கேப்ரியல் தாமஸ் செல்வராஜ்
கேப்ரியல் தாமஸ் செல்வராஜ் Gabriel Thomas Selvaraj | |
|---|---|
பினாங்கு செலாத்தான் தொகுதி P035 | |
| பதவியில் 1969–1974 | |
| முன்னையவர் | |
| பின்னவர் | தொகுதி சீரமைப்பு |
| பெரும்பான்மை | 6,000 (1969)[1] |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | |
| பணி | அரசியல்வாதி |
| தொழில் | வழக்கறிஞர் |
கேப்ரியல் தாமஸ் செல்வராஜ் (ஆங்கிலம்; மலாய்: Gabriel Thomas Selvaraj) என்பவர் மலேசிய அரசியல்வாதி; வழக்கறிஞர்; 1969 முதல் 1974 வரை மலேசிய மக்களவையில், பினாங்கு செலாத்தான் மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பதவி வகித்தவர்; கெராக்கான் (GERAKAN) கட்சியின் சார்பில் மலேசியாவின் மூன்றாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
1969-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியாவின் 3-ஆவது பொதுத் தேர்தலில், பினாங்கு செலாத்தான் மக்களவைத் தொகுதியில், கெராக்கான் கட்சி சார்பில் ஆளும் மலேசிய கூட்டணி கட்சியின் அம்னோ வேட்பாளரான இசுமாயில் இட்ரிசுக்கு எதிராகப் போட்டியிட்டு 20,196 வாக்குகள் (58.72%) பெற்று வெற்றி பெற்றார்.
மலேசியாவில் 1969-இல் ஏற்பட்ட மே 13 இனக் கலவரத்திற்குப் பிறகு மலேசிய நாடாளுமன்றம் தற்காலிகமாக இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டது. அதன் பின்னர் 1971 முதல் 1974 வரை இவர் மக்களவை உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றினார்.
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]பினாங்கு செலாத்தான் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு பாலிக் புலாவ், புக்கிட் பெண்டேரா, ஜெலுத்தோங் என பிரிக்கப்பட்டது.
பொது
[தொகு]இவர் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தீவிர அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளராக அறியப்படுகிறார். 1960-களின் பிற்பகுதியில் உருவான கெராக்கான் கட்சியில் இணைந்து பினாங்கின் தென் பகுதியில் (Penang Selatan) உள்ள அடித்தட்டு மக்களுக்காகப் பணியாற்றினார்; ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் சிறந்த புலமை பெற்ற கல்வியாளராக விளங்கினார்.
இவர் மலேசிய நாடாளுமன்றத்தில் பணியாற்றிய தொடக்ககால இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார். இனம், மதம் கடந்து அனைத்து மலேசிய மக்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்ற கொள்கைக்காகப் போராடினார் என அறியப்படுகிறது.
1974-இல் தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் அவர் நேரடி அரசியல் தேர்தல் களத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| தாமஸ் கேப்ரியல் செல்வராஜ் | கெராக்கான் | 20,196 | 58.72 | 58.72 | |
| இசுமாயில் இட்ரிசு | மலேசிய கூட்டணி கட்சி | 14,196 | 41.28 | 6.87 ▼ | |
| மொத்தம் | 34,392 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 34,392 | 94.46 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 2,017 | 5.54 | |||
| மொத்த வாக்குகள் | 36,409 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 47,464 | 36,409 | 8.32 ▼ | ||
| Majority | 6,000 | 17.44 | 6.92 | ||
| கெராக்கான் கைப்பற்றியது | |||||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Gabriel Thomas Selvaraj (W1, L0); P.035 Penang Selatan, Pulau Pinang; GE-0310 May 1969". ElectionData.MY. Retrieved 14 May 2026.
மேலும் காண்க
[தொகு]நூல்கள்
[தொகு]- Zhang, Kevin; Choo, John; Fong, Sok Eng (2022). The Democratic Action Party in Johor (in ஆங்கிலம்). ISEAS Publishing. ISBN 978-981-5011-11-1.
- Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
- Anzagain Sdn. Bhd. (2004). Almanak keputusan pilihan raya umum: Parlimen & Dewan Undangan Negeri, 1959-1999. Shah Alam, Selangor: Anzagain.
- Hussain, M. (1987). Membangun demokrasi: Pilihanraya di Malaysia. Kuala Lumpur: Karya Bistari.