உள்ளடக்கத்துக்குச் செல்

கேத்தரின் சீட்டா-ஜோன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேத்தரின் சீட்டா-ஜோன்சு
Catherine Zeta-Jones
2012 இல் கேத்தரின்
பிறப்புகேத்தரின் சீட்டா ஜோன்சு
25 செப்டம்பர் 1969 (1969-09-25) (அகவை 55)
சுவான்சி, வேல்சு
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1984–இன்று
வாழ்க்கைத்
துணை
மைக்கேல் டக்ளசு (தி. 2000)
பிள்ளைகள்2
வலைத்தளம்
www.catherinezetajones.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

கேத்தரின் சீட்டா-ஜோன்ஸ் (Catherine Zeta-Jones; பிறப்பு: 25 செப்டம்பர் 1969) வெல்சிய நடிகை ஆவார். சுவான்சியில் பிறந்து வளர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே ஒரு நடிகையாக ஆசைப்பட்டார். குழந்தையாக இருந்தபோது, அன்னி மற்றும் பக்ஸி மலோன் ஆகிய இசைக்கலைஞர்களின் வெஸ்ட் எண்ட் தயாரிப்புகளில் இவர் நடித்தார். அவர் லண்டனின் கலை கல்விப் பள்ளிகளில் இசை நாடகப் பிரிவினைப் பயின்றார் மற்றும் 1987 ஆம் ஆண்டில் 42 ஸ்ட்ரீட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு நாடகத்தில் முக்கியக் கதாப் பாத்திரத்தில் நடித்தார். அவரது திரை அறிமுகமானது தோல்வியுற்ற பிரெஞ்சு-இத்தாலிய திரைப்படமான 1001 நைட்ஸ் (1990) இல் வந்தது, மேலும் அவர் பிரித்தானிய தொலைக்காட்சித் தொடரான தி டார்லிங் பட்ஸ் ஆஃப் மே (1991-1993) வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.

ஜீடா-ஜோன்ஸ் ஹாலிவுட்டில் திரைபப்டங்களில் நடிப்பதனை வழக்கமாகக் கொண்டார், இது தி மாஸ்க் ஆஃப் சோரோ (1998) மற்றும் ஹீஸ்ட் திரைப்படமான என்ட்ராப்மென்ட் (1999) போன்ற அதிரடி திரைப்படங்களில் நடித்தார். டிராஃபிக் (2000) இல் பழிவாங்கும் கர்ப்பிணிப் பெண்ணாகவும், சிகாகோ (2002) இசை நிகழ்ச்சியில் ஒரு கொலைகார பாடகியாகவும் நடித்ததற்காக அவர் பாராட்டுக்களைப் பெற்றார்; மேலும் சிகாகோ திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் சிறந்த துணை நடிகைக்கான அகாடமி மற்றும் பாஃப்டா விருதுகளை வென்றார். மேலும் நகைச்சுவைத் திரைப்படங்களான இன்டாளரபிள் குரூயல்ட்டி (2003), ஓசியன்ஸ் டுவள்வ் (2004), தி டெர்மினல் (2004) மற்றும் காதல் நகைச்சுவை நோ ரிசர்வேஷன்ஸ் (2007) உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்தார்.

ஜீடா-ஜோன்ஸ் அகாடமி விருது, பிரித்தானிய அகாடமி திரைப்பட விருது மற்றும் டோனி விருது உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். மேலும் 2010 ஆம் ஆண்டில், திரைப்படங்களில் நடித்தற்காக மற்றும் அவரது மனிதாபிமான முயற்சிகளுக்காக பிரித்தானியப் பேரரசின் ஆணைக்குழுவின் தளபதியாக (சிபிஇ) நியமிக்கப்பட்டார். மனச்சோர்வு மற்றும் இருமுனை II கோளாறுக்கான அவரது போராட்டம் ஊடகங்களால் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவர் அமெரிக்க நடிகர் மைக்கேல் டக்ளஸை மணந்தார், இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் ஆரம்ப கட்ட வாழ்க்கை

[தொகு]
1999 இல் 52 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் என்ட்ராப்மென்ட்டின் முதல் காட்சியில் ஜீட்டா-ஜோன்ஸ்

தெற்கு வேல்சில் உள்ள ஸ்வான்சியாவில், ஐரிஷ் உடைத்தயாரிப்பாளரான பட்ரிஷியா ,வெல்ஷ் நாட்டு இனிப்புத் தொழிற்சாலை உரிமையாளர் டேவிட் "டாய்" ஜோன்ஸ் (பி. 1946), ஆகிய தம்பதியனருக்கு செப்டம்பர் 25, 1969 இல் மகளாகப் பிறந்தார்.[1][2][3] இவரின் தாய்வழி பாட்டியின் பெயரான, கேதரின் ஃபேர் என்பதையும், தந்தைவழிப் பாட்டியான ஜீடா ஜோன்ஸ் (1917 – 14 ஆகஸ்ட் 2008) என்பதையும் சேர்த்துதான் இவருக்கு பெயர் சூட்டப்பட்டது.[4]

தொழில் வாழ்க்கை

[தொகு]

1990-1996: திரை அறிமுகம் மற்றும் தொழில் போராட்டங்கள்

[தொகு]

1990 ஆம் ஆண்டில், ஜீடா-ஜோன்ஸ் இயக்குனர் பிலிப் டி ப்ரோகாவின் 1001 நைட்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானார். இது பாரசீக கட்டுக்கதையான ஆயிரத்தொரு இரவுகளின் தழுவலாகும்.[5] இந்த படம் வணிக ரீதியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை, மேலும் தி டெய்லி டெலிகிராப்பில் டி ப்ரோகாவின் கூற்றுப்படி, இந்த படம் "அதன் சுவாரஸ்யமான நிர்வாண காட்சிகளுக்காக சிறப்பாக நினைவுகூரப்படுகிறது".[6] 1991 முதல் 1993 வரை பிரித்தானிய கால நகைச்சுவை-நாடக தொலைக்காட்சி தொடரான தி டார்லிங் பட்ஸ் ஆஃப் மே நிகழ்ச்சியில் டேவிட் ஜேசன் மற்றும் பாம் பெர்ரிஸுக்கு ஜோடியாக அவர் நடித்தபோது பரவலான கவனத்தினைப் பெற்றார்.அந்தக் குடும்பத்தின் மூத்த மகள் கதாப்பத்திரத்தில் இவர் நடித்தார்.[7][8] அந்தத் தொடர் அந்த நேரத்தில் நாட்டில் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்தது, மேலும் ஜீட்டா-ஜோன்ஸ் அந்த நாடகத்தில் நடித்தத மூலம் மக்களிடம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார்; அதனைப் பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார் "உண்மையில், ஒரு மணிநேர தொலைக்காட்சி நிகழ்ச்சி என் வாழ்க்கை முற்றிலும் மாறியது. என்னால் எங்கும் செல்ல முடியவில்லை ".[9][10]

1998-2000: ஹாலிவுட் திருப்புமுனை மற்றும் வெற்றி

[தொகு]

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டைட்டானிக்கில் ஜீட்டா-ஜோன்ஸைக் கவனித்து, மார்ட்டின் காம்ப்பெல்லுக்கு பரிந்துரை செய்தார், அவர் ஸ்பீல்பெர்க்கின் தயாரிப்பு நிறுவனத்திற்காக தி மாஸ்க் ஆஃப் சோரோவை (1998) இயக்கிக் கொண்டிருந்தார். காம்ப்பெல் இசபெல்லா ஸ்கொருப்கோவிற்கு பதிலாக முன்னணி பெண் கதாப்பத்திரத்தில் நடித்தார்.[11] அந்தோனி ஹாப்கின்ஸ் மற்றும் அன்டோனியோ பண்டேராஸ் ஆகியோருடன் இணைந்து நடித்த இந்த படம், சோரோ (ஹாப்கின்ஸ்) என்ற மெக்சிகன் போர்வீரனின் கதையைப் பற்றியது. அவர் தனது மனைவியின் மரணத்திற்குப் பழிவாங்கவும், இழந்த மகள் எலெனாவை (ஜீட்டா-ஜோன்ஸ்) கண்டுபிடிப்பதாகவும் கதை அமைக்கப்பட்டிருக்கும். வறண்ட மெக்ஸிகன் பாலைவனத்தில் கனமான உடைகளை அணிந்து அதிரடி மற்றும் நடன காட்சிகளை படமாக்குவது ஜீடா-ஜோன்ஸுக்கு ஒரு சவாலாக இருந்தது, ஆனால் அந்த அனுபவத்தை "துன்பத்திற்குரியது" என்று அவர் கூறினார். சோரோவின் மாஸ்க் விமர்சகர்களால் பாராட்டினைப் பெற்றது மற்றும் உலகளவில் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது.[12][13] இந்த காதாப்பாத்திரம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.மேலும், சிறந்த திருப்புமுனை செயல்திறனுக்கான எம்டிவி மூவி விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.[14][15]

2012 - தற்போது வரை: திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்குத் திரும்பிய பின்

[தொகு]
2012 டிரிபெகா திரைப்பட விழாவிற்கான வேனிட்டி ஃபேர் விருந்தில் கணவர் மைக்கேல் டக்ளஸுடன் ஜீடா-ஜோன்ஸ்

நடிப்பிலிருந்து மூன்று வருட ஓய்வினைத் தொடர்ந்து, ஜீடா-ஜோன்ஸ் ப்ரூஸ் வில்லிஸ் மற்றும் ரெபேக்கா ஹால் ஆகியோருடன் இணைந்து நடித்த லே தி ஃபேவரிட் (2012) திரைப்படத்தில் மீண்டும் திரைப்படத்தில் நடித்தார். இதில் அவர் ஒரு சூதாட்டக்காரரின் (வில்லிஸ்) பொறாமை கொண்ட மனைவியாக நடித்தார்.[16][17] படத்திற்கான விமர்சனங்கள் எதிர்மறையாக வந்தன. டாம் குரூஸ் மற்றும் பிரையன் க்ரான்ஸ்டன் இணைந்து நடித்த குழும இசை நகைச்சுவை ராக் ஆஃப் ஏஜஸில், ஜீட்டா-ஜோன்ஸ் ஒரு மேயரின் மத ரீதியாக பழமைவாத மனைவியாகத் தோன்றினார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[18][19] 2012 ஆம் ஆண்டின் இறுதியில், ஜெரார்ட் பட்லருடன் இணைந்து நடித்த காதல் நகைச்சுவை ப்ளேயிங் ஃபார் கீப்ஸ் வெளியானது. இது இந்த ஆண்டின் மூன்றாவது வணிக ரீதியிலான தோல்விப் படமாக அமைந்தது.[20]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

தொலைக்காட்சித் தொடரான தி டார்லிங் பட்ஸ் ஆஃப் மே (1991 – 93) வெற்றியானது ஜீட்டா-ஜோன்ஸை பிரிட்டனில் பிரபலமாக்கியது, மேலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பின்னர் ஊடகங்களால் வெளியிடப்பட்டது.[21] 1990 களின் முற்பகுதியில் தொலைக்காட்சி ஆளுமை ஜான் லெஸ்லி, பாடகர் டேவிட் எசெக்ஸ் மற்றும் பாப் நட்சத்திரம் மிக் ஹக்னால் ஆகியோருடனான அவரது உறவுகள் பிரித்தானியப் பத்திரிகைகளால் பரவலாக அறிவிக்கப்பட்டன. 1990 களின் நடுப்பகுதியில், அவர் ஸ்காட்டிஷ் நடிகர் அங்கஸ் மக்ஃபேடியனுடன் நிச்சயதார்த்தம் செய்தார்.[22] 1995 இல் டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியில், அவர் தனது வாழ்க்கை முறையை விவரித்தார்: "நான் குடிக்கிறேன், சத்தியமாக சொல்கிறேன், எனக்கு செக்ஸ் பிடிக்கும்".

திரைப்படவியல் மற்றும் விருதுகள்

[தொகு]
ஆண்டு பெயர் கதாபாத்திரம் குறிப்புகள்
1990 லெஸ் 1001 நைட்ஸ் ஷெஹேரஜடே 1991-1993"தி டார்லிங் பட்ஸ் ஆஃப் மே"மேரியட்
1992 கிறிஸ்டோபர் கொலம்பஸ்: தி டிஸ்கவரி பீட்ரிஸ்
தி அட்வென்சர்ஸ் ஆஃப் யங் இண்டியானா ஜோன்ஸ்: டாரேடெவில்ஸ் ஆஃப் தி டெசர்ட் மாயா
1993 ஸ்பிலிட்டிங் ஹெர்ஸ் கிட்டி
1994 தி சிந்தர் பாத் விக்டோரியா சாப்மென்
தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ் எஸ்டாசியா வே
1995 கேதரின் தி கிரேட் கேதரின் II
ப்ளூ ஜூஸ் சோலி
1996 தி பான்ட்டம் சலா
1998 தி மாஸ்க் ஆப் ஜோரோ எலெனா (டி லா வேகா) மான்ட்டிரியோ பிடித்த பெண் புதுவரவிற்கான பிளாக் பஸ்டர் எண்டர்டெய்ன்மென்ட் விருது

சிறந்த நடிப்பிற்கான பெண் சாதனையாளருக்கான, MTV மூவி அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த சண்டைக்கான, MTV மூவி அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டார் பரிந்துரைப்பை ஆண்டானியோ பண்டராஸ் உடன் பகிர்ந்துகொண்டார்

பரிந்துரை - சிறந்த நடிகைக்கான சேடர்ன் விருது

1999 என்ட்ராப்மென்ட் விர்ஜினா பேக்கர் பிடித்த நடிகைக்கான (ஆக்ஷ‌னுக்காக) பிளாக் பஸ்டர் எண்டர்டெய்ன்மென்ட் அவார்டு

ஐரோப்பியன் பிலிம் அவார்டு — ஜேம்ஸ்சன் பீப்பிள்ஸ் சாய்ஸ் அவார்டு - சிறந்த ஐரோப்பிய நடிகை

தி ஹண்டிங் தியோ பிடித்த நடிகைக்கான (திகில் கதாப்பாத்திரத்திற்கு) பிளாக் பஸ்டர் எண்டர்டெய்ன்மென்ட் அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
2000 ஹை ஃபெடிலிட்டி சார்லி நிக்கோல்சன்
டிராஃபிக் ஹெலனா அயலா நகரும் படத்தில் மிகச் சிறந்த நடிப்பிற்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது

பிடித்த துணை நடிகைக்கான (டிராமாவிற்கு) பிளாக் பஸ்டர் எண்டர்டெய்ன்மென்ட் அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டார் பரிந்துரைக்கப்பட்டது – சிறந்த துணை நடிகைக்கான சிகாகோ பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன் விருது சிறந்த பிரித்தானிய நடிகைக்கான எம்பயர் அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்

2001 அமெரிக்காஸ் ஸ்வீட் ஹார்ட்ஸ் ஜுவன் ஹாரிசன்
2002 சிகாகோ வெல்மா கெல்லி சிறந்த துணை நடிகைக்கான அகாடமி விருது

துணைப்பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருது சிறந்த நடிகர்களுக்கான பிராட்காஸ்ட் பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன் விருது சிறந்த துணை நடிகைக்கான பிராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருது சிறந்த நடிகைக்கான ஈவ்னிங் ஸ்டாண்டர்டு பிரித்தானிய பிலிம் அவார்டு சிறந்த துணை நடிகைக்கான ஃபொனிக்ஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி அவார்டு நகரும் படத்தில் மிகச் சிறந்த நடிப்பிற்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது நடிகைகளில் துணைப்பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் நியமனம்செய்யப்பட்டவை -- சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது - திரைப்பட இசை அல்லது நகைச்சுவை சிறந்த துணை நடிகைக்கான ஆன்லைன் ஃபிலி கிரிட்டிக்ஸ் சொசைட்டி அவார்டு பரிந்துரைக்கப்பட்டது — சிறந்த கதாப்பாத்திரத்திற்காக ஃபொனிக்ஸ் பிலிம் கிரிடிக்ஸ் சொஸைட்டி விருது

2003) 2003) சிண்பாத் மரினா குரல் பாத்திரம்
இன்டோலரபிள் குருயல்டி மெர்லின் ரெக்ஸ்ரோத்
2004 தி டெர்மினல் அமெலியா வாரன்
ஓசென்'ஸ் ட்வல் இசபெல் லஹிரி பரிந்துரைக்கப்பட்டது — சிறந்த கதாப்பாத்திரத்திற்காக பிராட்கேஸ்ட் பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேஷன் விருது
2005 தி லெஜண்ட் ஆஃப் ஜாரோ எலேனா டி லா வேகா முரிட்டா பிடித்த பெண் ஆக்ஷன் ஸ்டாருக்கான பீப்பிள்ஸ் சாய்ஸ் அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்
2007 நோ ரிசர்வேஷன் கேத் ஆம்ஸ்ட்ராங்
2008 டெத் டிஃவையிங் ஆக்ட்ஸ் மேரி மெக்கார்வீ
2009 தி ரோபவுண்ட் சாண்டி
2011 க்ளியோ க்ளியோபாட்ரா ப்ரீ-புரோடக்ஷனில்

கௌரவங்கள்

[தொகு]

சிகாகோவில் (2002) நடித்ததற்காக, ஜீடா-ஜோன்ஸ் அகாடமி விருது, திரை நடிகர்கள் கில்ட் விருது மற்றும் சிறந்த துணை நடிகைக்கான பாஃப்டா விருது வழங்கப்பட்டது.[23] டிராபிக் திரைப்படத்தில் நடித்தற்காக அவர் இரண்டு கோல்டன் குளோப் விருது பரிந்துரைகளைப் பெற்றுள்ளார்: சிறந்த துணை நடிகை (2000) மற்றும் நகைச்சுவை அல்லது மியூசிகல் விருதினை சிகாகோவில் நடித்தற்காகப் பெற்றார். (2002).[24]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Catherine Zeta Jones: a profile". த டெயிலி டெலிகிராப். 13 April 2011 இம் மூலத்தில் இருந்து 17 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120617055050/http://www.telegraph.co.uk/news/celebritynews/8449695/Catherine-Zeta-Jones-a-profile.html. பார்த்த நாள்: 7 February 2013. 
  2. Johnston, Sheila (12 June 2010). "Catherine Zeta-Jones: the evergreen girl of the valleys". The Daily Telegraph இம் மூலத்தில் இருந்து 2 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140102220150/http://www.telegraph.co.uk/news/celebritynews/7823667/Catherine-Zeta-Jones-the-evergreen-girl-of-the-valleys.html. பார்த்த நாள்: 7 February 2013. 
  3. "Catherine Zeta-Jones". People இம் மூலத்தில் இருந்து 26 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130126132041/http://www.people.com/people/catherine_zeta-jones. பார்த்த நாள்: 7 February 2013. 
  4. Adams, Guy (16 April 2011). "Catherine Zeta-Jones: Darling bud with a steely core". The Independent இம் மூலத்தில் இருந்து 20 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160420172820/http://www.independent.co.uk/news/people/profiles/catherine-zeta-jones-darling-bud-with-a-steely-core-2268655.html. பார்த்த நாள்: 5 April 2016. 
  5. Zipes, Jack; Greenhill, Pauline (16 September 2015). Fairy-Tale Films Beyond Disney: International Perspectives. Routledge. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-62813-1. Archived from the original on 7 November 2017.
  6. "Philippe de Broca". 29 November 2004 இம் மூலத்தில் இருந்து 1 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160301102111/http://www.telegraph.co.uk/news/obituaries/1477725/Philippe-de-Broca.html. 
  7. Strejcek. "Catherine the great" இம் மூலத்தில் இருந்து 3 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303181233/http://www.seasonmagazine.com/profiles/czeta-jonesw05.htm. 
  8. "Face of the Day: Catherine Zeta Jones". 20 June 2000 இம் மூலத்தில் இருந்து 18 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160418051057/http://www.heraldscotland.com/news/12193837.Face_of_the_Day__Catherine_Zeta_Jones/. 
  9. Kennedy (13 June 2004). "Catherine Zeta Jones has arrived, but don't make a big deal about it" இம் மூலத்தில் இருந்து 16 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160416101122/http://159.54.226.237/04_issues/040613/040613zetajones.html. 
  10. Butzel; Lopez (January 1994). Mediating the National. Taylor & Francis. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7186-0570-5. Archived from the original on 1 March 2017.
  11. Strauss (24 July 1998). "'Zorro' Star Rose from 'Titanic'" இம் மூலத்தில் இருந்து 17 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160417141255/http://articles.philly.com/1998-07-24/news/25736750_1_zorro-titanic-catherine-zeta-jones. 
  12. "The Mask of Zorro (1998)". Rotten Tomatoes. Archived from the original on 22 August 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
  13. "The Mask of Zorro (1998)". பாக்சு ஆபிசு மோசோ. 31 December 1998. Archived from the original on 18 August 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
  14. Otto, Jeff (26 October 2005). "Interview: Catherine Zeta-Jones". IGN. Archived from the original on 27 July 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
  15. "1999 MTV Movie Awards". MTV. Archived from the original on 30 June 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
  16. Graser, Marc (24 February 2012). "Heavy Hitters". Variety: p. 8. 
  17. Scott, A. O. (6 December 2012). "She Came to Sin City for a Wholesome Life". The New York Times இம் மூலத்தில் இருந்து 26 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151226113632/http://www.nytimes.com/2012/12/07/movies/lay-the-favorite-directed-by-stephen-frears.html. பார்த்த நாள்: 31 May 2016. 
  18. "Rock of Ages (2012)". Rotten Tomatoes. Archived from the original on 22 August 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
  19. "Rock of Ages (2012)". Box Office Mojo. 16 August 2012. Archived from the original on 5 August 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
  20. "Playing for Keeps (2012)". Rotten Tomatoes. Archived from the original on 21 August 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
  21. Adams, Guy. "Catherine Zeta-Jones: Darling bud with a steely core". 
  22. Lane, Harriet. "Review: Ain't Miss Behaving". 
  23. Brocks, Emma (14 December 2009). "Singing and acting, but not at the same time – Zeta-Jones falters on Broadway". The Guardian இம் மூலத்தில் இருந்து 2 August 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150802024940/http://www.theguardian.com/film/2009/dec/14/catherine-zeta-jones-broadway-musical. பார்த்த நாள்: 14 August 2015. 
  24. "Golden Globe Awards for 'Catherine Zeta-Jones'". Hollywood Foreign Press Association. Archived from the original on 20 April 2016. பார்க்கப்பட்ட நாள் 7 April 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்தரின்_சீட்டா-ஜோன்ஸ்&oldid=3924890" இலிருந்து மீள்விக்கப்பட்டது