கெர்மிட் த ஃபுராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கெர்மிட் த புரக்
சிசேம் ஸ்றீட் கதை மாந்தர்
முதல் தோற்றம் 1955 இல் சாம் அன்ட் பிரண்ஸ் எனும் நிகழ்ச்சியில்
உருவாக்கியவர் ஜிம் ஹான்சன்
தகவல்
பிற பெயர்புரொக்கி பேபி (குரோவர் அழைப்பது), கேர்மி (மிஸ் பிக்கி அழைப்பது), கிரீன் ஸ்டப் (ஃபிளாயிட் பெப்பர் அழைப்பது)
பால்ஆண்

கெர்மிட் த புரொக் (Kermit the Frog) எனப்படும் பொம்மை பொம்மலாட்டத்தில் பெயர்பெற்ற ஜிம் ஹென்சன் என்பவரின் மிகப்பிரபலமான படைப்பாகும். கெர்மிட் 1955இல் முதற் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. த மப்பட் ஷோ, சிசேம் சிரீட் மற்றும் பல விளம்பரங்களில் கெர்மிட் த புரொக் தோன்றுகின்றது. 1990 இல் இறக்கும் வரை ஜிம் ஹென்சனினாலேயே கெர்மிட் த புரொக்கின் பொம்மலாட்டம் நிகழ்த்தப்பட்டது. ஹென்சனின் இறப்பின் பின்னர் ஸ்றீவி விட்மையர் என்பவரால் இந்தப் பொம்மலாட்டம் நிகழ்த்தப்படுகின்றது.

1979 இல் த ரெயின்போ கெனக்சன் எனும் பாடலை த மப்பட் மூவி எனும் முழுநீள பொம்மலாட்ட திரைப்படத்தில் கெர்மிட் தோன்றினார். இந்த திரைப்படத்தில் முற்றுமுழுதாக ஹென்சனின் படைப்பில் உருவான பொம்மைகளே பங்கு பற்றின என்பது சிறப்புச்செய்தி. இந்தப் பாடல் பில்போர்ட் பட்டியலில் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்மிட்_த_ஃபுராக்&oldid=1918963" இருந்து மீள்விக்கப்பட்டது