கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம்
PY21 பெர்சியாரான் கேஎல்சிசி | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெர்சியாரான் கேஎல்சிசி நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Persiaran KLCC MRT Station Stesen MRT Persiaran KLCC சீனம்: 城中城道站 | |||||||||||||||
| அமைவிடம் | பிஞ்சாய் சாலை, கோலாலம்பூர் மாநகர மையம் | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°9′24″N 101°43′2″E / 3.15667°N 101.71722°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | 12 புத்ராஜெயா | |||||||||||||||
| நடைமேடை | 2 அடுக்கு பக்க நடைமேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | நிலத்தடி | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலையக் குறியீடு | PY21 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | PY21 16 மார்ச் 2023 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம் அல்லது பெர்சியாரான் கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Persiaran KLCC MRT Station; மலாய்: Stesen MRT Persiaran KLCC) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையம், பிஞ்சாய் சாலையில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கோலாலம்பூர் மாநகர மையப் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.
கோலாலம்பூர் மாநகர மையத்தை (கேஎல்சிசி) சுற்றியுள்ள மூன்று புத்ராஜெயா வழித்தட நிலையங்களில், இந்த PY21 கேஎல்சிசி எம்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்திற்கு அருகில் KJ10 கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் உள்ளது.
அமைவு
[தொகு]இந்த நிலையம் 12 புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தில் உள்ள நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும். சூரியா கேஎல்சிசி பேரங்காடி; கேஎல்சிசி பூங்கா மற்றும் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களிலிருந்து சுமார் 700 மீட்டர் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்தப் பகுதி 5 கிளானா ஜெயா வழித்தடத்தின் KJ10 கேஎல்சிசி எல்ஆர்டி நிலையத்தின் மூலமாகவும் நேரடியாகச் சேவை செய்யப்படுகிது. இங்குள்ள இரண்டு நிலையங்களுமே நிலத்தடி நிலையங்களாகும்.[1]
வரலாறு
[தொகு]இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2023 மார்ச் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. PY20 அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையத்திற்கும்; PY22 கோன்லே எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் அடையாளக் குறியீடு PY21 ஆகும்.[2]
இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் கேஎல்சிசி நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. முன்பு செயல்பாட்டில் இருந்த சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பு தற்போது புத்ராஜெயா வழித்தடம் என அழைக்கப்படுகிறது.
அதன் பின்னர் இந்த PY21 கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் நிலத்தடி நிலையமாக உருவாக்கப்பட்டது.
நிலத்தடி கட்டுமானங்கள்
[தொகு]எம்ஆர்டி நிறுவனத்துடன் மலேசிய அரசாங்கம் செய்து கொண்ட நிலத்தடி கட்டுமான ஒப்பந்தத்தின் கீழ் PY21 கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம் நிலத்தடியில் உருவாக்கப்பட்டது. 2016 மார்ச் மாதம் கையெழுத்தான உடன்படிக்கையின் கீழ் RM 15.47 பில்லியன் மதிப்பிலான கட்டுமான கட்டமைப்புகள் எம்ஆர்டி நிறுவனத்தால் எம்எம்சி-கமுடா (MMC-Gamuda) நிறுவனத்திடம் வழங்கப்பட்டன. கட்டுமான கட்டமைப்புகளில் நிலையங்களின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் அடங்கும்.
13.5 கிலோமீட்டர் (8.4 மைல்) நிலத்தடி கட்டுமான ஒப்பந்தத்தில், PY16 செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் தொடங்கி PY26 பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் வரையிலான நிலையக் கட்டுமானப் பணிகளும் அடங்கும்.[3][4][5] அனைத்து நிலையங்களின் கட்டுமானப் பணிகளும் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) திட்டத்தின் கீழ் உள்ளன. PY21 கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம் 16 மார்ச் 2023-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது.[6][7]
ஒருங்கிணைந்த கட்டணப் பரிமாற்றம்
[தொகு]5 கிளானா ஜெயா வழித்தடத்திற்கும் 12 புத்ராஜெயா வழித்தடத்திற்கும் இடையிலான ஒருங்கிணைந்த ஒரு கட்டணப் பரிமாற்றத் தளம் அமைக்கப்படுவதற்கு கேஎல்சிசி நிலையத்தின் நிலத்தடியில் திட்டமிடப்பட்டது; செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக அந்த ஒருங்கிணைப்பு திட்டம் கைவிடப்பட்டது.[8]
KJ10 கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம்; PY21 கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம்; ஆகிய இரண்டு நிலையங்களும் ஒருங்கிணைக்கப்படவில்லை. இரண்டு நிலையங்களுக்கும் இடையில் பயணிகள் மாறும்போது ஒரு வழித்தடத்தில் இருந்து வெளியேறி தரை மட்டத்திற்குத் திரும்ப வேண்டும்; பின்னர் மற்றொரு நிலத்தடி நிலையத்திற்குள் நுழைந்து தங்களின் பயணத்தைத் தொடர வேண்டும். இரு நிலையங்களுக்கும் இடையில் 7 நிமிட நடைப்பயண நேரம் பிடிக்கிறது.[1]
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]| புத்ராஜெயா — கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம் | |||
| நுழைவாயில் | அமைவிடம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| A ஒத்திவைப்பு |
கேஎல்சிசி மேம்பாடு | நிலத்தடி பாதசாரி இணைப்பு வழியாக எதிர்கால சில்லறை வணிக வளாகத்திற்கு நேரடி அணுகல் (→) எம் கோபுரம் (→) புதிய பெட்ரோனாஸ் காட்சியகம் | |
| B | கேஎல்சிசி கிழக்குப் பக்கம் | பிஞ்சாய் சாலை (→) பெர்டானா கோலாலம்பூர் நகர மையம் (→) இல்காம் கேலரி (→) இன்டர் கான்டினென்டல் கோலாலம்பூர் (→) மெனாரா பிஞ்சாய் (→) தி திரொய்கா அடுக்குமாடி குடியிருப்பு (→) பிஞ்சாய் குடியிருப்பு (→) சியாகிரின் பள்ளிவாசல் (→) ஓவல் பள்ளிவாசல் (→) தி பிஞ்சாய் ஆன் தி பார்க் அடுக்குமாடி குடியிருப்பு | |
| C | கேஎல்சிசி மேற்குப் பக்கம் | வாடகை வாகன சவாரி அழைப்பு (E-hailing) (→) தெரு மட்ட அணுகல் (→) எதிர்கால கேஎல்சிசி சில்லறை விற்பனை மையம் | |
இணைப்புகள்
[தொகு]PY21 கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம், சூரியா கேஎல்சிசி பேரங்காடி; கேஎல்சிசி பூங்கா மற்றும் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களிலிருந்து சுமார் 700 மீட்டர் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது. இது 5 கிளானா ஜெயா வழித்தடத்தில் உள்ள KJ10 கேஎல்சிசி எல்ஆர்டி நிலையத்தால் நேரடியாகச் சேவை செய்யப்படுகிறது.
இது ஒரு நிலத்தடி எம்ஆர்டி நிலையம்; 5 கிளானா ஜெயா வழித்தடத்தில் உள்ள KJ9 அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையத்திலிருந்து சுமார் 350 மீட்டர் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. இந்த KJ9 எல்ஆர்டி நிலையமும் ஒரு நிலத்தடி நிலையம் ஆகும்.
காட்சியகம்
[தொகு]கேஎல்சிசி எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)
மேலும் காண்க
[தொகு]- கேஎல்சிசி சூரியா
- கேஎல்சிசி பூங்கா
- கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம்
- கேஎல்சிசி சொத்து நிறுவனம்
- கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "The Persiaran KLCC MRT Station is located about 700 metres walking distance from Suria KLCC mall and the Petronas Twin Towers". mrt.com.my. Retrieved 18 October 2025.
- ↑ "Klang Valley Integrated Transit Map" [Peta Transit Berintegrasi Lembah Klang] (PDF). MyRapid (in ஆங்கிலம்). Suruhanjaya Pengangkutan Awam Darat. 2021. Retrieved 20 February 2022.
- ↑ "Awarded Contracts for MRT Putrajaya Line" [Penganugerhan Kontrak untuk MRT Laluan Putrajaya]. mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.
- ↑ Bernama (31 March 2016). "MRT Corp awards RM15.47b works package to MGKT" (in ஆங்கிலம்). Malaysia Kini. Retrieved 10 December 2022.
- ↑ "MRT Corp Awards RM 15.47 billion underground work contract to MMC Gamuda KVMRT (T) Sdn Bhd" (PDF) (in ஆங்கிலம்). MMC-Gamuda. 31 March 2016. Retrieved 10 December 2022.
- ↑ "Suncon bags RM661m new jobs". The Malaysia Reserve (in ஆங்கிலம்). 3 April 2017. Retrieved 29 November 2022.
- ↑ "Awarded Contracts for MRT Putrajaya Line". mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.
- ↑ Morden, Zarrah (2023-03-15). "Official: Titiwangsa MRT station could be next KL Sentral". Malay Mail (in ஆங்கிலம்). Retrieved 2024-01-07.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Persiaran KLCC MRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- KLCC East MRT Station | mrt.com.my
- Klang Valley Mass Rapid Transit website
- MRT Hawk-Eye View
