கேன் (மல்யுத்த வீரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிளென் தாமஸ் ஜேக்கப்ஸ் (Glenn Thomas Jacobs பிறப்பு: ஏப்ரல் 26, 1967) ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர், தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி. குடியரசுக் கட்சியினராக , டென்னசி, நாக்ஸ் மாகாணத்தின் மேயராக உள்ளார்.[1] தொழில்முறை மல்யுத்தத்தில், ஜேக்கப்ஸ் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்உடன் கையெழுத்திட்டார், அங்கு அவர் கேன் என்ற மேடைப் பெயரால் பங்கேற்றதன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். 1995 ஆம் ஆண்டில் உலக மல்யுத்த சம்மேளனத்தில் (WWF, இப்போது WWE) சேருவதற்கு முன்பு ஸ்மோக்கி மவுண்டன் மல்யுத்தம் (SMW) மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் மல்யுத்த சங்கம் (USWA) போன்ற சுயாதீன சுற்று வட்டார மல்யுத்தப்போடிகளை அவர் 1992 ஆம் ஆண்டில் துவங்கினார்.உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் இருந்த தி அண்டர்டேக்கரின் இளைய சகோதரர் ஆவார். இவர்கள் இருவரும் சேர்ந்த குழுவினை தி பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்ஷன் என்று அழைத்தனர்.

அறிமுகமானதைத் தொடர்ந்து, 1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் உலக மற்போர் மக்ழிகலை நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் கேன் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார்.[2] ஜூன் 1998 இல் கிங் ஆஃப் தி ரிங்நிகழ்ச்சியில் உலக வாகையாளர் பட்டத்திற்கான போட்டியில் இவர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினுக்கு எதிராக விளையாடியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார் .[3]

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்காலங்களில், கேன் மூன்று முறை உலக வாகையாளர் பட்டம் (WWF வாகையாளர் பட்டம் , ஈ.சி.டபிள்யூ வாகையாளர் பட்டம் மற்றும் உலக மிகுகன வாகையாளர் பட்டம் தலா ஒரு முறை பெற்றார்.) மற்றும் 12 முறை உலக இணை வாகையாளர் பட்டங்களை பெற்றுள்ளார் அந்த காலங்களில் இவர் பல்வேறு கூட்டாளர்களோடு இணைந்து இந்த வாகைஅயாளர் பட்டங்களை பெற்றார். அவர் இரண்டு முறை கண்டங்களுக்கு இடையிலான வாகையாளர் பட்டம் மற்றும் ஒரு மணி இன் தெ பேங்க் வாகையாளர், . ஒட்டுமொத்த ராயல் ரம்பிள் போட்டி நிகழ்ச்சியில் மற்ற வீரர்களை இதுவரை 44 நபர்களை வெளியேற்றியுள்ளார். செப்டம்பர் 16, 2019 அன்று நடந்த 24/7 வாகையாளர் பட்டம் ஷிப் தான் கேன் வென்ற கடைசி வாகையாளர் பட்டம் ஆகும்.[4] 2015 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், மூத்த மல்யுத்த வீரர் ரிக் பிளேயர் கேனை "உலகின் மிகச் சிறந்தவர்" என்று வர்ணித்தார்.[5]

தொழில்முறை மல்யுத்தத்தம் தவிர , ஜேக்கப்ஸ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விருந்தினராக தோன்றியுள்ளார், இதில் 2006 டபிள்யூ டபிள்யூ இ ஸ்டுடியோஸ் தயாரிப்பான சீ நோ ஈவில் மற்றும் அதன் அடுத்த பாகங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஜேக்கப்ஸ் ஸ்பெயினில் உள்ள ஒரு நகரமான டோரெஜான் டி அர்டோஸில் [6][7][8] ஒரு அமெரிக்க விமானப்படை குடும்பத்தில் பிறந்தார்.[9] மிசோரியின் செயின்ட் லூயிஸ் அருகே வளர்ந்த அவர், மிச்சோரியில் உள்ள பவுலிங் க்ரீனில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், அங்கு அவர் கால்பந்து மற்றும் கூடைப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினார்.[10] ஜேக்கப்ஸ் வடகிழக்கு மிசோரி மாநில பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார், இப்போது இது ட்ரூமன் மாநில பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது, அங்கு இவர் கூடைப்பந்து மற்றும் கால்பந்து ஆகிய இரண்டையும் விளையாடினார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேன்_(மல்யுத்த_வீரர்)&oldid=3271919" இருந்து மீள்விக்கப்பட்டது