கேபிஎன் ரவல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
KPN Travels
கேபிஎன் ட்ராவல்ஸ்
logo
image
நிறுவப்பட்டது1962[1]
தலைமையகம்சேலம், தமிழ்நாடு
சேவையில் உள்ள பகுதிகள்தென்னிந்தியா
சேவை வகைதொலைதூர பேருந்து சேவை
வழித்தடங்கள்200+
Fleet250[1]
தலைமை இயக்குநர்கே. பி. நடராஜன்
இணையதளம்kpntravels.in

கேபிஎன் டிராவல்சு (KPN Travels) என்பது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கிடையேயான தொலைதூர பேருந்து சேவையாகும். டாக்டர் கே. பொன்மலை கவுண்டர் நடராஜன் என்பவரால் 1973 ல் நிறுவப்பட்டு, தமிழ்நாட்டின் சேலத்தை தலைமை இடமாக கொண்டு கே.பீ.என் டிராவல்ஸ் இந்தியா லிமிடெட், இவ்வணிகத்தில் உள்ளது.

இந்நிறுவனம் குளிர்சாதன வசதியுடைய மற்றும் குளிர்சாதன வசதியற்ற சொகுசு பேருந்துகளை முக்கிய நகரங்களுக்கிடையே இயக்குகிறது.[2] இந்நிறுவனம் வேறு தனையார், அரசுப் போக்குவரத்து மற்றும் இந்திய இரயில்வே நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது.[3] இணையதளம் முலம் பயணச்சிட்டு முன்பதிவு செய்யும் வசதி, பேருந்து பயணம் செய்யும் இடத்தினை அறியும் வசதி போன்ற வசதிகளையும் இந்நிறுவனம் வழங்கிவருகிறது.

2016 செப்டம்பரில் காவேரி நீர்ப் பிரச்சினை தொடர்பான வன்முறைகளில் கர்நாடகாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபென் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏறத்தாழ 50 பேருந்துகள் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.[4][5]

முக்கிய வழித்தடங்கள்[தொகு]

 • பெங்களுரு - சென்னை
 • பெங்களுரு - கோயம்பத்தூர்
 • பெங்களுரு - எர்னாகுளம்
 • பெங்களுரு - கன்னியாகுமரி
 • பெங்களுரு - கொடைக்கானல்
 • பெங்களுரு - மதுரை
 • பெங்களுரு - ஊட்டி
 • பெங்களுரு - இராமேஸ்வரம்
 • பெங்களுரு - சிவகாசி
 • பெங்களுரு - தென்காசி
 • பெங்களுரு - திருப்பூர்
 • பெங்களுரு - திருச்சி
 • பெங்களுரு - திருவனந்தபுரம்
 • சென்னை - கோயம்பத்தூர்
 • சென்னை - எர்னாகுளம்
 • சென்னை - ஈரோடு
 • சென்னை - கொடைக்கானல்
 • சென்னை - மதுரை
 • சென்னை - மூனாறு
 • சென்னை - ஊட்டி
 • சென்னை - பொள்ளாச்சி
 • சென்னை - இராமேஸ்வரம்
 • சென்னை - தென்காசி
 • சென்னை - திருநெல்வேலி
 • சென்னை - திருப்பூர்
 • சென்னை - திருச்சி
 • சென்னை - திருவனந்தபுரம்
 • கோயம்பத்தூர் - மார்த்தாண்டம்
 • கோயம்பத்தூர் - புதுச்சேரி
 • எர்னாகுளம் - மதுரை
 • ஐதராபாது - கோயம்பத்தூர்
 • ஐதராபாது - மதுரை
 • ஐதராபாது - திருவனந்தபுரம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேபிஎன்_ரவல்ஸ்&oldid=3551404" இருந்து மீள்விக்கப்பட்டது