கேசவரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேசவரெட்டி
பிறப்பு(1946-03-10)10 மார்ச்சு 1946
Thalapula Palli, சித்தூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு13 பெப்ரவரி 2015(2015-02-13) (அகவை 68)
நிசாமாபாத் (தெலுங்கானா)
தொழில்எழுத்தாளர் மற்றும் மருத்துவர்
தேசியம்இந்தியன்
காலம்1970–2015
வகைஅபுனைவு
துணைவர்தீராமதி
பிள்ளைகள்2

கேசவரெட்டி (ஆங்கிலம்: Kesava Reddy, தெலுங்கு: పి కేశవ రెడ్డి ) என்பவர் நன்கறியப்பட்ட தெலுங்கு நாவல் எழுத்தாளர் ஆவார்.[1] இவர் ஆந்திரமாநிலத்தில் பிறந்தவர். இந்தியாவின் முக்கிய சமூகப்பிரச்சினைகளான வறுமை, சமத்துவம் இன்மை, மக்களிடையே பரவலாக உள்ள மூடநம்பிக்கைகள் பற்றி தன் எழுத்துக்களில் பேசினார். சமூகப்பொறுப்புகளின்பால் மக்களை உந்தித் தள்ளினார். இவர் கருத்து வாதங்களையும் பிரபல தெலுங்கு இலக்கிய உத்திகளையும் வெற்றிகரமாகத் தன் படைப்புகளில் இணைத்தார்.

வாழ்க்கை[தொகு]

கேசவரெட்டி ஆந்திரமாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தாளப்புள பள்ளி என்ற கிராமத்தில் ரங்கா ரெட்டி என்ற விவசாயிக்கு மகனாகப்பிறந்தார். தன் ஆரம்ப காலக் கல்வியை திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பயின்றார். இளநிலை மருத்துவப்படிப்பினை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பயின்றார். தோல் நோய் தொடர்பான முதுகலைப்படிப்பினை கிருத்துவ மருத்துவக்கல்லூரியிலும் பயின்றார்.

மருத்துவப்பணி[தொகு]

நிஜமாபாத் தீச்சா பள்ளி விக்டோரியா மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றினார். 2015 ல் தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத் நகரத்தில் இயற்கை எய்தினார்.

படைப்புகள்[தொகு]

இவரின் நாவல்கள் கீழே பட்டியலில் உள்ளன

ஆண்டு தலைப்பு மொழி விருதுகள்
1975 பணிசாலு - பகவானுவாச்சா - 2 நெடுங்கதைகள் ஒரு தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கு
1979 குஸ்ர தேவதை தெலுங்கு
1979 சமாசாணம் துண்ணீரு தெலுங்கு
1980 அதாடு அடவினி ஜெயிச்சாடு தெலுங்கு
1982 இராமுடு நாடு ராஜ்யமுண்டாடி தெலுங்கு
1982 அழகு நகரம் தெலுங்கு
1996 மொகவானி பிள்ளன கொருகி தெலுங்கு
1996 சிவாரி குடைஸ் தெலுங்கு
2008 முனியம்மா தெலுங்கு
2013 மொகவானி பிள்ளன கொருவி: ஒன்டிலுவின் பலாடு ஆங்கிலம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Datta, Amaresh (1987). Encyclopaedia of Indian Literature: K to Navalram. சாகித்திய அகாதமி. p. 2738.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவரெட்டி&oldid=3799990" இலிருந்து மீள்விக்கப்பட்டது