கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கெலந்தானின் ஐந்தாம் முகம்மது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஐந்தாம் முகம்மது
யாங் டி-பெத்துவான் அகொங் XV
கெலந்தானின் சுல்தான்
யாங் டி பெர்துவான் அகோங்
ஆட்சிக்காலம்13 டிசம்பர் 2016
மலேசியா24 ஏப்ரல் 2017
முன்னையவர்அப்துல் ஆலிம்
பிரதமர்கள்
கிளாந்தான் சுல்தான்
ஆட்சிக்காலம்13 செப்டம்பர் 2010 – இன்று
முன்னையவர்இசுமாயில் பெத்ரா
வாரிசுகள்பாயிசு பெத்ரா
முதலமைச்சர்கள்
பிறப்பு6 அக்டோபர் 1969 (1969-10-06) (அகவை 52)
இசுத்தானா பத்து, கோத்தா பாரு, கிளாந்தான், மலேசியா
துணைவர்தெங்கு சுபைதா பிந்தி தெங்கு நூருதீன் (மணமுறிவு)[1]
பெயர்கள்
தெங்கு முகம்மது பாரிசு பெத்ரா இப்னி தெங்கு இசுமாயில் பெத்ரா
Regnal name
சுல்தான் ஐந்தாம் முகம்மது
மரபுலோங் செனிக் மாளிகை
தந்தைகெலந்தானின் இசுமாயில் பெத்ரா
தாய்தெங்கு ஆனிசு பிந்தி தெங்கு அப்துல் அமீது
மதம்சுன்னி இசுலாம்

சுல்தான் ஐந்தாம் முகம்மது (Sultan Muhammad V); பிறப்பு: 6 அக்டோபர் 1969) மலேசியாவின் 15 வதும், தற்போதைய மாட்சிமை தங்கிய பேரரசரும் (நாட்டுத் தலைவர்) கிளாந்தான் மாநிலத்தின் அரசரும் (சுல்தான்) ஆவார்.

இவரின் தந்தையார் சுல்தான் இசுமாயில் பெத்ரா சுகவீனமுற்றதை அடுத்து ஐந்தாம் முகம்மது கெலந்தானின் சுல்தானாக 2010 செப்டம்பர் 13 இலும்,[2] மலேசியாவின் பேரரசராக 2016 டிசம்பர் 13 இலும் ஆட்சியில் அமர்ந்தார். 2 நவம்பர் 2018 முதல் இரண்டு மாதத்திற்கு இவர் அரசர் பனியின் விடுப்பிலிருந்தார்.

அந்தக் காலக் கட்டத்தில் 22 நவம்பர் 2018-இல் முன்னாள் மாஸ்கோ அழகியான ஆக்சனா வோஎவோடின-வை ருசியா நாட்டில் மணமுடித்ததாகப் பரவலாகப் பேசப்பட்டது. இருந்த பொழுதும் இவர் பேரரசர் அரியணையை விட்டு விலகும் வரை அரண்மையிலிருந்து இந்தத் திருமணத்தைப் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியிடப்படவில்லை.

கிளாந்தான் மாநிலத்தின் அரசர்[தொகு]

தெங்கு முகம்மது இபாரிஸ் பெட்ரா இபினி தெங்கு இஸ்மாயில் பெட்ரா 13-ஆம் திகதி செப்டம்பர் 2010-இல் [2] கிளாந்தான் ஆட்சியாளராகப் பதவி உறுதி மொழியை எடுத்துக் கொண்டார். மாநில அதிகாரப்பூர்வ அமைப்பின் கீழ், பிரிவு 29A-வின் கீழ், நடப்பில் இருந்த தந்தையின் உடல்நலம் கருதி இவர் ஆட்சிக்கு வந்தார்.[3]

துணை யாங் டி பெர்துவான் அகோங்[தொகு]

சுல்தான் முகமட் அவர்கள் 2011 அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துணை யாங் டி பெர்துவான் அகோங்காக நியமிக்கப்படடர். இந்தப் பதவியை இவர் 13 டிசம்பர் 2011 முதல் 13 டிசம்பர் 2016 வரை வகித்து வந்தார்.[4]

யாங் டி பெர்துவான் அகோங்[தொகு]

14 ஆக்டொபர் 2016யில் நடைபெற்ற அரசவை மாநாட்டில், சுல்தான் முஹமட் 5 அடுத்த யாங் டி பெர்துவான் அகோங்-ஆக அறிவிக்கப்படடர். இவரது ஆட்சிக்காலம் 13 டிசம்பர் 2016 தொடங்கியது. 

இவர் எவரும் எதிர்பார்க்காத நிலையில் 6-ம் ஜனவரி 2019 அரசர் பதவியை துறந்தார். மலேசிய வரலாற்றில் பேரரரசர் பதவி துறப்பது இதுவே முதல் முறையாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "King of people's hearts - Nation - The Star Online". www.thestar.com.my. 13-03-2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  2. 2.0 2.1 Soszynski, Henry. "KELANTAN". 3 மார்ச் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 March 2018 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Tuanku Muhammad Faris Petra is new Sultan of Kelantan". Sin Chew Daily. 13 September 2010. http://www.mysinchew.com/node/44820. பார்த்த நாள்: 22 September 2010. 
  4. "Pejabat Penyimpan Mohor Besar Raja-Raja – Senarai Timbalan Yang di-Pertuan Agong". 2015-05-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-08-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "Sadness, shock over Sultan Muhammad V's resignation as King". thestar. thestar.

மேலும் காண்க[தொகு]