கெர்லா இராச்சியம்
கெர்லா இராச்சியம் (Kingdom of Kherla) இந்தியப் பிராந்தியமான கோண்ட்வானாவில் இருந்த ஆரம்பகால இராச்சியமாகும். நான்கு பண்டைய கோண்டு இராச்சியங்களில் ஒன்றாக கெர்லா இராச்சியம் கருதப்படுகிறது.[1] நரசிங் ராய் இந்த வம்சத்தின் முதல் மன்னராகவும், ஆரம்பகால கோண்டு ஆட்சியாளர்களில் ஒருவராகவும் இருந்தார். கெர்லாவில் பரவியிருந்த கோண்டு ஆட்சிக்கு முன்னர் ஓர் இராசபுத்திர வம்சம் இருந்ததாகக் கூறப்படுகிறது.[2] மாண்டு மற்றும் தக்காண சுல்தானகங்களின் ஆட்சியாளர்கள் போன்ற வட இந்திய முசுலீம் ஆட்சியாளர்களின் மோதல்களுக்கு இடையே இப்பகுதி தொடர்ந்து சிக்கிக்கொண்டது. இந்த இராச்சியம் தொடர்பான ஆதாரங்கள் மற்ற கோண்டு ஆட்சியாளர்களைப் போலல்லாமல் குறிப்பிடத்தக்கவை இல்லை.[2]
வரலாறு
[தொகு]கோண்டுகளுக்கு முன்பு கெர்லாவில் ஓர் இராசபுத்திர வம்சம் ஆட்சி செய்து வந்தது. அந்த இராசபுத்திர ஆட்சியாளர்களில் மிகப் பெரியவர் செய்த்பால் என்று பெயரிடப்பட்டார், அவர் கெர்லா கோட்டையைக் கட்டிய பெருமைக்குரியவர் ஆவார். செய்த்பாலுக்குப் பிறகு கெர்லாவின் முதல் கோண்டு ஆட்சியாளரான நர்சிங் ராய் ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சியின் போது, பேராரின் வடக்கே உள்ள கவில்குர் கோட்டை உட்பட மேற்கு திசையில் இந்த இராச்சியம் விரிவடைந்தது. இவரது ஆட்சி வடக்கிலும் தெற்கிலும் இருந்த முசுலீம் ஆட்சியாளர்களுடன் ஏற்பட்ட தொடர்ச்சியான போர்களால் குறிக்கப்பட்டது.[2][1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Pradesh (India), Madhya (1971). Madhya Pradesh District Gazetteers: Jabalpur (in ஆங்கிலம்). Government Central Press.
- ↑ 2.0 2.1 2.2 Chatterton, Eyre (8 January 2021). The Story Of Gondwana (in ஆங்கிலம்). Read Books Ltd. ISBN 978-1-5287-6963-1.