்ச் 2017 | உறுப்பினர், 16வது சட்டமன்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Member Profile". Uttar Pradesh Legislative Assembly, website. http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/52.pdf. பார்த்த நாள்: 14 October 2015.
- ↑ "Candidate affidavit". My neta.info. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=1793. பார்த்த நாள்: 14 October 2015.
- ↑ "2012 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. பார்த்த நாள்: 14 October 2015.
- ↑ "All MLAs from constituency". elections.in. http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/baghpat.html. பார்த்த நாள்: 14 October 2015.