கெர்ரி பேக்கர்
கெர்ரி பேக்கர் | |
|---|---|
| பிறப்பு | கெர்ரி பிரான்சிஸ் புல்மோர் பேக்கர் 17 திசம்பர் 1937 சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா |
| இறப்பு | 26 திசம்பர் 2005 (அகவை 68) சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா |
| கல்லறை | எல்லர்ஸ்டன், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா |
| கல்வி | |
| பணி | ஊடக உரிமையாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1960−2005 |
| அறியப்படுவது | |
| இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | |
| பெற்றோர் | |
| வாழ்க்கைத் துணை | |
| பிள்ளைகள் | கிரெட்டல் பேக்கர், ஜேம்ஸ் பேக்கர் |
| உறவினர்கள் |
|
கெர்ரி பிரான்சிஸ் புல்மோர் பேக்கர் (Kerry Francis Bullmore Packer, 17 திசம்பர் 1937 - 26 திசம்பர் 2005) என்பவர் ஒரு ஆத்திரேலிய ஊடக அதிபராவார். இவர் இருபதாம் நூற்றாண்டு ஆத்திரேலியாவின் மிகவும் சக்திவாய்ந்த ஊடக உரிமையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2] பேக்கர் குடும்ப நிறுவனம் நைன் நெட்வொர்க் மற்றும் வெளியீட்டு நிறுவனமான ஆஸ்திரேலியன் கன்சாலிடேட்டட் பிரஸ் இரண்டிலும் கட்டுப்பாட்டுப் பங்கைக் கொண்டிருந்தது. பின்னர் அவை பப்ளிசிங் அண்ட் பிராட்காஸ்டிங் லிமிடெட் (பிபிஎல்) என இணைக்கப்பட்டன. பேக்கர் ஆத்திரேலியாவிற்கு வெளியே, உலகத் தொடர் துடுப்பாட்டப் போட்டியை நிறுவியதற்காக மிகவும் பிரபலமானவர். இவர் இறக்கும் போது, ஆத்திரேலியாவின் மிகவும் பணக்கார, மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராக இருந்தார். 2004 ஆம் ஆண்டில், பிசினஸ் ரிவியூ வீக்லி பத்திரிகை பேக்கரின் நிகர சொத்து மதிப்பை ஆஸ்திரேலிய A$6.5 பில்லியன் என மதிப்பிட்டது.[3]
துவக்க கால வாழ்க்கை
[தொகு]கெர்ரி பேக்கர் 1937 திசம்பர் 17 அன்று ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் பிறந்தார். இவரின் தந்தை சர் ஃபிராங்க் பேக்கர், ஆத்திரேலிய ஊடக உரிமையாளர், ஆஸ்திரேலிய கன்சாலிடேட்டட் பிரஸ் மற்றும் நைன் நெட்வொர்க்கின் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். இவரின் தாயார், கிரெட்டல் புல்மோர், ஸ்காட்டிஷ் ரக்பி யூனியன் வீரரான ஹெர்பர்ட் புல்மோரின் மகளாவார். இவருக்கு கிளைட் பாக்கர் என்னும் அண்ணன் இருந்தார். இவர் பள்ளியில் குத்துச்சண்டை, துடுப்பாட்டம், ரக்பி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் கலந்துகொண்டார். இருப்பினும், இவர் கல்வி கற்பதில் சிரமப்பட்டார், ஒருவேளை கண்டறியப்படாத எழுத்துமயக்கம் காரணமாக இருக்கலாம்.[4] 1974 இல் இவரின் தந்தை இறந்தபோது, $100 மில்லியன் மதிப்புள்ள குடும்ப சொத்து நேரடியாக பேக்கரின் கைகளுக்குச் சென்றது. இவரின் தந்தை 1972 இல் அவரது மூத்த மகன் கிளைடுட்டுன் பிரிந்துவிட்டார்.[4]
வணிகம்
[தொகு]பேக்கர், தனது குடும்ப நிறுவனமான கன்சாலிடேட்டட் பிரஸ் ஹோல்டிங்ஸ் வழியாக, பப்ளிசிங் அண்ட் பிராட்காஸ்டிங் லிமிடெட் (பிபிஎல்) நிறுவனத்தில் 37% பங்குகளுடன் முக்கிய பங்குதாரராக இருந்தார்.[5] பேக்கரின் மரணம் வரை பிபிஎல் நைன் தொலைக்காட்சி அலைவரிசையையும், ஆத்திரேலியாவின் அதிகம் விற்பனையாகும் பல பத்திரிகைகளை அச்சிடும் ஆஸ்திரேலியன் கன்சாலிடேட்டட் பிரஸ்ஸையும் வைத்திருந்தது. இவர் பல சூதாட்டம் மற்றும் சுற்றுலாத் தொழில்களிலும் ஈடுபட்டார். குறிப்பாக மெல்போர்னில் உள்ள கிரவுன் கேசினோ தொழிலில் ஈடுபட்டார்.[6] நைன் நெட்வொர்க், ஆஸ்திரேலியன் கன்சாலிடேட்டட் பிரஸ் ஆகிய வணிகங்கள் பின்னர் பிபிஎல் மீடியாவிற்கு விற்கப்பட்டன.
வணிக உலகில் பேக்கர் பரவலாக மதிக்கப்பட்டார், அரசியல்வாதிகளால் அரவணைக்கப்பட்டார். மேலும் இவர் ஒரு மோசமான மாணவராக இருந்தபோதிலும், இவர் வழ்ந்த காலத்தின் மிகவும் சாதுர்யமான தொழிலதிபர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்பட்டார்.[7]
குடும்பத்தின் வணிக சாம்ராசியத்தை நடத்துவதற்கு பேக்கர் முதல் தேர்வாக இருக்கவில்லை - கெர்ரியின் அண்ணன் கிளைட் பேக்கர் நிறுவனத்தை கையகப்படுத்துவார் என்று அவரின் தந்தை நினைத்திருந்தார். ஆனால் 1970 களின் முற்பகுதியில் கிளைட் தன் தந்தையுடன் பிரிந்து ஆத்திரேலியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறினார்.
1974 ஆம் ஆண்டு தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு, கெர்ரி பேக்கரின் சுயாதீனமான வணிக வாழ்க்கை தொடங்கியது. இவர் பி.பீ.எல். இல் குடும்பத்தின் பங்கின் கட்டுப்பாட்டைப் பெற்றார். இதன் மதிப்பு A$100 மில்லியன் . மேலும், தொலைக்காட்சி மற்றும் கேசினோக்களில் இவரது முக்கிய ஆத்திரேலிய முதலீடுகள் அரசாங்க ஒழுங்குமுறைகளால் போட்டிகளிலிருந்து மிகவும் பாதுகாக்கப்பட்டன. அவற்றை பேக்கரும் அவரது ஊழியர்களும் மிகவும் கடினமாக உழைத்து பராமரித்தனர்.
2001 ஆம் ஆண்டு இவரின் மகன் ஜேம்ஸ் முதலீடு செய்திருந்த ஒன். டெல் என்ற தொலைபேசி நிறுவனம் சரிவைக் கண்டது. அது பேக்கர் குடும்பத்தின் வணிக நற்பெயருக்கு விழுந்த அடி ஆகும்.
கெர்ரி பேக்கர் ஆத்திரேலியாவின் மிகப்பெரிய நில உரிமையாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.[8] 2003 ஆம் ஆண்டில், இவரது சொத்துக்களில் ஒன்றில் மாணிக்கக் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[9]
பேக்கரின் ஊடக சாம்ராஜ்யத்தில் பத்திரிகைகள், தொலைக்காட்சி வலைப்பின்னல்கள், தொலைத்தொடர்பு, பெட்ரோலிய வேதியல், கனரக பொறியியல், பெரிஷர் ப்ளூ ஸ்கை ரிசார்ட்டில் 75% பங்கு, வைர ஆய்வு, நிலக்கரி சுரங்கங்கள், சொத்துகள், ஃபாக்ஸ்டெல் கம்பிடவடத் தொலைக்காட்சி வலைப்பின்னலில் ஒரு பங்கு மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளில் இலாபகரமான கேசினோ வணிகத்தில் முதலீடுகள் ஆகியவை அடங்கும்.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chip off the old block". The Age (Melbourne). 2005-12-31. http://www.theage.com.au/news/national/chip-off-the-old-block/2005/12/30/1135915692196.html.
- ↑ Rowe, D. "Rugby league in Australia: The super league saga". Journal of Sport & Social Issues: 221–226.
- ↑ Skeffington, Robert. "The richest list of all". The Age.
- 1 2 Highham, James E. S.; Cohen, Scott (2010). Giants of Tourism. CABI. p. 182. ISBN 9781845936532. Retrieved 18 July 2013.
- ↑ "Melco/PBL Joint Venture acquires remaining 30% of Park Hyatt Project in Macau" (PDF).
- ↑ "Kerry Packer Bio".
- ↑ "A pioneer in the realm of television". The Sydney Morning Herald (in ஆங்கிலம்). 2005-12-27. Retrieved 2021-08-14.
- ↑ "Australia's richest man, Kerry Packer, dies at 68" (in en-US). https://www.nytimes.com/2005/12/27/world/asia/australias-richest-man-kerry-packer-dies-at-68.html.
- ↑ "How Kerry Packer unearthed $30 million". The Age (in ஆங்கிலம்). 2005-03-06. Retrieved 2021-08-14.
- ↑ "The great inheritor". https://www.economist.com/business/2006/01/05/the-great-inheritor.
- ↑ "CNN.com - Media mogul Kerry Packer dies - Dec 27, 2005". CNN. Retrieved 2021-08-14.