கேதம்பாடி ராமையா கௌவுடா
கேதம்பாடி ராமையா கௌடா Kedambadi Ramaiah Gowda | |
---|---|
பிறப்பு | சுல்லியா, தெற்கு கன்னட மாவட்டம், கூர்க் பேரரசு |
அறியப்படுவது | அமர சுல்லியா கிளர்ச்சி |
பட்டம் | Zameendar |
கேதம்பாடி ராமையா கௌடா (Kedambadi Ramaiah Gowda) ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். [1], சுல்லியாவிலிருந்து விவசாயிகளை ஒன்றிணைத்து 1837 ஆம் ஆண்டில் அமர சுல்லியா கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார். கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான முதல் சுதந்திர இயக்கம் என்று அறியப்படும் இந்நிகழ்வில் பிரித்தானிய கொடியை இறக்கிவிட்டு ராமையா இந்தியக் கொடியை ஏற்றினார். [2] [3]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கேதம்பாடி ராமையா கௌடா அரே பாசே சமூகத்தைச் சேர்ந்தவராவார். கூர்க் இராச்சியத்தின் இரண்டாம் லிங்க ராசேந்திரனுடன் இவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இரண்டாம் லிங்க ராசேந்திரனுக்குப் பிறகு, அவரது மகன் சிக்க வீரராசேந்திராவும் கேதம்பாடி ராமையா கௌடாவுடன் நல்லுறவு கொண்டிருந்தார். [4]
சுதந்திரப் போராட்டத்தில்
[தொகு]கெடம்பாடி ராமையா கௌடா, பிரித்தானியர் விதித்த வரி, புகையிலை மற்றும் உப்பு வரிகள் செலுத்துவதை எதிர்த்தார். கிளர்ச்சியைத் தொடங்குவதற்காக 1837 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30 ஆம் தேதியன்று சுல்லியா தாலுகாவில் உள்ள உபரட்கா மித்தூரில் இருந்து புறப்பட்டார்.. பல ஆட்சியாளர்களை பிரித்தானிய அரசுக்கு எதிரான தனது கிளர்ச்சியில் சேர்க்க முயற்சித்தார். ராமையாவின் இராணுவம் (முதன்மையாக தட்சிண கன்னடா மாவட்ட விவசாயிகள்) பிரித்தானிய இராணுவத்தை தோற்கடிப்பதில் வெற்றி பெற்றது. 1837 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி பௌடகுடாவில் குடகு ஆலேரி வம்சத்தின் கொடியை ஏற்றுவதற்கு முன்பு அவர்கள் ஒன்றியக் கொடியை இறக்கினர். கொடியை ஏற்றிய பதின்மூன்று நாட்களுக்குப் பிறகு அமர சுல்லியாவின் கிளர்ச்சி பிரித்தானிய இராணுவத்தால் நசுக்கப்பட்டது. விவசாயப் போராளிகளால் மங்களூரைக் காப்பாற்ற முடியவில்லை . [5] . பிக்குரு நாயக்கர் கட்டேயில் பல தலைவர்கள் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டனர்.. உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.. உடல்கள் கழுகுகளுக்கு இரையாக்கப்பட்டன. , 5 ஏப்ரல் 1837 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதியன்று கேதம்பாடி ராமையா கௌடா, அவரது மகன் சனையா கௌவுடா மற்றும் சில சுதந்திரப் போராளிகள் பிரித்தானிய அரசாங்கத்தால் சிங்கப்பூர் மற்றும் பர்மா போன்ற பிற நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
மரபு
[தொகு]சுதந்திரப் போராட்டத்தில் இவர் ஆற்றிய பங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மங்களூரில் உள்ள பௌடகுடாவில் கேதம்பாடி ராமையா கௌடாவின் 22 அடி உயர வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது. [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1837: When the rebel flag fluttered high" (in en). 6 April 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/060416/1837-when-the-rebel-flag-fluttered-high.html.
- ↑ "Memorial for martyrs to come up in Bengaluru, says CM Bommai". Deccan Herald (in ஆங்கிலம்). 19 November 2022.
- ↑ Bureau, The Hindu (28 August 2022). "Kedambady Ramayya Gowda's statue to be brought to Mangaluru on August 29". The Hindu (in Indian English).
- ↑ https://kannada.hindustantimes.com/karnataka/kedambadi-ramaiah-gowda-history-who-was-kedambadi-ramaiah-gowda-freedom-fighter-s-bronze-statue-inauguration-today-181668828846694.html
- ↑ "Amara Sullia uprising gets due recognition on its 185th anniversary". Deccan Herald (in ஆங்கிலம்). 6 April 2022.
- ↑ "Mangaluru: Bommai unveils freedom fighter Kedambadi Ramaiah Gowda’s statue" (in en). www.daijiworld.com. https://www.daijiworld.com/news/newsDisplay?newsID=1021357.