கேதாரகௌரி விரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கேதார கௌரி விரதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கேதாரம் என்பது இமயமலைசாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தெவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்நாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரிவிரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது.

முன்னொருகாலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருக்கின்றார். பிருங்கிகிருடி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பியைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலைமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌதமுனிவரின் ஆச்சிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விழங்கியது. ஓமத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வீடுதிரும்பிய மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆச்சிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து செய்துவிட்டு அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் என்று எல்லாரும்போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்து எமக்கு அருள் புரிகின்றாள். இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனின் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார்.

கேதாரேஸ்வர விரதம் அனுஷ்டிக்கும் முறை[தொகு]

ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ட தசமியில் இவ்விரத்த்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து பூக்கள் வில்வம் முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரை அன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.ேகதுகர்ிகஸவப

இவ்விரத்தை அனுஷ்டிக்கக் கூடியவர்கள்[தொகு]

ஐந்து மாதங்களிற்கு மேல் கர்ப்பிணியாக இல்லாத பெண்களும் மாதவிலக்கு நீக்கப்பெற்ற பெண்களும் 21 நாட்கள் விரதமிருக்கலாம். ஏனையோர் மாதவிலக்கு அம்முறை வந்தபின் அமாவாசைத் திதிக்கு முன்னுள்ள 9 நாட்களோ 7 நாட்களோ மூன்று நாட்களோ அல்லது அன்றைய தினமோ இவ் விரத்த்தை அனுஷ்டித்து 21 முடிச்சிட்ட கயிற்றை இடது புஜத்திலோ அல்லது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம். கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபடவேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்ட்க்கலாம்.

பூலோகத்தில் இவ்விரதம் பரவிய முறை[தொகு]

சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்ர்வராஜனுக்கு கூறியருளினார். விரத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து வைசிய குலத்துப் பெண்களான புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தாகள். மிகவும் வறுமையினால் வாடிய இவ்விரத்த்தை அனுஷ்டிக்க சிவபெருமான் தோன்றி இவர்களுக்கு வேண்டிய செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் கொடுத்தருளினார்.

{{அனைவருக்கும் வணக்கம். இந்த விரதம் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இங்கு ஆவணிமாதம் வளர்லிறை நவமியில் ஆரம்பித்து புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு முன்தினம்வரை 21 நாட்கள் நடைபெறுகிறது. வாய்ப்பு உள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவேண்டுகிறேன். எம்.பிரகாசம்}}

அர்த்தநாரீஸ்வரர்

விரதபலன்[தொகு]

தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்

[1]

கேதார கௌரி விரத கதை பாட்டு வடிவில்..

காப்பு ஆதி பரமேஸ்வரியே ஆண்டவனைப் பூசித்துப் பாதியிடம் பெற்ற பரிசு தனை- நீதியுடன் சொன்னவர்கள் கேட்டவர்கள் சோர்வின்றி நோற்றவர்கள் துன்னுவரே பல்வளனும் தோய்ந்து

நூல் வெள்ளியங்கிரியென விளங்கு கைலையில் உள்ளந்தோறும் உறையும் ஒருவன் உமையொரு பாகனாய் உன்னதரேத்த இமையா முக்கண் திகழ் இறையவனாய் புன்னகை பொங்கும் திருமுகம் பொலிய வன்மையுடனே விளங்கிடும் பொழுதில் விண்ணக அழகியரில் வியன் புகழுடையாள் கண்கள் வியக்கும் கவினுடை ரம்பை பண்ணுடை இசைக்குப் பரதம் பயின்றாள்

பிருங்கி என்னும் பெருந்தவ முனிவனும் கருத்தை மயக்கும் இந்நாட்டியம் கண்டு விருப்பம் மிகுந்த விகடநடனத்தால் கருணைக் கௌரிகாந்தனைப் போற்ற அண்ணலும் பிருங்கியை அனுக்கிரகிக்க பண்ணும் சிவநெறிப் பிருங்கிப் பித்தர் மண் சுமந்திட்ட கடவுளை மட்டும் சுற்றி வந்தே சம்போ மகாதேவவென்று பற்றுதலுடனே பன் முறை போற்றி வற்றாக்கருணை உமையை வணங்கா உற்ற திடமுடன் நிலவுலகு மீள முற்றும் துறந்த பிருங்கியாம் முனிவன் சற்றும் தன்னை மதியாமை கண்டு சக்தி தரும் சங்கரி மிகக்கோபித்து தக்க தண்டனை தருவோம் யாமென துக்கமுண்டாக அவன் சரீரத்திலங்கு சக்தியெல்லாம் நீங்கவே சபித்தாள்

நண்டொடு பன்றிக்கும் நல்லருள் சுரக்கும் அண்ணலோ பிருங்கியின் அவலம் கண்டு தண்டமொன்றை அவன் தாங்க அளித்து பெண்ணுடை செயற்கு எதிர் செயலாக திண்மை கொடுத்திட தீரனாம் முனிவனும் அட்டகாசனாய் விகடமாய் ஆடி நட்டம் பயில் நாதனைப் போற்றிட எட்டுத்திசையும் ஏத்தும் அம்மை வெட்கம் மிகுந்து வேதனை கொண்டு கைலையை விட்டு காசினிபுகுந்து கானகம் தோறும் சுழன்று திரிந்து அலையும் மனதை அடக்கியகௌதமன் நிலையிலா இன்பம் நாடா முனிவனகத்து கலை நிறை பூங்காவின் மரமொன்றிலே இலை மறை காயாய் இனிதுறைந்திட்டாள்

மாரி குன்றி மலரெல்லாம் வாடி சீரியல் சிதறி செந்நெறி மறைந்து பாரிலே பாலைவனம் எனக்கிடந்த பேரியல் அவ்வனம் பெரிதும் மலர்ந்து கூர்விழி கொண்ட கௌரி மீனாளுற்ற பேருவகையாலே பொலிவுறச் சிறந்து அந்தணர் மகிழ ஆவினம் சிறக்க சுந்தர மலர்கள் சுகந்தம் பரப்ப சந்ததம் குளிர்ந்த சந்தோஷம் தெரிந்து தந்தை போலும் கௌதம மறையோன் முந்தைப் பிணக்கால் மாதிரிபுரசுந்தரி வந்த தன்மை உணர்ந்தே வணங்கிப் பந்தமுறவே பாங்குறப் போற்றினன்

அர்த்த நாரியாய் அரனார் உடலில் பர்த்தா பத்தினி பேதம் ஒளிய இருவர் என்னும் இயல்பு இல்லாமல் ஒருவர் என்னும் உயர்வே ஓங்க கிருபை பொலியும் காட்சியே தோன்றும் அருளைப் பெறும் வகை அருள்கநீரே என்று அம்மை வேண்ட அம்மாமுனிவனும் தன் புண்ணியப்பயன் போலுமிதுவென கன்னல் மொழியன் கௌதமன் மகிழ்ந்து பன்முறை போற்றி கேதாரகௌரியென்ற வன்மை நிறை விரத முறைமையை அம்மைக்குச் சொல்ல அவளும் மகிழ்ந்து எம்பிரானை நோக்கி நோன்பு முயன்றாள்

புரட்டாதித் திங்கள் புகழ் அமாவாசை இரவு கழிந்த ஈரைந்தாம் நாளாம் வரம் மிகத்தரு விஜயதசமி தொட்டு இருபத்தொரு நாள் இறைவனை நோக்கி கருணை மிக்க காமவல்லி நோற்று வரும் சதுர்த்தசியில் வாழ்வு சிறக்க இருபத்தொரு முடிச்சுஇட்ட காப்பிழை கரத்தில் அணிந்தாள் காரிகையாளே

மான்மழு ஏந்திய மாநாற் கரத்தராய் வான் மண் ஏத்திட வெள்விடையேறி தேன்நிறை கூந்தல் தேவி முன்பு கோன் என மணவாளக்கடவுள் தோன்றி நோன்பினை ஏற்றோம் நொந்தனையோ என்றே வினவி எம்மன்னை கௌரியை தன்னோடு அணைத்தே தந்தோம் இடம் என்று இனிய மொழிபேசி நடமிடு நாயகர் உருவம் மாறினன்

அப்பனும் அம்மையும் ஆங்கே இணைந்து இப்புவி ஏத்த அர்த்தநாரீசனாய் இலங்கு செப்பருவடிவம் கொண்டனர்; அதனை தப்பிலாப் பிருங்கியொடு கௌதமர் விண்ணகத்தர் மண்ணவர் யாவரும் கண்களி கூரமகிழ்ந்தே போற்றினர்

எம்மை நோக்கி இவ்விரதத்தை முறையாய் இம்மையில் நோற்பவர் இன்பமெல்லாம் பெறுவர் நம்புமின் இதைஎன்றே நாயகஅர்த்தநாரீசர் மொழிந்தே அருளினர் போற்றினர் யாவரும்

அன்று தொட்டே ஆடவர் மங்கையர் என்னும் யாவரும் ஏற்றம் பொங்க மண்ணுலகத்தில் மணவாழ்வு உண்டாக பண்ணும் செயல்கள் பலிதமுண்டாக செல்வம் ஓங்க சீர்மைகள் பொலிய பல்வகை இன்பமுடன் பரகதிகிட்ட கேதாரகௌரியுடன் கடவுளைப் போற்றி தீதில் நோன்பு நோற்றுச் சிறந்தார்

எழுதியவர்- நீர்வை.தி.மயூரகிரிசர்மா

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. திருமதி ஸ்ரீ வித்யாரஞ்சனி, திருகோணமலை விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக மலர், 1999

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதாரகௌரி_விரதம்&oldid=1548443" இருந்து மீள்விக்கப்பட்டது