கேசவன்புத்தன்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேசவன்புத்தன்துறை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கடற்கரை கிராமமாகும். இது கன்னியாகுமரியிலிருந்து 25 கி.மீ தொலைவிலும் நாகர்கோவிலிலிருந்து 14 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அரிசியே இங்குள்ள மக்களின் பிரதான உணவாகும். இருப்பினும் மலைப்பகுதியில் வாழும் மக்கள் மரவள்ளிக்கிழங்கையும் முக்கிய உணவாக உண்கிறார்கள். இது தவிர மீன் மற்றும் இறைச்சி உணவுகளையும் அதிகமாக உண்கிறார்கள். மீனவர்கள் இரவில் மீன் பிடிக்க கடலுக்குச் செல்கின்றனர். அதிகாலையில் மீன் பிடித்துவிட்டு கடற்கரைக்கு திரும்பிவிடுகிறார்கள். அவை அருகிலுள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. இங்குள்ள மக்கள் கேரள மக்களைப் போன்று தேங்காயை உணவில் அதிகமாக சேர்க்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவன்புத்தன்துறை&oldid=3502525" இலிருந்து மீள்விக்கப்பட்டது