கெல்லி கெல்லி

பார்பரா ஜீன் பிளாங்க் (Barbara Jean Blank பிறப்பு: ஜனவரி 15, 1987) ஒரு அமெரிக்க மாதிரி அழகி, நடிகை, மெய்தன்மை தொலைக்காட்சி ஆளுமை மற்றும் தொழில்முறை மல்யுத்த வீரர், அவரது கெல்லி கெல்லி எனும் மேடைப் பெயரில் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் நன்கு அறியப்பட்டவர்.
சீருடற் பயிற்சி மற்றும் உற்சாக மூட்டுதலில் இவர் பயிற்சி பெற்றார் பின், வீனஸ் நீச்சலுடை மற்றும் ஹவாய் டிராபிக் ஆகியவற்றிற்கு ஒரு மாதிரியாக பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டில், வெற்று உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி, ஓஹியோ பள்ளத்தாக்கு மல்யுத்தத்தில் பயிற்சி பெற்ற பின்னர், ஜூன் 2006 இல் ஈ.சி.டபிள்யூ பிரிவில் 'கெல்லி கெல்லி' எனும் பெயரில் இவர் அறிமுகமானார். முதன்மையாக மல்யுத்தமற்ற பாத்திரத்தில் தோன்றிய அவர், லயலா மற்றும் ப்ரூக் ஆடம்ஸுடன் ஆகியோருடன் இணைந்து எக்ஸ்ட்ரீம் எக்ஸ்போஸ் எனும் குழுவினை உருவாக்கினர். 2007 இன் பிற்பகுதி தொடங்கி, இவர் பால் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார், மேலும் பல சந்தர்ப்பங்களில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவன திவாஸ் வாகையாளர் போட்டி மற்றும் உலக மற்போர் மகிழ்கலை நிறுவன மகளிர் வாகையாளர் பட்டம் ஆகிய இரண்டிலும் பல சமயங்களில் போடியிட்டு தோல்வியுற்றார். ஜூன் 2011 இல், இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் திவாஸ் வாகையாளர் பட்டத்தினை வென்றார். இவர் அந்தப் பட்டத்தினை நான்கு மாதங்கள் வரை தன்வசம் வைத்திருந்தார். பின் இவர் 2012 இல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தினை விட்டு வெளியேறினார், ஆனால் அவ்வப்போது தோன்றினார். ஜூலை 22, 2019 அன்று நடந்த ரா ரீயூனியன் சிறப்பு நிகழ்ச்சியில், ஜெரால்ட் ப்ரிஸ்கோவை வீழ்த்தி உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் 24/7 வாகையாளர் பட்டத்தினை வென்றார். இந்தப் பட்டத்தினை பட்டத்தை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் இல் ஒட்டுமொத்தமாக இரண்டு முறை வாகையாளர் பட்டங்களை வென்றுள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் ஒரு யூத தந்தை மற்றும் கிறிஸ்தவ தாய்க்கு மகளாகப்பிறந்தார்.[1][2] பிளாங்க் ஒரு குழந்தையாக இருக்கும் போதே தொழில்முறை மல்யுத்தத்தின் ரசிகராக இருந்தார், மேலும் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினை தனக்கு பிடித்த மல்யுத்த வீரராக கூறினார்.[3] வளர்ந்து வரும் போது, இவர் பத்து ஆண்டுகளாக சீருடர் பயிற்சிகளில் பங்கேற்றார், காயம் காரணமாக இவர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் இவர் உற்சாகமூட்டல் துறையினைத் தேர்வு செய்து கொண்டார். இவர் பல்கலைக்கழக கிறிஸ்தவப் பள்ளியில் பயின்றார் மற்றும் எங்கிள்வுட் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[4] பிளாங்க் ஜாக்சன்வில்லியில் உள்ள புளோரிடா சமுதாயக் கல்லூரியில் பயின்றார், அங்கு இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராக வேண்டும் என்ற நம்பிக்கையில் பத்திரிகையைப் ஒளிபரப்பு துரையினை பாடமாகப் பயின்றார்.[5] இவர் தொழில்முறை மல்யுத்தத்தில் நுழைவதற்கு முன்பு வீனஸ் நீச்சலுடைக்கு பிகினி மாதிரி அழகியாகவும் இருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஓஹியோ பள்ளத்தாக்கு மல்யுத்தத்தில் பயிற்சி பெற்றபோது, இவர் கென்டக்கியில் வசித்து வந்தார்.[3] இதைத் தொடர்ந்து, மியாமிக்குச் செல்வதற்கு முன்பு புளோரிடாவின் தம்பாவில் வசித்து வந்தார். பின்னர் இவர் 2010 இல் தம்பாவில் வசித்தார்.[6] இவர் மல்யுத்த வீரர் ஆண்ட்ரூ மார்ட்டினுடன் இரண்டரை ஆண்டு உறவில் இருந்தார், அது மார்ச் 2009 இல் இவர் இறப்பதற்கு முன்னர் முடிவடைந்தது.[7][8] 2011 ஆம் ஆண்டில், பிளாங்க் ஒரு மாக்சிம் விருந்தில் ஐஸ் ஹாக்கி வீரர் சந்தித்து இருவரும் பொருத்தம் வலுப்படுத்தலில் ஈடுபட்டனர்.[4] அவர்கள் பிப்ரவரி 27, 2016 அன்று மெக்சிகோவில் திருமணம் செய்து கொண்டனர்,[9][10] இந்த ஜோடி 2017 இல் பிரிந்தது.[11][12]
சான்றுகள்
[தொகு]- ↑ Kamchen, Richard. "Kelly Kelly". Slam Sports. Canadian Online Explorer. Archived from the original on ஏப்ரல் 15, 2012. Retrieved July 4, 2009.
- ↑ "Rosenberg Meets the WWE's Kelly Kelly—and She's Jewish?! Video". யூடியூப். April 2, 2009. Retrieved March 1, 2011.
- 1 2 "Interview with Kelly Kelly". Silvervision. November 11, 2009. Archived from the original on July 19, 2011. Retrieved March 1, 2011.
- 1 2 Brody, Robyn (March 26, 2016). "I Do, I Do: Fairytale ending for this wrestler, hockey star". The Florida Times-Union. Retrieved April 16, 2018.
- ↑ Casey, Scott (May 17, 2008). "On Tour with Kelly Kelly". Brisbane Times. Retrieved August 28, 2008.
- ↑ Fishman, Scott (February 12, 2011). "Former local Kelly Kelly, family glad WWE WrestleMania 28 in Miami". The Miami Herald. Archived from the original on பிப்ரவரி 13, 2011. Retrieved March 1, 2011.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ Capsule Profile 335: Test. Kappa Publications.
- ↑ "Wrestling Star Kelly Kelly Talks About Andrew Martin". Daily Star. January 24, 2010. Retrieved January 24, 2010.
- ↑ Malec, Brett; Cohen, Jess (February 28, 2016). "Barbie Blank Is Married! WAGS Star Couldn't Be Happier to Marry Best Friend and Husband Sheldon Souray". E!. Retrieved February 28, 2016.
- ↑ "Sheldon Souray, Former WWE Champion Kelly Kelly Now Engaged (Photos)". New England Sports Network. August 4, 2014. Retrieved September 15, 2014.
- ↑ Hautman, Nicholas (October 9, 2017). "'WAGS' Star Barbie Blank and Sheldon Souray Split". Us Weekly. Retrieved April 16, 2018.
- ↑ "'WAGS' Star Barbie Blank Breaks Silence on Split From Husband Sheldon Souray". Us Weekly. October 9, 2017. Retrieved April 16, 2018.