கெற்பெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெற்பெலி, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஒரு ஊர்.[1] இதன் மேற்கில் பாலாவியும், வடக்கில் கொடிகாமம், உசன், கரம்பகம் என்னும் ஊர்களும், கிழக்கில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிளாலியும் உள்ளன. தெற்குப் பக்கத்தில் யாழ்ப்பாணக் கடலேரி உள்ளது.[2]

நிறுவனங்கள்[தொகு]

இவ்வூரில் கெற்பெலி அரசாங்க தமிழ்க் கலவன் பாடசாலை உள்ளது. இங்கே கெற்பெலி பரமசிவன் கோயில், சம்பாவெளி வீரகத்திப் பிள்ளையார் கோயில், கலிங்கன் சாட்டி முருகன் கோயில், வீரபத்திரர் கோயில் போன்ற கோயில்கள் உள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 33.
  2. "TamilNet: 21.05.03 SLA agrees to compensate Ketpali victims". TamilNet. May 21, 2003. https://www.tamilnet.com/art.html?artid=9026. 
  3. "Department of Hindu Religious and Cultural Affairs" (PDF). Archived from the original (PDF) on 2013-02-28. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெற்பெலி&oldid=3748955" இலிருந்து மீள்விக்கப்பட்டது