உள்ளடக்கத்துக்குச் செல்

கெலெரிடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெலெரிடா
கொண்டை வானம்பாடி,
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கெலெரிடா
மாதிரி இனம்
அலலுடா கிரிசுடேடா
லின்னேயஸ், 1758
சிற்றினம்

உரையினை காண்க

வேறு பெயர்கள்
  • கெலெண்டுலா
  • கெலெரிடா
  • கெலிகோரைசு
  • டிலோகோரிசு

கெலெரிடா (Galerida) என்ற பேரினம் பறவைகள் குடும்பமான அல்லெடிடேவினைச் சார்ந்தது . இதனுடைய தற்போதைய அறிவியல் பெயர் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது. கேலரிடா என்பது கேலரம், "தொப்பி" எனப் பொருள் உடையது.[1] கெலெரிடா என்பது முந்தைய பேரினப் பெயர்களான காலெண்டுலா, கெலிகோரிசு மற்றும் டிலோகோரிசு உடன் ஒத்ததாக இருக்கிறது.[2]

வகைப்பாட்டியல்

[தொகு]

பேரினம் கெலெரிடா ஜெர்மன் விலங்கியல் நிபுநர்பிரெடெரிக் போயியால் 1828-ல் தோற்றுவிக்கப்பட்டது.[3] இப்பேரினத்தின் மாதிரி இனமாகக் கொண்டை வானம்பாடி பின்னர் நியமிக்கப்பட்டது.[4]

பரவியுள்ள சிற்றினங்கள்

[தொகு]

பேரினத்தின் கீழ் ஏழு சிற்றினங்கள் உள்ளன:[5]

படம் அறிவியல் பெயர் உள்ளூர் பெயர் பரவல்
கெலெரிடா தேவா சைக் வானம்பாடி மத்திய இந்தியா
கெலெரிடா மாடசுடா சூரிய வானம்பாடி கினியா முதல் தெற்கு சூடான் வரை
கெலெரிடா மாக்னிரோஸ்ட்ரிசு பெரிய அலகு வானம்பாடி தென்னாப்பிரிக்கா
கெலெரிடா தெக்லே தெக்லா வானம்பாடி ஐபீரியன் தீபகற்பம், வடஆப்பிரிக்கா, மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா செனகல் முதல் சோமாலியா வரை
கெலெரிடா கிறிசுடாட்டா கொண்டை வானம்பாடி வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா மற்றும் சீனாவின் சில பகுதிகளில்
கெலெரிடா மலபாரிக்கா மலபார் வானம்பாடி மேற்கு இந்தியா
கெலெரிடா மேக்ரோரைங்கா மக்ரெப் வானம்பாடி வடகிழக்கு ஆப்பிரிக்காவின் மக்ரெப் பாலைவனம்

அழிந்துபோன சிற்றினங்கள்

[தொகு]

இந்த பேரினத்தில் குறைந்தது இரண்டு புதைபடிவ சிற்றினங்கள் உள்ளன:

  • கெலெரிடா பல்கேரிகா (பிலியோசீன் பிற்காலம், வர்ஷெட்ஸ், பல்கேரியா)[6]
  • கெலெரிடா பன்னோனிகா (பிலியோசீன்,கசர்னோட்டா, அங்கேரி)[7]

முன்னாள் சிற்றினங்கள்

[தொகு]

முன்னர், சில வகைப்பாட்டியலர்கள் பின்வரும் சிற்றினங்கள் (அல்லது துணையினங்கள்) கெலெரிடா பேரினத்தில் உள்ள சிற்றினங்களாகக் கருதினர்:

  • குட்டை வால் வானம்பாடி (கெலெரிடா பிரிமேண்ட்லீ)[8]
  • துன் வானம்பாடி (காலெண்டுலா துன்னீ)[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  2. Jobling, James A. (2010-06-30). Helm Dictionary of Scientific Bird Names (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781408133262.
  3. Friedrich Boie (1828). "Galerida" (in German). Isis von Oken 21: Col 321. https://biodiversitylibrary.org/page/13244889. 
  4. Mayr, Ernst; Greenway, James C. Jr, eds. (1960). Check-list of Birds of the World. Vol. Volume 9. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. p. 55. {{cite book}}: |volume= has extra text (help)
  5. Gill, Frank; Donsker, David, eds. (2018). "Nicators, reedling, larks". World Bird List Version 8.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.
  6. Boev, Zlatozar (2012). "Neogene Larks (Aves: Alaudidae (Vigors, 1825)) from Bulgaria". Acta Zoologica Bulgarica 64 (3): 295–318. http://www.acta-zoologica-bulgarica.eu/downloads/acta-zoologica-bulgarica/2012/64-3-295-318.pdf. 
  7. Kessler, E (2013). "Neogene songbirds (Aves, Passeriformes) from Hungary". Hantkeniana 8: 37–149. 
  8. "Spizocorys fremantlii - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-16.
  9. "Eremalauda dunni - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெலெரிடா&oldid=3360444" இலிருந்து மீள்விக்கப்பட்டது