உள்ளடக்கத்துக்குச் செல்

கேடயச் சுரப்பி புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேடயச் சுரப்பி புற்றுநோய் (Thyroid cancer) என்பது கேடயச் சுரப்பியில் உள்ள இழையங்களில் வளரக்கூடிய ஒரு வகையான புற்று நோய் ஆகும்.[1] இந்த வகையான நோய்களில் உயிரணுக்கள் அதிக அளவில் வளர்ச்சிபெற்று மனித உடலின் மற்ற பாகங்களுக்கும் இந்த நோயினைப் பரப்பும் தன்மையைக் கொண்டுள்ளது.[2][3] கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி வருதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

மிக இளம் வயதில் கதிர்வீச்சு வெளிப்பாடு , முன்கழுத்துக் கழலை ஏற்படுதல், மற்றும் மரபு வழி ஆகியன பாதிக்கப்படுவதற்கான காரணிகளாகக் கருதப்படுகின்றன.[4][5] இது நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. சதைக் காம்பு கேடயப் புற்றுநோய், நுண்குமிழ் கேடயப் புற்றுநோய், முகுளப் புற்றுநோய் மற்றும் உத்துருவம் கேடயப் புற்றுநோய் ஆகியனவாகும்.[6] செவியுணரா ஒலி மற்றும் நல் ஊசி உறிஞ்சுதல் மூலம் இவ்வகையான நோய்களைக் கண்டறியலாம்.[4]

கதிரியக்க சிகிச்சை, வேதிச் சிகிச்சை போன்ற முறைகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.[7] அறுவை சிகிச்சைகளின் போது நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளையும் நீக்க வேண்டிய தேவை இருக்கலாம்.[8] அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 98 விழுக்காடு மக்கள் 5 ஆண்டுகள் உயிர்வாழும் விகிதத்தில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.[9]

2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி 3.2 மில்லியன் மக்கள் கேடயச் சுரப்பி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டனர். 2012 இல் 2,98,000 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.[10] இதில் பெரும்பானமையான மக்கள் 35 மற்றும் 65 வயதில் இருந்தனர்.[11] இந்நோயினால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்.[11] ஆசிய வழித்தோன்றல்களில் இருந்து வந்த மக்களே பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டனர்.[12] கடந்த சில ஆண்டுகளில் நோயினைக் கண்டறியும் விதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.[10] 2015 இல் இந்த நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 31,900 ஆக கண்டறியப்பட்டுள்ளது.

நிலைகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "Thyroid Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 27 ஏப்பிரல் 2017. Archived from the original on 15 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
 2. "Cancer Fact sheet N°297". World Health Organization. பெப்பிரவரி 2014. Archived from the original on 29 திசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2014.
 3. "Defining Cancer". National Cancer Institute. Archived from the original on 25 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2014.
 4. 4.0 4.1 "Thyroid Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 27 ஏப்பிரல் 2017. Archived from the original on 15 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
 5. Carling, T.; Udelsman, R. (2014). "Thyroid Cancer". Annual Review of Medicine 65: 125–37. doi:10.1146/annurev-med-061512-105739. பப்மெட்:24274180. 
 6. "Thyroid Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 12 மே 2017. Archived from the original on 16 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
 7. "Thyroid Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 27 ஏப்பிரல் 2017. Archived from the original on 15 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
 8. "Thyroid Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 12 மே 2017. Archived from the original on 16 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
 9. "Cancer of the Thyroid - Cancer Stat Facts". seer.cancer.gov (in ஆங்கிலம்). Archived from the original on 15 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
 10. 10.0 10.1 World Cancer Report 2014. World Health Organization. 2014. pp. Chapter 5.15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9283204298.
 11. 11.0 11.1 "Cancer of the Thyroid - Cancer Stat Facts". seer.cancer.gov (in ஆங்கிலம்). Archived from the original on 15 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
 12. "Thyroid Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 12 மே 2017. Archived from the original on 16 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.

வெளியிணைப்புகள்[தொகு]