கெலோங்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கெலோங் என்பது, மலேசியா, பிலிப்பைன்சு, இந்தோனீசியா போன்ற நாடுகளின் நீர்ப்பரப்பில் காணப்படுகின்ற, பெரும்பாலும் மரத்தாலான மேடை அமைப்பு ஆகும். சிங்கப்பூரிலும் சில கெலோங்குகளைக் காண முடியுமாயினும், நகராக்கத்தினால் இவை இப்போது மிகவும் அருகிவிட்டன.
இவை மீன்பிடித் தேவைகளுக்காக மீனவர்களினால் கட்டப்படுகின்றன. பெரிய மேடைகளில் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்குமான வீடுகளும் அமைவது உண்டு. இவற்றைக் கட்டுவதற்கு ஆணிகள் பயன்படுத்தப்படுவதில்லை. மரக்குற்றிகளும், பலகைகளும் பிரம்பினால் பிணைக்கப்பட்டு இவை உருவாக்கப்படுகின்றன. ஏறத்தாழ 20 மீட்டர் நீளமான முளைகளைக் கடலுக்குள் செலுத்தி, அவற்றின்மீது இம்மேடைகள் தாங்கப்படுகின்றன. கெலோங்குகள் ஆழம் குறைந்த நீரிலேயே பெரிதும் காணப்படுகின்றன. ஆனாலும் ஆழமான நீர்ப் பகுதிகளிலும் இவற்றைக் காணமுடியும்.