உள்ளடக்கத்துக்குச் செல்

கேப் கிரிஸ்பாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Raphicerus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கேப் கிரிஸ்பாக்
Cape grysbok
வெஸ்டர்ன் கேப், டி ஹூப் தேசியப் பூங்காவில் ஒரு மான்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Raphicerus
இனம்:
இருசொற் பெயரீடு
Raphicerus melanotis
(Thunberg, 1811)
இதன் வாழிட எல்லை

கேப் அல்லது தெற்கு கிரிஸ்பாக் (Cape grysbok) என்பது தென்னாப்பிரிக்காவின் மேற்கு கேப் பகுதியில் அல்பானி மற்றும் செடர்பெர்க் மலைகளுக்கு இடையில் காணப்படும் ஒரு சிறிய மறிமான் ஆகும்.

விளக்கம்

[தொகு]
தி புக் ஆஃப் ஆன்டெலோப்சில் (1894) உள்ள சித்தரிப்பு

இதன் உரோமங்கள் தடிப்பானவை. அவை செம்மணல் சிறத்தில் இருக்கும் அதில் ஆங்காங்கே வெள்ளைப் புள்ளிகள் கொண்டிருக்கும். தலை, கழுத்து கால்களில் புள்ளிகள் குறைவாகவும், சற்று மஞ்சள் நிறமாகவும் இருக்கும், அதே சமயம் காதுகளின் உட்புறம், கண்ணைச் சுற்றிய வளையங்கள், வாய் பகுதி, தொண்டை, உடலின் அடிப்பகுதி போன்றவை வெண்மையாக இருக்கும். இதன் கண் முன் ஒரு கரிய வாசனை சுரப்பி உள்ளது. இந்த மான் நிற்கும்போது தோள் வரை 21" (45-55 செமீ) உயரம் கொண்டும், 20 பவுண்டுகள் (8-12 கிலோ) எடையை விட சற்றுக் கூடுதலாக இருக்கும். இதற்கு ஒரு 4 முதல் 8 செமீ நீளம் கொண்ட குறுகிய வால் உண்டு. இந்த வால் குறுகியதாக உள்ளதால் கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாதது. ஆண் மான்களுக்கு 8 செமீ நீளமுள்ள குறுகிய, கூர்மையான மற்றும் நேரான கொம்புகள் இருக்கும், அவை மென்மையானவை. கேப் கிரிஸ்பாக் அதன் பின் முனையிலுள்ள உரோமங்களைச் சிலிர்த்து தூக்கி நிறுத்தி, தன்னைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள முடியும். இவற்றின் கால்கள் வலுவானவை. முன் கால்களைவிட பின் கால்கள் நீண்டவை.

வாழ்விடம்

[தொகு]

கேப் கிரிஸ்பாக்கின் பூர்வீக வாழ்விடம் " ஃபைன்போஸ் பயோம்" (தெற்கு ஆப்பிரிக்காவின் கேப் புளோரிஸ்டிக் பிராந்தியம்) ஆகும். மேலும் இது அடர்ந்த புதர்கள் உள்ள நிலப்பகுதில் வாழ்கிறது. இது சில நேரங்களில் பழத்தோட்டங்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்களில் உலாவுவதைக் காணலாம். கேப் தீபகற்பத்தில் மனித நடவடிக்கைகள் உள்ள நகர்ப்புற விளிம்புகளில் கிரைஸ்போக் காணப்படுகிறது. இது ரீடு படுக்கைகளிலும், தெற்கு கரூவின் ஆற்றங்கரையிலும் காணப்படக்கூடும்.

பழக்கவழக்கங்கள்

[தொகு]
கிரிஸ்பாக் (Raphicerus Melanotis) மண்டை ஓடு, வாஷிங்டனின், சியாட்டிலில் உள்ள பர்க் இயற்கை வரலாறு மற்றும் கலாச்சார அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கேப் கிரிஸ்பாக் நீண்ட காலத்திற்கு தண்ணீர் அருந்தாமல் இருக்கமுடியும். இதற்கு தேவைப்படும் நீர்ச்சத்தின் பெரும்பகுதியை அதன் உணவில் இருந்தே பெற்றுக்கொள்கிறது. இது முதன்மையாக ஒரு இரவாடி ஆகும். இருப்பினும் இது குளிர்காலத்தில் அதிகாலையிலும் மாலை வேளைகளிலும் மேய்ச்சலுக்கு அலையும். வெயில் நேரங்களில் நிழல் உள்ள பகுதிகளில் படுத்து உறங்கும். இவை தனக்கென்று ஒரு எல்லையை வகுத்து வாழ்கின்றன. தன் வாழ்விடத்தை அடையளப்படுத்த அதன் சுற்றுப் புறத்தில் சணத்தையும், சிறுநீரையும் இட்டு வைக்கின்றன. மேலும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள தாவரங்களின் மீது தன் உடலில் இருந்து சுரக்ககும் சுரப்பிகளை பூசுகிறது. இவை தொலைவில் வேட்டையாடிகளைக் கண்டால் நன்கு கால்களையும் தரையில் பரப்பி அப்படியே படுத்துவிடும். தப்பி ஓடவேண்டிய நிலை ஏற்பட்டால் வளைந்து நெளிந்து ஓடி கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஏதாவது ஒரு புதருக்குள் சென்று பதுங்கி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது.[2]

இனப்பெருக்கம்

[தொகு]

இனப் பெருக்க காலத்தில் மட்டுமே ஆண் மான் பெண் மானுடன் சேர்ந்து வாழும். மற்ற காலங்ளில் தனித்தே வாழும். பெண் மான்களின கர்ப்பக் காலம் சுமார் 6 மாதங்களாகும். கற்ப காலத்திற்கு பிறகு கோடையில் ஒரு குட்டி பிறக்கின்றது. குட்டி மறைவிடத்தில் வைத்து வளர்க்கபடுகின்றது.

சிறுத்தைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள்கள் முதலியவை இவற்றை இரையாகக் கொள்கின்றன.

குறிப்புகள்

[தொகு]
  1. Palmer, G.; Birss, C.; Kerley, G.; Feely, J.; Peinke, D.; Castley, G. (2017). "Raphicerus melanotis". IUCN Red List of Threatened Species 2017: e.T19306A50193334. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T19306A50193334.en. https://www.iucnredlist.org/species/19306/50193334. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Chris; Stuart, Tilde (2000). A field guide to the tracks and signs of Southern and East African wildlife (3rd ed.). Cape Town: Struik. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1868725588. பார்க்கப்பட்ட நாள் 30 July 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்_கிரிஸ்பாக்&oldid=3929239" இலிருந்து மீள்விக்கப்பட்டது