கேந்தரிய வித்யாலயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Kendriya Vidyalaya Sangathan
केन्द्रीय विद्यालय संगठन
அமைவிடம்
இந்தியா
தகவல்
குறிக்கோள்Tatvam Pooshan Apaavrunu
தொடக்கம்December 15, 1963
பள்ளி அவைமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)
ஆணையம்மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை (MHRD)
இணையம்

கேந்திரிய வித்யாலயா

கேந்திரிய வித்யாலயா என்பது ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் (MHRD) கீழ் நிறுவப்பட்ட ஒன்றிய அரசுப் பள்ளியாகும். இந்தியாவில் 1094 பள்ளிகளும் வெளிநாடுகளில் மூன்று பள்ளிகளும் அமைந்துள்ளன. இப்பள்ளிகள் உலக அளவில் மிகப்பெரிய சங்கிலித்தொடர்பு போல் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

1963-ம் ஆண்ட 'நடுவண் பள்ளிகள்' என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் 'கேந்திரிய வித்யாலயா' என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகள் அனைத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் (CBSE) இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியப் பாதுகாப்புத் துறையில் சேவையாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்கள் அடிக்கடி பணிமாறுதல்களால் பல இடங்களில் பணியாற்றும் சூழலில் அவர்களின் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியான மற்றும் நிலையான கல்வியை வழங்க வேண்டும் என்ற முதன்மை நோக்கில் செயல்பட்டு வருகின்றன. பிறகு இராணுவத் துறையில் தனியாக இராவணப் பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசுப் பணியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கும் கல்வியை அளித்து வருகிறது. இப்பள்ளிகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன.[1]

பாடத்திட்டம்[தொகு]

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. பொதுவான பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படுவதால் ஒன்றிய அரசு ஊழியர்கள் பணியிடம் மாற்றம் பெறுகின்றபொழுது அவர்களின் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிப்படையா வண்ணம் அமைந்துள்ளது. இதனால் குழந்தைகளின் கல்வி உரிமை உறுதிசெய்யப்படுகிறது.

நிர்வாகம்[தொகு]

கேந்திய வித்யாலயா சங்கதன் என்கின்ற நடுவண் பள்ளி அமைப்பு புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இவ்வமைப்பு இப்பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணித்து வருகின்றது. இந்நிர்வாக அமைப்பின் தலைவர் ஒன்றிய மனித வள மேம்பாட்டுத் துறையின் முதன்மை அமைச்சர் ஆவார். இதன் துணைத்தலைவர் ஒன்றிய மனித வள மேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சர் ஆவார். இவ்வமைப்பின் ஆணையர் இதன் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றார். மேலும், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள், இதன் துணை ஆணையர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.[2] பல்வேறு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு உதவி ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் தலைவராக செயலாற்றி வருகின்றனர். பள்ளி நிர்வாகத்திற்கு என்று தனியாக முதல்வர் நியமிக்கப்படுகிறார்.

பள்ளிகள்[தொகு]

Kendriya Vidyalaya Sangathan building, Delhi

2016 மார்ச் மாத நிலவரப்படி 1128 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1125 பள்ளிகள் இந்தியாவிலும் காத்மாண்டு, மாஸ்கோ, டெக்ரான் போன்ற நாடுகளில் மூன்று பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. [3]

இப்பள்ளிகளில் 1,209,138 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 56,445 பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இப்பள்ளிகள் இந்தியாவில் 25 மண்டலமாக பிரிக்கப்பட்டு அமைந்துள்ளன.

சிறப்புகள்[தொகு]

  • சமஸ்கிருதம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகவும், 9-ம் வகு்பபு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ந்தெடுக்கும் பாடமாகவும் அமைந்துள்ளது.
  • 2014-ஆம் ஆண்டு வரை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்ப வரை ஜெர்மன் மொழி கற்றுத் தரப்பட்டுள்ளது.
  • மாஸ்கோவில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குப் பிரெஞ்சு அல்லது ரஷ்யா மொழி மூன்றாவது அல்லது இரண்டாவது மொழியாக கற்றுத் தரப்படுகிறது.
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணங்கள் இல்லை. பிற மாணவர்களுக்குக் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டு பள்ளி வளர்ச்சி நிதியாக பயன்படுத்தப்படுகிறது.
  • குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை உள்ள நிலையில் அக்குழந்தைக்கு 6-ம் வகுப்பிலிருந்து கல்விக் கட்டணம் மற்றும் பள்ளி மேம்பாட்டு நிதி வாங்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.[4]


சான்றுகள்[தொகு]

  1. "Kendriya Vidyalaya". Kendriya Vidyalaya Sangathan. National Informatics Centre (NIC), Government of India. பார்த்த நாள் 7 September 2010.
  2. "Kendriya Vidyalaya Sangathan". Kvsangathan.nic.in (2013-03-31). பார்த்த நாள் 2016-03-06.
  3. "KVS homepage". Kendriya Vidyalaya Sangathan. மூல முகவரியிலிருந்து 25 June 2014 அன்று பரணிடப்பட்டது.
  4. "Category wise exemption from payment of Tuition fee, VVN & Computer Fund". Kendriya Vidyalaya Sangathan.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேந்தரிய_வித்யாலயா&oldid=2672770" இருந்து மீள்விக்கப்பட்டது