கேசரி பாலகிருஷ்ண பிள்ளை
கேசரி பாலகிருஷ்ண பிள்ளை | |
---|---|
![]() திருவனந்தபுரத்தின் புலிமூடு சந்திப்பில் கேசரி பாலகிருஷ்ண பிள்ளையின் சிலை | |
பிறப்பு | ஏப்ரல் 23, 1889 தம்பனூர், திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
இறப்பு | 18 திசம்பர் 1960 | (அகவை 71)
தொழில் | எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், பத்திரிகையாளர் |
தேசியம் | ![]() |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
துணைவர் | மாதவனப்பரம்பில் கௌரி அம்மா |
குடும்பத்தினர் |
|
கேசரி பாலகிருஷ்ண பிள்ளை (Kesari Balakrishna Pillai) என அழைக்கப்படும் அகதூத் பாலகிருஷ்ண பிள்ளை (1889-1960) ஒரு மலையாள எழுத்தாளரும், கலை மற்றும் இலக்கிய விமர்சகரும், பத்திரிகையாளரும் ஆவார். இவர், நவீன கேரளாவின் மிகவும் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்களில் ஒருவராக பலராலும் கருதப்பட்டார். கேசரி என்ற செய்தித்தாளின் நிறுவனர் ஆவர். மேலும், நவீன மலையாள இலக்கிய விமர்சனத்தில் மூன்று முக்கிய நபர்களான ஜோசப் முண்டச்சேரி, எம். பி. பால் ஆகியோருடன் ஒருவராக கருதப்பட்டார். கேசரியுட லோகங்கள், நவலோகம், சங்கேதிகா நிருபனங்கள் சாகித்யா நிருபனங்கள், ரூபமஞ்சரி போன்ற படைப்புகளைத் தவிர , அவுட்லைன் ஆப் தி புரோட்டோ-ஹிஸ்டாரிக் குரோனாலாஜி ஆப் வெஸ்டர்ன் ஆசியா என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு உரையையும் எழுதினார்.
சுயசரிதை[தொகு]
பாலகிருஷ்ண பிள்ளை மாதவனப்பரம்பில் கௌரி அம்மா என்பவரை 1917 இல் திருமணம் செய்து கொண்டார். இவர் தனது 1960 திசம்பர் 18 அன்று தனது 71 வயதில் இறந்தார். [1]
இலக்கியத்திற்கு பங்களிப்பு, கலை ஆய்வுகள்[தொகு]
கேரளாவின் அரசியல்வாதியும், எழுத்தாளருமான கே. பாலகிருஷ்ணன் இவரை கேரளாவின் சாக்ரடீஸ் என்று அழைத்தார். இவர், கேரளாவைச் சேர்ந்த மிகவும் செல்வாக்குமிக்க சிந்தனையாளர்களில் ஒருவராக இருந்தார். மேலும் தனது காலத்தின் பல எழுத்தாளர்களுக்கு வழிகாட்டிய பெருமை இவருக்கு கிடைத்தது . [2] இவர் தனது புதுமையான, இடைநிலை அணுகுமுறையின் மூலம் மலையாள இலக்கிய விமர்சனத்திற்கு பங்களித்தார். மேலும் கலை குறித்த இவரது எழுத்துக்கள், குறிப்பாக ஓவியம், தலைசிறந்த படைப்புகளாக கருதப்படுகின்றன. [3] [4] உலக இலக்கியத்தின் சில சிறந்த படைப்புகளை மலையாள இலக்கியங்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் மலையாள இலக்கிய விமர்சகர்களில் ஒருவராக இருந்தார். [5] மேலும் தகழி சிவசங்கரப் பிள்ளை, எஸ். கே. பொட்டெக்கட், முகம்மது பஷீர், பி. கேசவதேவ் போன்ற பல எழுத்தாளர்களுக்கு உத்வேகம் அளித்தார். [6] சமகால ஐரோப்பிய இலக்கியங்களில் இயக்கங்கள் குறித்து விரிவாக எழுதிய இவர், இலக்கிய விமர்சனத்தில் சமூகவியல் மற்றும் உளவியல் போன்ற பிற துறைகளைப் பயன்படுத்துமாறு வாதிட்டார். மாப்பசான், பல்சாக், சிக்மண்ட் பிராய்ட் , சார்லஸ் டார்வின் ஆகியோரின் படைப்புகளையும் இவர் மொழிபெயர்த்தார். பிள்ளை எழுதிய தலையங்கங்கள் பின்னர் ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்டு 2010 இல் கேசரியுட லோகங்கள் (கேசரியின் தலையங்கங்கள்) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன. [7]
முற்போக்குக் கலையும் கடித இயக்கமும்[தொகு]
1930 களில் மலையாள இலக்கியத்தின் மார்க்சிய சித்தாந்தவாதிகள் குழுவாலும் ஜோசப் முண்டசேரி, எம்.பி. பால் உள்ளிட்ட சில முற்போக்கான எழுத்தாளர்களால் "ஜீவத் சாகித்ய பிரஸ்தானம்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. [8] முற்போக்கு எழுத்தாளர்கள் மலையாள இலக்கியங்களுக்கு புதிய திசையை வழங்க முயன்றனர். மேற்கத்திய இலக்கிய மற்றும் கலாச்சார முன்னுதாரணங்களின் சகாப்தத்தில், அவர்கள் மலையாளத்தில் உரைநடை புனைகதையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். மேலும் இலக்கியத்தில் யதார்த்தவாதத்திற்கும் வாதிட்டனர். ஜீவத் சாகித்ய பிரஸ்தானம் பின்னர் "புரோகமன சாகித்ய பிரஸ்தானம்" என்று அழைக்கப்பட்டது. (கலை மற்றும் கடிதங்களுக்கான முற்போக்கு சங்கம்). [9]
இறப்பும் மரியாதையும்[தொகு]
இவர் தனது 1960 திசம்பர் 18 அன்று தனது 71 வயதில் இறந்தார். 2010இல் இவர் இறந்த 50 வது நினைவு நாளில் ஒரு விழாவுடன் கேரள அரசு திருவனந்தபுரத்தில் பிள்ளையின் சிலை ஒன்றை நிறுவியது. [10] இரண்டு பொது அரங்குகள், வடக்கு பறவூரிலுள்ள கேசரி நினைவு நகராட்சி கட்டிடம், [11] திருவனந்தபுரத்தில் புலிமூடுவிலுள்ள கேசரி நினைவு மண்டபம் ஆகியவை இவரது பெயரிடப்பட்டுள்ளன. [12] [13] கேசரி பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அருங்காட்சியகம் என்ற பெயரில் வடக்கு பறவூரில் உள்ள இவரது இல்லத்தில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. [14]
50 வது நினைவு நாள் விழாவில் கேசரி நினைவு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் எம். என் விஜயன் என்பவர் தொகுத்த இவரது எழுத்துக்களின் தொகுப்பான கேசரி ஏ பாலகிருஷ்ண பிள்ளை - கர்மவீரியதின்டே சூரியசோபா என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. [15] திருச்சூரில் கேரள லலித் கலா அகாதமியால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு கருத்தரங்கில், கேசரியுடே லோகம் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. [16] பிள்ளையின் வாழ்க்கை இரண்டு ஆவணப்படங்களாக எடுக்கப்பட்டது. முதலாவது ராஜீவ் விஜய் ராகவன் என்பவர் எழுதியது. மற்றொன்று "கேசரி" என்ற தலைப்பில் கே.ஆர் மனோஜ் என்பவர் எழுதியிருந்தார். பிந்தைய படைப்புகள் கேசரி பாலகிருஷ்ணா பிள்ளை நினைவு அருங்காட்சியகத்தில் நிரந்தரக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [14]
நூலியல்[தொகு]
கட்டுரைகளும் விமர்சங்களும்[தொகு]
- Navalokam (The New World)[17]
- Pillai, Kesari Balakrishna (2009). Outlines of the proto-historic chronology of Western Asia : with some historic chronology of ancient India appended to it. Thiruvananthapuram: Dept. of Publications, University of Kerala. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8186397961. இணையக் கணினி நூலக மையம்:553376729.
- Sankethika Nirupanangal Sahitya Nirupanangal
- Rupamanjari[18]
- Novel Prasthanangal[18]
- Vijayan, M. N., தொகுப்பாசிரியர் (2010). Kesariyude Mukhaprasangangal. DC Books. பக். 236. http://www.indulekha.com/malayalam-books/essays/kesariyude-mukhaprasangangal-essays-kesari-a-balakrishna-pillai?sort=p.model&order=ASC&limit=220.
- Kesari Balakrishna Pillai (1984). Charitrathinte Adiverukal. Kerala Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788176902496. https://www.goodreads.com/work/best_book/58102944-charitrathinte-adiverukal.
- Kesari A. Balakrishnapilla (1992) (in Malayalam). Charithra Padanangal (0 ). Bamsuri Books. http://122.165.117.71/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=59177&query_desc=au%253A%2522Kesari%2520A.%2520Balakrishnapilla%2522.
- Kesari A. Balakrishnapilla (1986) (in Malayalam). Kesariyude Sahityavimarshanangal (0 ). Sahithya Pravathaka Sahakarana. http://122.165.117.71/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=47020&query_desc=au%253A%2522Kesari%2520A.%2520Balakrishnapilla%2522.[தொடர்பிழந்த இணைப்பு]
- Kesari A. Balakrishnapilla (1985) (in Malayalam). Charithrathinte Adiverukal (0 ). Kerala Sahithya Accademi. http://122.165.117.71/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=45258&query_desc=au%253A%2522Kesari%2520A.%2520Balakrishnapilla%2522.[தொடர்பிழந்த இணைப்பு]
- Kesariyude Lokangal - Edited by M. N. Vijayan[19]
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- Love by Guy de Maupassant
- Ghosts by Henrik Ibsen
இவரைப் பற்றிய படைப்புகள்[தொகு]
- K. M. George (1989). Kesari Balakrishna Pillai. Sahitya Akademi. https://books.google.com/books?id=rtgtAAAAMAAJ.
- K. Balakrishnan (2014). Kesari Balakrishna Pillai: Keralathile Socrates. Green Books. Archived from the original on 2019-02-24. https://web.archive.org/web/20190224001747/http://www.indulekha.com/kesari-balakrishna-pillai-keralathile-socrates-biography-k-balakrishnan. பார்த்த நாள்: 2021-03-28.
- Several contributors (2010). Kesari Balakrishna Pillai: Karmaveeryathinte Sooryasobha. Government of Kerala. http://www.indulekha.com/kesari-balakrishna-pillai-karmaveeryathinte-sooryasobha-memoirs-many-authors.
- M. N. Vijayan (2010) (in Malayalam). Kesariyude Charithra Gaveshanangal (3 volumes) (1 ). State Institute of Languages, Kerala. http://122.165.117.71/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=135973&query_desc=au%253A%2522Vijayan.m.n%2522.[தொடர்பிழந்த இணைப்பு]
- Kesari A Balakrishnapilla (1982) (in Malayalam). Nava Kerala Shilpikal: Kesari. A. Balakrishna Pillai - BIOGRAPHICAL STUDIES. Kerala History Association. http://122.165.117.71/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=78325&query_desc=au%253A%2522Kesari%2520A.%2520Balakrishnapilla%2522.[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-02-23. 2019-02-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kesari Balakrishna Pillai: Keralathile Socrates". indulekha.com. 2019-02-23. 2019-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Hindu : Kerala / Kochi News : C. J. Thomas remembered". 2012-11-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-03-28 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "Archived copy". 23 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 December 2010 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ E. V. Ramakrishnan (2019-02-24). "RADICALISING LITERATURE: THE ROLE OF TRANSLATION IN THE CREATION OF A LITERARY PUBLIC SPHERE IN KERALA". openhumanitiesalliance.org. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Kesari Balakrishna Pillai - Veethi profile". veethi.com. 2019-02-23. 2019-02-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kesariyude Mukhaprasangangal". indulekha.com. 2010. 2019-02-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Statues of Trivandrum: EMS Namboodiripad". yentha.com. 2019-02-24. 2018-05-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "EMS in the literary and cultural arena". www.cpim.org. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kesari Balakrishna Pillai - Statue". thex-outdoor.nl. 2019-02-24. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Muzreesiloode Videos (2015-12-06). "Kesari Memorial Municipal Town Hall". YouTube. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Nambi Narayanan to sue sleuths, seek Rs 1 crore". Deccan Chronicle (ஆங்கிலம்). 2018-09-20. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kesari Memorial Hall – Pulimood, Trivandrum". EnteCity Places (ஆங்கிலம்). 2019-02-24. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 14.0 14.1 "Documentary to Reclaim Kesari's Genius Screened". News Experts (ஆங்கிலம்). 2016-10-03. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Modern Kerala owes much to Kesari: VS". 2010-12-19. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Modern-Kerala-owes-much-to-Kesari-VS/article15599288.ece.
- ↑ "Kesari gave new identity to Malayalam literature". article.wn.com (ஆங்கிலம்). 2019-02-24. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "A local cosmopolitan: "Kesari" Balakrishna Pillai and the invention of Europe for colonial India". Goldsmiths, University of London (ஆங்கிலம்). 2019-02-24. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 18.0 18.1 "Literary Criticism" (PDF). INFLIBNET. 2019-02-24. p. 18. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kesari books". Kerala Sahitya Akademi. 2019-02-24. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க[தொகு]
- "Kesari Balakrishna Pillai" by K. M. George, Sahitya Akademi,1990.
- "Kesari A Balakrishna Pillai - Karmaveeryathinte Sooryasobha" by Information and Public Relations Department
- "History of Media in Kerala". Kerala Media Academy (ஆங்கிலம்). 2019-02-24. 2019-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Muziris Heritage (2013-06-02). "kesari Balakrishna Pillai House in North Paravur". YouTube. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.
- "Portrait commissioned by Kerala Sahitya Akademi". Kerala Sahitya Akademi portal. 2019-02-24. 2019-02-24 அன்று பார்க்கப்பட்டது.