கேப்ரியல் பெர்ட்ராண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்ரியல் பெர்ட்ராண்டு
Gabriel Bertrand
பிறப்பு(1867-05-17)17 மே 1867
பாரிசு
இறப்பு20 சூன் 1962(1962-06-20) (அகவை 95)
Paris
தேசியம்பிரான்சு
பணியிடங்கள்பாசுட்டியர் நிறுவனம்
ஆய்வு நெறியாளர்எமில் தக்ளாக்சு
Other academic advisorsஎட்மண்டு பிரேமி
அறியப்படுவதுஆக்சிடேசு கோட்பாடுகள் மற்றும் சுவடளவு தனிமங்கள்
பெர்ட்ராண்டு விதி

கேப்ரியல் பெர்ட்ராண்டு (Gabriel Bertrand) பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு மருந்தியல் நிபுணர் ஆவார். இவர் உயிர்வேதியியல் மற்றும் பாக்டீரியா ஆராய்ச்சி ஆகியவற்றுக்காகவும் நன்கு அறியப்படுகிறார். 1967 ஆம் ஆண்டு பாரிசு நகரில் மே மாதம் 17 அன்று இவர் பிறந்தார்.

உயிர் வேதியியலில் ஆக்சிடேசு என்ற சொல் மற்றும் சுவடளவு தனிமங்கள் என்ற கோட்பாடு இரண்டையும் கேப்ரியல் பெர்ட்ராண்டு அறிமுகப்படுத்தினார்.

தாவரங்களில் காணப்படும் லாக்கேசு எனப்படும் பல்பீனால் ஆக்சிடேசையும் கரிமச் சேர்மங்களின் கலவையான உரிசியால் மற்றும் லாக்குவர் எனப்படும் ஆசிய மரவகையிலிருந்து பெறப்படும் லாக்கோலையும் ஆக்சிசனேற்றும் நொதியையும் முதன்முதலில் கேப்ரியல் பெர்ட்ராண்டுதான் ஆய்வு செய்தார் [1] in 1894.[2].

பல நுண்ணூட்டச்சத்துக்களுக்கான மருந்தளவு எதிர்ச்செயல் வளைவு ஒருபோக்குத்தன்மையானது அல்ல என்பதை பெர்ட்ராண்டின் விதி குறிக்கிறது. அதிகரிக்கும் உட்கொள்ளலுக்கேற்ப நன்மைகளையும் அதிகரிப்பதற்கான ஆரம்ப கட்டத்தை இது கொண்டுள்ளது. அதன்பிறகு இந்த அதிகப்படியானதே நச்சுத்தன்மையாக அதிகரிக்கும் [3]. 2005 ஆம் ஆண்டில் ராபெனெய்மர் மற்றும் பலர். ஆப்பிரிக்க பருத்தி இலை புழுக்களுக்கு அதிகப்படியான கார்போவைதரேட்டுகளை அளித்து பெர்ட்ராண்டின் விதியை பெருமூலக்கூறுகளுக்கும் நீட்டித்தது [4].

1894 ஆம் ஆண்டு சீசர் பிசாலிக்சுடன் சேர்ந்து பாம்பு கடிக்கு எதிராகப் பயன்படுத்த மாற்று மருந்து ஒன்றை உருவாக்கினார் [5].

பெர்ட்ராண்ட் 1931 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ அகாடமியின் உறுப்பினராக பெர்ட்ராண்டு உறுப்பினராக்கப்பட்டார். 1932 ஆம் ஆண்டு இவர் ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் அகாடமியின் வெளிநாட்டு உறுப்பினரானார் [6]. 1962 ஆம் ஆம் ஆண்டு சூன் மாதம் 20 ஆம் நாள் இவர் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gabriel Bertrand on isimabomba.free.fr (French)
  2. Science and civilisation in China: Chemistry and chemical ..., Volume 5, Part 4 By Joseph Needham, Ping-Yü Ho, Gwei-Djen Lu and Nathan Sivin, p. 209
  3. Does Bertrand's rule apply to macronutrients? D Raubenheimer, K.P Lee and S.J Simpson, Proc Biol Sci. 22 November 2005; 272(1579): 2429–2434, எஆசு:10.1098/rspb.2005.3271
  4. Raubenheimer, D; Lee, KP; Simpson, SJ (22 November 2005). "Does Bertrand's rule apply to macronutrients?". Proc Biol Sci 272 (1579): 2429–34. doi:10.1098/rspb.2005.3271. பப்மெட்:16243690. 
  5. Le Musee Pasteur பரணிடப்பட்டது 2013-10-19 at the வந்தவழி இயந்திரம் Césaire et Marie PHISALIX, deux chercheurs comtois
  6. "G. Bertrand (1867 - 1962)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்ரியல்_பெர்ட்ராண்டு&oldid=2944036" இலிருந்து மீள்விக்கப்பட்டது