கெல்லி புரூக்
கெல்லி புரூக் | |
|---|---|
2015 இல் புரூக் | |
| பிறப்பு | கெல்லி ஆன் பார்சன்சு 23 நவம்பர் 1979 ரொச்செசுட்டர், கெண்ட், இங்கிலாந்து |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 1997–இன்று |
| வலைத்தளம் | |
| kellybrook | |
கெல்லி புரூக் (Kelly Brook) (பிறப்பு பெயர் கெல்லி ஆன் பார்சன்ஸ், 23 நவம்பர் 1979) ஒரு ஆங்கில வடிவழகி, நடிகை, ஊடக ஆளுமை ஆவார். இவர் பலவிதமான விளம்பரப் பரப்புரைகளுக்காகத் தனது வடிவழகித் தொழிலைத் தொடங்கினார். இவரின் இச்செயல் இவரை டெய்லி ஸ்டார் செய்தித்தாளின் ஆசிரியர் குழு இவரை அடையாளம் காண வழிவகுத்தது. இச்செய்தித்தாள் நிறுவனம் இவரை மூன்றாம் பக்கத்திற்கான பெண்ணாக சித்தரிக்கத் தொடங்கினர். இவர் 2005 ஆம் ஆண்டில் எஃப் எச் எம் இன் உலகின் கவர்ச்சியான பெண்ணாக முடிசூட்டப்பட்டார். மேலும், 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி 1998 முதல் ஒவ்வொரு எஃப். எச். எம் 100 கவர்ச்சியானவர்களின் கீழிறங்கு எண்ணல் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.[1][2]
ஒரு நடிகையாக, புரூக் ரிப்பர் (2001) தி இத்தாலியன் ஜாப் (2003) ஸ்கூல் ஃபார் செடக்சன் (2004) ஹவுஸ் ஆஃப் 9 (2004) சர்வைவல் ஐலேண்ட் (2005) ஃபிஷ்டேல்ஸ் (2007) பிரன்ஹா 3டி (2010) மற்றும் டேக்கிங் ஸ்டாக் (2015) ஆகிய படங்களில் தோன்றியுள்ளார். தி பிக் பிரேக்ஃபாஸ்ட் (1999) ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங் (2007) பிரிட்டனின் காட் டாலண்ட் (2009) செலிபிரிட்டி ஜூஸ் (ID1), ஒன் பிக் ஹேப்பி (2015) இட்ஸ் நாட் மீ, இட்ஸ் யூ (2016) லூஸ் வுமன் (2018) மற்றும் தி கிரேட் ஸ்டாண்ட் அப் டு கேன்சர் பேக் ஆஃப் (2020) உள்ளிட்ட பல பிரித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியுள்ளார். 2019 முதல், புரூக் ஜேசன் கிங் உடன் இணைந்து ஹார்ட் லண்டன்ஸ் டிரைவ் டைம் வானொலி நிகழ்ச்சியை வழங்கியுள்ளார்.[3]
தொடக்க கால வாழ்க்கை
[தொகு]இவர் இங்கிலாந்தின் கென்ட்டில் உள்ள ரோச்செஸ்டர் என்ற நகரில் கென்னத் பார்சன்ஸ் மற்றும் சாண்ட்ரா கெல்லி ஆகியோரின் மகளாகப் பிறந்தார். இவரின் இயற் பெயர் கெல்லி ஆன் பியர்சன்சு ஆகும். இவருக்கு டாமியன் என்ற இளைய சகோதரரும், சாசா என்ற மூத்த ஒன்றுவிட்ட சகோதரியும் உள்ளனர். கெல்லியின் தந்தை கென்னத் பியர்சன், 2007 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று தனது 57 வயதில், ரோச்செஸ்டரில் நுரையீரல் புற்றுநோயால் இறந்தார். ரோசெஸ்டரின் வாரன் வூட்டில் உள்ள தாமஸ் அவெலிங் பள்ளியில் புரூக் பயின்றார். 1996 ஆம் ஆண்டில், தனது பதினேழாவது வயதில், ஸ்டீவர்ட் லீ மற்றும் ரிச்சர்ட் ஹெர்ரிங் ஆகியோரின் பிபிசி நகைச்சுவை நிகழ்ச்சியான ஃபிஸ்ட் ஆஃப் ஃபன்னின் “டீச்சர்ஸ்” என்ற தலைப்பிலான தொடரில் ஒரு பள்ளி மாணவியாகத் தோன்றினார் (இவரது சக நடிகர்களில் ஒருவர் இளம் டேனியல் மேஸ் ஆவார்). இவர் தனது 16 வயதில் ஒரு தொழில்முறை வடிவழகியாக மாறுவதற்கு முன்பு, இத்தாலியா கான்டி அகாடமி ஆஃப் தியேட்டர் ஆர்ட்ஸில் மூன்று ஆண்டுகள் படித்தார்.[4][5]
தொழில்முறை வடிவழகியாக
[தொகு]
புரூக்கின் வடிவழகித் தொழில் வாழ்க்கை 16 வயதில் ஒரு அழகுப் போட்டியில் வென்ற பிறகு தொடங்கியது. பின்னர் இவர் ஃபாஸ்டர்ஸ் லாகர், ரெனால்ட் மேகன், வாக்கர்ஸ் கிறிஸ்ப்ஸ், பிஸ் புயின், பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கான மார்புக் கச்சைகள், உள்ளாடைகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற பிராவிஸ்ஸிமோ உள்ளிட்ட பல விளம்பரப் பரப்புரைகளில் பணியாற்றினார். சிறிது காலத்திற்குப் பிறகு, டெய்லி ஸ்டார் செய்தித்தாள் ஆசிரியர் குழுவின் கவனத்தை ஈர்த்தார். அதில் அவரை ஒரு பேஜ் த்ரீ பெண்ணாக சித்தரிக்கத் தொடங்கினார்.[5] ப்ரூக்கின் படம் விரைவில் ஜி. க்யூ (GQ), லோடெட் (Loeded), எஃப்.எச்.எம் (FHM) போன்ற பிற சிறுவர்களின் பத்திரிகைகளில் தோன்றத் தொடங்கியது. கிரேசியா பத்திரிகைக்காக 5,000 க்கும் மேற்பட்ட பெண்கள் குறித்து நடத்திய கருத்துக் கணிப்பில் இவர் சிறந்த பிரித்தானிய பெண் உடலைக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் "உலகின் எஃப். எச். எம் 100 கவர்ச்சியான பெண்கள்" பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார், இந்தப் பத்திரிக்கை 15 மில்லியன் மக்களைக் கருத்துக்கணிப்பில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. 1998 முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்த இவர், 2008 -ஆம் ஆண்டில் 34-ஆவது இடத்திலும், 2009 இல் 67 ஆவது இடத்திலும் மற்றும் 2010 இல் 7 ஆவது இடத்திலும் இருந்தார்.[6] இவர் எஃப். எச். எம் (FHM) இன் உலகக் கோப்பை 2010 சிறப்பு வெளியீட்டின் அட்டைப்பட நட்சத்திரமாக இருந்தார். ஏப்ரல் 2011 இல் பத்திரிகையின் அட்டைப்படத்தில் இருந்தார்.[6][7]
2007-ஆம் ஆண்டு பெப்ரவரியில், யூனிலீவரின் லின்க்ஸ் (அமெரிக்காவிலும் கண்ட ஐரோப்பாவிலும் "ஆக்ஸ்" என்று அழைக்கப்படுகிறது) உடல் மணமூட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்த, சுமார் 1 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தத்தில் புரூக் கையெழுத்திட்டதாக அறிவிக்கப்பட்டது. விளம்பரப் பரப்புரையின் ஒரு பகுதியாக விளம்பரப் பலகைகள், செய்தித்தாள்கள், இணையவழியிலும் இவர் தோன்றியுள்ளார்.[8] மேலும் ரீபோக் வணிகத்திற்கான வடிவழகியாகவும் தோன்றினார். 2010 ஆம் ஆண்டில், உள்ளாடை தயாரிப்பாளர் அல்டிமோவின் விளம்பரப் பரப்புரையின் "புதிய முகமும் தோற்றமுமாக" ஆக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2010 இல், புரூக் பிளேபாய் இதழின் அமெரிக்கப் பதிப்பில் தோன்றினார்.[9] 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில், புரூக் சிம்ப்ளி பீ (Simply Bee) என்ற ஆடை வரிசையைத் தொடங்கினார்.[10] அடுத்த ஆண்டு, இவர் ஸ்கெச்சர்சு நிறுவனத்தின் (Skechers) விளம்பரத்தூதராக செயல்பட்டார்.[11]
நடிப்பு வாழ்க்கை
[தொகு]2000 ஆம் ஆண்டில், புரூக், சார்ட்டட் (Sorted) என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்துடன் திரையில் அறிமுகமானார். அதற்குப் பிறகு சிறிது காலத்தில், இவர் ரிப்பர் (Ripper) படத்தில் தோன்றினார். கிளார்க் கென்ட்/சூப்பர்மேனின்எதிரியான லெக்ஸ் லூத்தரின் காதலியாக அமெரிக்க அறிவியல் புனைகதை நாடகமான ஸ்மால்வில்லே (Smallville) -யிவல் நான்கு அத்தியாயங்களில் நிகழ்ச்சியின் முதல் தொடரில் நடித்தார். கனடா திரைப்பட நடிகையாகவும் பணிகளை முடித்த இவர், 2003 ஆம் ஆண்டு வெளியான தி இத்தாலிய ஜாப் (The Italian Job) என்ற திரைப்படத்தில் லைலின் காதலியாக ஒரு குறுகிய அளவு நேரமே இடம்பெறும் தோற்றத்தில் தோன்றினார். இவர் முதன்முதலில் திரையில் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான ஸ்கூல் ஃபார் செடக்சன் என்ற திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கான நடிப்பிற்காக இவர் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.[12] 2004 ஆம் ஆண்டில், நீட் ஃபார் ஸ்பீட் அண்டர்கிரவுண்ட் 2 என்ற காணொலி விளையாட்டு தொடர்பான திரைப்படத்தில் புரூக் பர்க்குடன் இணைந்து நிக்கி மோரிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். 2005 ஆம் ஆண்டில், இவர் பிலிப் விடாலின் அதிரடித் திரைப்படமான த்ரில்லர் ஹவுஸ் ஆஃப் 9 இல் தோன்றினார், மேலும் பில்லி ஜேனுக்கு இணையராக சர்வைவல் ஐலேண்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[13]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]2014 ஆம் ஆண்டில், ஐடிவி தொலைக்காட்டி அலைவரிசையின் திஸ் மார்னிங் நிகழ்ச்சியில் தோன்றியபோது, முந்தைய ஆண் நண்பர்களான ஜேசன் ஸ்டேதம் மற்றும் டேனி சிப்ரியானி ஆகியோரை முகத்தில் குத்தியதாக இவர் ஒப்புக்கொண்டார்.2022 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இவர் தனது நீண்டகால காதலன் ஜெர்மி பாரிசியை மணந்தார், அவருடன் இவர் 2015 முதல் இணைந்து பழகி வந்தார்.[14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kelly is world's sexiest". http://www.manchestereveningnews.co.uk/whats-on/music/kelly-is-worlds-sexiest-1065713.
- ↑ "Kelly Brook And FHM: A Ridiculously Sexy Retrospective". FHM. 10 December 2015.
- ↑ "Heart". Heart. Retrieved 9 March 2020.
- ↑ "Italia Conti Plymouth Alumni". italiacontiplymouth.co.uk. January 2013. Retrieved October 28, 2023.
- ↑ 5.0 5.1 "Official Kelly Brook site biography page". Officialkellybrook.com. Archived from the original on 1 January 2011. Retrieved 12 January 2011.
- ↑ 6.0 6.1 "Kelly Brook — Kent's finest bra model" பரணிடப்பட்டது 13 பெப்ரவரி 2011 at the வந்தவழி இயந்திரம் Kelly Brook at FHM.com
- ↑ "Kelly Brook in South Africa! FHM article". Fhm.com. Archived from the original on 5 June 2010. Retrieved 12 January 2011.
- ↑ "Lynx 6-sheet Kelly Brook ad". UTalkMarketing.com. Archived from the original on 20 September 2008. Retrieved 8 April 2008.
- ↑ "Kelly goes naked Sky Showbiz, 04/06/10". Showbiz.sky.com. Archived from the original on 8 June 2010. Retrieved 12 January 2011.
- ↑ "for Simply Be — Blog". Kelly Brook. 4 August 2014. Archived from the original on 1 March 2015. Retrieved 20 February 2015.
- ↑ "Kelly is the new face of Skechers!". Kelly Brook official blog. 22 July 2014. Archived from the original on 18 April 2015. Retrieved 20 February 2015.
- ↑ "School for Seduction review". Filmcritic.com. Archived from the original on 31 July 2012. Retrieved 12 January 2011.
- ↑ "Three". https://www.rottentomatoes.com/m/survival_island.
- ↑ Casey, Isabelle (31 July 2022). "Kelly Brook marries boyfriend Jeremy Parisi in stunning Italian ceremony - see her dress". Hello!.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ஹார்ட் ரேடியோவில் ஜே. கே மற்றும் கெல்லி புரூக்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Kelly Brook