கேதா சத்தியாக்கிரகம், 1918

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேதா சத்தியாகிரகம்
1918இல் மோகன்தாசு கரம்சந்த் காந்தி கேதா சத்தியாக்கிரகத்தை வழிநடத்தியபோது.
ஆங்கிலப்பெயர்கேதா சத்தியாகிரகம்
நாள்1918
அமைவிடம்குசராத்தின் கேதா மாவட்டம், இந்தியா பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
புரவலர்(கள்)tap
ஏற்பாடு செய்தோர்மோகன்தாசு கரம்சந்த் காந்தி,வல்லபாய் பட்டேல் இந்துலால் யாக்னிக், சங்கர்லால் பேங்கர், மகாதேவ தேசாய், நரஹரி பாரிக், மோகன்லால் பாண்டியா மற்றும் இரவி சங்கர் வியாசு

கேதா சத்தியாக்கிரகம் (Kheda Satyagraha) என்பது பிரிட்டிசார் ஆண்ட காலத்தில் இந்தியாவின் குசராத்தின் கேதா மாவட்டத்தில் 1918 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஏற்பாடு செய்த ஒரு சத்தியாகிரக இயக்கமாகும். இது இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு பெரிய கிளர்ச்சியாக இருந்தது. இது சம்பரண் சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய சத்தியாக்கிரக இயக்கமாகும்.[1] விவசாயிகளை ஆதரிப்பதற்காக காந்தி இந்த இயக்கத்தை ஏற்பாடு செய்தார் [2]

தலைவர்கள்[தொகு]

குசராத்தில், மகாத்மா காந்தி முக்கியமாக போராட்டத்தின் ஆன்மீகத் தலைவராக இருந்தார். இவரது தலைமைத் தளபதி, சர்தார் வல்லபாய் படேல் மற்றும் அர்ப்பணிப்புள்ள காந்தியர்களின் நெருங்கிய கூட்டாளிகளான் இந்துலால் யாக்னிக், சங்கர்லால் பேங்கர், மகாதேவ் தேசாய், நரஹரி பாரிக், மோகன்லால் பாண்டியா மற்றும் இரவிசங்கர் வியாசு ஆகியோர் கிராமப்புறங்களில் சுற்றுப்பயணம் செய்து, கிராமப்புற மக்களை வழிநடத்தி, அரசியல் வழிநடத்துதலை வழங்கினர்.[3] அகமதாபாத் மற்றும் வதோதரா நகரங்களில் இருந்து பல குசராத்திகள் கிளர்ச்சி அமைப்பாளர்களுடன் இணைந்தனர். ஆனால் காந்தியும் படேலும் மற்ற மாகாணங்களைச் சேர்ந்த இந்தியர்களின் ஈடுபாட்டை எதிர்த்தனர். இது முற்றிலும் குசராத்தி போராட்டமாக இருக்க முயன்றனர்.

போராட்டம்[தொகு]

படேலும் அவரது சகாக்களும் ஒரு பெரிய வரி கிளர்ச்சியை ஏற்பாடு செய்தனர். மேலும் (கேதா) அனைத்து வெவ்வேறு இன மற்றும் சாதி சமூகங்களும் அதைச் சுற்றி திரண்டன. கேதாவின் விவசாயிகள் பஞ்சத்தை அடுத்து அந்த ஆண்டுக்கான வரி விலக்கப்பட வேண்டும் என்று மனுவில் கையெழுத்திட்டனர். மும்பையில் உள்ள அரசாங்கம் இதனை நிராகரித்தது. விவசாயிகள் வரி செலுத்தவில்லை என்றால், நிலங்களும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என்றும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தது.

வரி நிறுத்தி வைக்கப்பட்டது, அரசாங்கத்தின் வரி சேகரிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் குண்டர்களைக் கொண்டு சொத்து மற்றும் கால்நடைகளை பறிமுதல் செய்ய ஆரம்பித்தனர். அதே நேரத்தில் காவல்துறையினர் நிலங்களையும் அனைத்து விவசாய சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர். விவசாயிகள் கைது செய்வதை எதிர்க்கவில்லை. ஆனாலும் வன்முறையில் ஈடுபடுவோரை எதிர்த்து பதிலடி கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் பணத்தையும் மதிப்புமிக்க பொருட்களையும் பயன்படுத்தி குசராத் சபைக்கு அதிகாரப்பூர்வமாக போராட்டத்தை ஏற்பாடு செய்தனர் .

ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை அடிப்படையில் இந்த கிளர்ச்சி வியக்க வைத்தது. அவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள், நிலம் மற்றும் வாழ்வாதாரங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டபோதும், கேதாவின் விவசாயிகளில் பெரும்பான்மையானவர்கள் படேலின் ஆதரவில் உறுதியாக ஒற்றுமையாக இருந்தனர். மற்ற பகுதிகளில் கிளர்ச்சிக்கு அனுதாபம் கொண்ட குசராத்திகள் அரசாங்க இயந்திரங்களை எதிர்த்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் உறவினர்கள் மற்றும் சொத்துக்களை அடைக்க உதவினர். பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை வாங்க முயன்ற இந்தியர்கள் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டனர். சர்துல் சிங் கவீஷர் போன்ற தேசியவாதிகள் மற்ற பகுதிகளில் அனுதாபக் கிளர்ச்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும், காந்தி மற்றும் படேல் இந்த யோசனையை உறுதியாக நிராகரித்தனர்.

விளைவு[தொகு]

அரசாங்கம் இறுதியாக இரு தரப்பினருக்கும் ஒரு சாதகமான ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்றது. அந்த ஆண்டிற்கான வரி, அடுத்தது இடைநிறுத்தப்படும் என்றும், வீதத்தின் அதிகரிப்பு குறைக்கப்படும் என்றும் அதே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சொத்துகளும் திருப்பித் தரப்படும் என்றும் கூறியது.

பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை உரிமையாளர்களுக்கு திரும்பப்பெற நிலங்களை வாங்கியவர்கள் ஒத்துழைத்தனர். பிரிட்டிசார் அதிகாரப்பூர்வமாக வாங்குபவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறியிருந்தாலும், கைப்பற்றப்பட்ட நிலங்களை வாங்கியவர்கள் அவற்றை திருப்பித் தருவதில் செல்வாக்கு செலுத்தினர்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதா_சத்தியாக்கிரகம்,_1918&oldid=3447210" இலிருந்து மீள்விக்கப்பட்டது