கேண்டீஸ் பிண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேண்டீஸ் பிண்டோ
2017இல் பிண்டோ
பிறப்புமும்பை, இந்தியா
உயரம்5 அடி 8 அங்குலம்

கேண்டீசு பிண்டோ (Candice Pinto) என்பவர் ஓர் இந்திய வடிவழகி ஆவார். இவர், மிஸ் டூரிஸம் இன்டர்நேஷனல் 2002” அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார்..[1][2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

பிண்டோ இந்தியாவில் உள்ள மும்பையில் ஒர் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோரில் ஒருவர் கோவாவைச் சேர்ந்தவர். மற்றவர் மங்களூரைச் சேர்ந்தவர்.[2] இவருடன் உடன் பிறந்தவர்கள் மூவர். மும்பை புறநகர்ப் பகுதியான குர்லாவில் திரு இருதய உயர்நிலைப்பள்ளி படித்தார். பின்னர் மும்பையின் சியோன் பகுதியிலுள்ள தென்னிந்திய கல்விச் சங்கக் கல்லூரியில் பட்டம் பெற்றார். இங்கு இவர் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.[1]

இவர், கல்லூரி நாட்களில் தன் சகோதரனுடன் அழகிப் போட்டிகளில் தோன்றுவதை விரும்பினார். இதை ஆரம்பத்தில் இவரது குடும்பத்தினர் விரும்பவில்லை என்றாலும், பின்னர் கிளாட்ராக்ஸ் அழகிப் போட்டிகளில் கலந்து கொள்ள உதவினார்கள்.[3] After her graduation, she had fancied a career as an animator and has plans to take it up someday.[4]

தொழில்[தொகு]

மார்ச் 2000இல் நடைபெற்ற ஏழாவது கிளாட்ராக்ஸ் மெகா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு தனது முதல் அழகிப் பட்டத்தை வென்ற பிறகு இவர் தனது 19 வயதில் புகழ் பெற்றார். ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச மெகா அழகிப் போட்டியிலும், மிஸ் இன்டர் கான்டினென்டல் போட்டியிலும் இவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2001ஆம் ஆண்டில் ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற உலகின் சிறந்த அழகிப் போட்டியில் இவர், முதல் பத்து பேரில் ஒருவராக இடம் பெற்று 'சிறந்த உடலமைப்பை உடையவர்' என்ற பட்டத்தை வென்றார். அடுத்த ஆண்டு, இவர் முடிசூட்டப்பட்ட முதல் இந்தியரானார். பன்னாட்டு அளவில் மலேசியாவில் நடைபெற்ற மிஸ் டூரிஸம் இன்டர்நேஷனல் என்ற அழகிப் போட்டியிலும், மிஸ் ஃப்ரெஷ் பேஸ் 2002 என்பதிலும் வெற்றி பெற்ற முதல் இந்தியரானார்.[1][5]

தொடர்ந்து, லக்மே ஃபேஷன் வீக், இந்தியா பேஷன் வீக் போன்ற முதன்மையான அழகிப் போட்டிகளில் கேண்டீசு வழக்கமான பங்கேற்று வருகிறார். இவர் இந்தியா பேஷன் என்ற பத்திரிகையின் அட்டைகளில் தவறாமல் காணப்படுகிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Candid Candice seeks out her creative self". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 28 April 2004. Archived from the original on 1 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 August 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 2.2 "Candice Pinto: 'I don't follow fashion trends'". Rediff.com. 18 September 2009. பார்க்கப்பட்ட நாள் 25 August 2014.
  3. "The Show Goes On". OPEN. 13 April 2013. பார்க்கப்பட்ட நாள் 25 August 2014.
  4. "Inside the modelling world". மிட் டே. 4 May 2014. பார்க்கப்பட்ட நாள் 25 August 2014.
  5. "Of hunks and beauties". இந்தியன் எக்சுபிரசு. 8 April 2000. Archived from the original on 12 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 25 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேண்டீஸ்_பிண்டோ&oldid=3931717" இலிருந்து மீள்விக்கப்பட்டது