கேன்ஃபீல்டைட்டு
| கேன்ஃபீல்டைட்டு Canfieldite | |
|---|---|
கேன்ஃபீல்டைட்டு | |
| பொதுவானாவை | |
| வகை | சல்பைடு கனிமங்கள் |
| வேதி வாய்பாடு | Ag8SnS6 |
| இனங்காணல் | |
| நிறம் | சிவப்பு நிறத்துடன் கூடிய எஃகு சாம்பல் |
| படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
| முறிவு | ஒழுங்கற்றது/ சமமற்றது, சங்குருவம் |
| விகுவுத் தன்மை | நொறுங்கும் |
| மோவின் அளவுகோல் வலிமை | 2 1⁄2 |
| மிளிர்வு | உலோகத்தன்மை |
| கீற்றுவண்ணம் | சாம்பல் கருப்பு |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
| அடர்த்தி | 6.2 – 6.3 g/cm3 |
| மேற்கோள்கள் | [1][2][3] |
கேன்ஃபீல்டைட்டு (Canfieldite) என்பது Ag8SnS6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய வெள்ளி வெள்ளீயம் சல்பைடு கனிமமாகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் கேன்ஃபீல்டைட்டு கனிமத்தை Cfi[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. கேன்ஃபீல்டைட்டு கனிமமானது பொதுவாக வெள்ளீயம் தளத்தில் மாறுபட்ட அளவு செருமேனியம் பதிலீடையும், கந்தகத் தளத்தில் தெலூரியம் பதிலீடையும் கொண்டுள்ளது. கேன்ஃபீல்டைட்டுக்கும் அதன் செருமானிய ஒப்புமையான ஆர்கைரோடைட்டுக்கும் இடையே ஒரு முழுமையான தொடர் உள்ளது. கருப்பு நிறத்தில் நேர்ச்சாய்சதுரப் படிகங்களாக இக்கனிமம் உருவாகிறது. இவை பெரும்பாலும் இரட்டைப் படிகங்களாக மாறுவதால் கனசதுர வடிவில் தோன்றும். மிகவும் பொதுவான வடிவம் திராட்சைக் கொத்து போன்ற திண்மமாகும். மோவின் கடினத்தன்மை அளவு கோலில் இதன் கடினத்தன்மை மதிப்பு 2.5 என்றும் ஒப்படர்த்தி 6.28 என்றும் மதிப்பிடப்படுகிறது. கேன்ஃபீல்டைட்டு பிளவு இல்லாமல் சங்குருவான முறிவை வெளிப்படுத்துகிறது.
கேன்ஃபீல்டைட்டு கனிமம் முதன்முதலில் 1893 ஆம் ஆண்டு பொலிவியாவின் போடோசி துறையின் கோல்குச்சாகாவில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. இது அமெரிக்க சுரங்கப் பொறியாளரான பிரடெரிக் அலெக்சாண்டர் கேன்ஃபீல்டு (1849–1926) என்பவரின் நினைவாக கேன்ஃபீல்டைட்டு எனப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mineralienatlas
- ↑ Mindat with location data
- ↑ Webmineral data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.