கெல்லர்
கெல்லர் | |
|---|---|
கிராமம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
| மாவட்டம் | சோபியான் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,363 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | காசுமீரி மொழி, உருது, இந்தி, தோக்ரி மொழி, ஆங்கிலம்[1][2] |
| • பேச்சு மொழிகள் | கோசிரி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 192303 |
கெல்லர் (Keller), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள சோபியான் மாவட்டத்தில் அமைந்த கெல்லர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த பெரிய கிராமம் ஆகும்.[3]இது மாவட்டத் தலைமையிட நகரமான சோபியானுக்கு 6 கிலோமீட்டர் தொலைவிலும்; சிறிநகரிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 457 குடியிருப்புகள் கொண்ட கெல்லர் கிராமத்தின் மக்கள் தொகை 2,363 ஆகும். அதில் ஆண்கள் 1201 மற்றும் 1162 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 968 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.81% வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 50.32% ஆக உள்ளது.[5]
கெல்லர் நடவடிக்கை
[தொகு]2025 பகல்காம் தாக்குதலுக்கு பதிலாடியாக பாகிஸ்தானிய தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக இந்திய இராணுவம் நடத்திய 2025 சிந்தூர் நடவடிக்கை எடுத்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு காஷ்மீரின் சோபியான் மலைக்காடுகளில் ஒளிந்து கொண்டிருந்த தீவிரவாதிகளைகளை ஒழித்துக்கட்ட, காஷ்மீர் காவல்துறையும், இராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினரும் சேர்ந்து கெல்லர் நடவடிக்கை எடுத்தது. 15 மே 2025 அன்று கெல்லர் கிராமத்தின் மலைக்காடுகளில் பதுங்கியிருந்த டி ஆர் எப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சாகித் குட்டாய் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[6][7] [8]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. Retrieved 27 September 2020.
- ↑ "Paliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020.
- ↑ "Shopian civilian killings: Protesters clash with police in Keller village". greaterkashmir.com. Greater Kashmir.
- ↑ "Three terrorists killed in Shopian encounter". greaterkashmir.com. The Times of India.
- ↑ Kellar Population 2011 - Shupiyan, Jammu and Kashmir
- ↑ Operation Keller: Huge cache of arms, ammunition recovered after 3 Lashkar terrorists gunned down
- ↑ Operation Keller: Huge arms haul recovered in J&K's Shopian after elimination of 3 LeT terrorists - All you need to know
- ↑ Operation Keller: Mastermind Of Pahalgam Terror Attack, TRF Chief Shahid Kuttay, Killed In Shopian Encounter