கேசன் நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேசன் நோய்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉட்சுரப்பியல்
ஐ.சி.டி.-10E59.
ஐ.சி.டி.-9269.3
நோய்களின் தரவுத்தளம்11941

கேசன் நோய் செலினியம் குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோய். செலினியம் மனித உடலில் மிக முக்கியமான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி ஆகும். இதன் குறைவால் செல்களில் ஆக்சிஸிஜனேற்ற பாதிப்பு ஏற்பட்டு செல் இறப்பு உண்டாகி விடும்.

பெயர்க்காரணம்[தொகு]

சீனாவில் உள்ள கேசன் மாகாணப் பகுதியில் இந்நோயின் அறிகுறிகள் முதன்முதலில் காணப்பட்டதால் இப் பெயர் ஏற்பட்டது. பின்னர் சீனாவின் வடகிழக்கு முதல் தென்மேற்கு வரை பெரும்பாலான பகுதிகளில் மண்ணில் செலினியம் குறைவாக இருப்பதால் அங்கெல்லாம் இந்நோய் ஏற்பட்டு 1960-1970 வாக்கில் பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலி கொண்டது.

அறிகுறிகள்[தொகு]

இது குழந்தைகளையும் குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களையும் பெரிதும் பாதிக்கிறது. இந்நோயால் இதயத் தசைகள் செயலிழந்து அவற்றால் குருதியை உடல் முழுதும் செலுத்த இயலாத ஒரு தேக்கநிலை (congestive cardiomyopaty) உண்டாகிறது. இதயம் செயலிழப்பதால் நுரையீரல் நீர்த்தேக்கம் (pulmonary edema) ஏற்படும். செலினியத்தைத் தருவதன் மூலம் இந்நோய் பெரிதும் தடுக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசன்_நோய்&oldid=1558353" இருந்து மீள்விக்கப்பட்டது