உள்ளடக்கத்துக்குச் செல்

கெல்கெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெல்கெல்
Gelgel
கிராமப்புறம்
கெல்கெல் இந்து ஆலயங்கள் (1925)
கெல்கெல் இந்து ஆலயங்கள் (1925)
அலுவல் சின்னம் கெல்கெல்
சின்னம்
குறிக்கோளுரை: "Bhinneka Tunggal Ika"  
"பன்முகத்தன்மையில் ஒற்றுமை"
கருத்தியல்: பஞ்சசீலம்
கெல்கெல் is located in இந்தோனேசியா
கெல்கெல்
கெல்கெல்
ஆள்கூறுகள்: 8°33′49″S 115°24′38″E / 8.56361°S 115.41056°E / -8.56361; 115.41056
நாடு இந்தோனேசியா
மாநிலம் பாலி
பிராந்தியம்குலுங்குங்
மாவட்டம்குலுங்குங்
மக்கள்தொகை
 • மொத்தம்4.681 (2,015); 4.766 (2,010)
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +8
அஞ்சல் குறியீடு
80716

கெல்கெல் (ஆங்கிலம்: Gelgel, Indonesia; இந்தோனேசியம்: Gelgel, Klungkung, Klungkung) என்பது இந்தோனேசியா, பாலி, குலுங்குங் பிராந்தியத்தில் உள்ள ஒரு வரலாற்றுக் கிராமப்புற நகரம் ஆகும். குலுங்குங் பிராந்தியத்தின் தலைநகரான செமராபுராவில் (Semarapura) இருந்து தெற்கே 4 கிமீ தொலைவில் கடற்கரைக்கு அருகில் உள்ளது.

இந்தக் கிராமப்புற நகரம் பல பண்பாட்டுக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது; மற்றும் அதன் மட்பாண்டங்கள்; மற்றும் கையால் நெய்யப்பட்ட சொங்கேட் சடங்கு துணிமணிகளுக்குப் பெயர் பெற்றது. 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 1686 வரை பாலியை ஆட்சி செய்த மிகவும் சக்திவாய்ந்த கெல்கெல் இராச்சியத்தின் (Kingdom of Gelgel) ஆட்சிக்காலத்தில், இந்தக் கிராமத்தின் அதிகாரம் உச்சத்தில் இருந்தது.[1]

வரலாறு

[தொகு]

1710-ஆம் ஆண்டு கெல்கெல் அரண்மனை இன்றைய குலுங்குங் பிராந்தியத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் கெல்கெல் நகரத்தின் வீழ்ச்சி தொடங்கியது; மேலும் 1908-ஆம் ஆண்டு இடச்சுக்காரர்கள் அந்த இடத்தை குண்டுவீசித் தாக்கிய பின்னர், அதன் பழைமை வரலாறும் முடிவிற்கு வந்தது.[2]

தற்போது, அதன் கடந்த கால மகத்துவத்தில் சில தடயங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. பரந்த முற்றங்களைக் கொண்ட பிரதான கோயிலான புரா தாசர் புவானா எனும் அரச வழிபாட்டுத் தலம் மட்டுமே, கெல்கெல் இராச்சியத்தின் கடந்த காலத்தைச் சுட்டிக்காட்டும் எஞ்சிய வரலாற்று அடையாளமாக உள்ளது.[2]

புரா தாசர் கோயில்

[தொகு]
கெல் கெல் பாலினிய பெண்கள் (1925)

தற்போது பழைய அரச அரண்மனையின் (Puri) தடயங்கள் எதுவும் இல்லை. ஆட்சி செய்த அரசமரபின் பழைய மூதாதையர் கோயிலான புரா ஜெரோ அகோங் கோயில் (Pura Jero Agung), பழைய அரண்மனைப் பகுதியில் இன்னும் உள்ளது.[3]

புரா ஜெரோ அகோங் கோயிலின் கிழக்கே மற்றொரு பழைய கோயிலான புரா தாசர் கோயில் உள்ளது. இது பாலியின் தாய்க் கோயிலான பெசாகி கோயிலின் இணைக் கோயிலாக உள்ளது. இந்தக் கிராமத்தில் பாலியின் மிகப் பழைமையான பள்ளிவாசலும் (Masjid Nurul Huda Gelgel) உள்ளது. இந்தப் பள்ளிவாசல் பழைய ஜாவானிய மன்னர்களால் கட்டப்பட்டது.

நவீன தோற்றமுடைய இந்தப் பள்ளிவாசல், 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜாவாவில் இருந்து வந்த முசுலிம் பரப்புரையாளகளின் நலனுக்காக நிறுவப்பட்டது. இருப்பினும் பரப்புரையாளகள் எந்த மதமாற்றத்தையும் செய்யத் தவறிய காரணத்தினால் அவர்களும் மீண்டும் ஜாவாவிற்கு திரும்பிச் செல்லவில்லை. பாலியிலேயே தங்கி விட்டனர்[2]

பூபுத்தான்

[தொகு]

1908-ஆம் ஆண்டில், பாலியின் அரசு நிர்வாகத்தில் இடச்சுக்காரர்கள் தலையிட்டபோது, ​​கெல்கெல் அரச பிரபு ஒருவர் இடச்சு படைக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினார். இது குலுங்குங் அரண்மனையின் (18 ஏப்ரல் 1908) நன்கு அறியப்பட்ட பூபுத்தான் துர்நிகழ்வுக்கு காரணமாக இருந்தது. அரச மரபினரும் அவர்களின் பணியாளர்களும் நன்கு ஆயுதம் ஏந்திய இடச்சு படைகளுக்கு எதிராகத் தற்கொலை செய்து கொண்டனர்.

பூபுத்தான் என்பது சரணடையும்போது ஏற்படும் அவமானத்தைத் தவிர்ப்பதற்காக அரச குடும்பத்தினரும், வீரர்களும் மேற்கொள்ளும் தற்கொலை சடங்கைக் குறிக்கும் ஒரு பாலினிய சொல்லாகும்.[4]

காட்சியகம்

[தொகு]
  • கெல்கெல் காட்சிப் படங்கள்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hägerdal, Hans (1995). "Bali in the Sixteenth and Seventeenth Centuries: Suggestions for a Chronology of the Gelgel Period". Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 151 (1): 101–124. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-2294. https://www.jstor.org/stable/27864631. 
  2. 2.0 2.1 2.2 "The town's decline started in 1710, when the court moved to present-day Klungkung, and finished when the Dutch bombarded the place in 1908". Lonely Planet. Retrieved 3 March 2025.
  3. "What remains to reminds us of its glorious past is Pura Jero Agung, the old royal temple. To the east of Pura Jero Agung is Pura Dasar, a very old royal temple regarded as the lowland counterpart of Besakih". Penang (in ஆங்கிலம்). Retrieved 3 March 2025.
  4. Pringle 2004, ப. 106.

சான்றுகள்

[தொகு]
  • History of Puputan Badung. Denpasar Government Municipality Tourism Office.
  • History of Puputan Badung, page 2. Denpasar Government Municipality Tourism Office.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்கெல்&oldid=4219571" இலிருந்து மீள்விக்கப்பட்டது