கெர்னோவைட்டு
| கெர்னோவைட்டு Kernowite | |
|---|---|
சமகட்டமைப்பு கொண்ட இலிரோகோனைட்டு அலகு செல்லின் எக்சு கதிர் படிகவியல் அறிக்கையின் படி கெர்னோவைட்டு கனிமத்தின் அலகு செல்[1] | |
| பொதுவானாவை | |
| வகை | ஆர்சனேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | Cu2Fe(AsO4)(OH)4·4H2O |
| இனங்காணல் | |
| படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
கெர்னோவைட்டு (Kernowite) என்பது Cu2Fe(AsO4)(OH)4·4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஆர்சனேட்டு கனிமமாகும். [2] 2020 ஆம் ஆண்டில் இக்கனிமம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. கார்ன்வாலின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. கார்னிசு மொழியில் கார்ன்வாலை கெர்னோவ் என்று அழைப்பர்.
கெர்னோவைட்டு என்பது ஒரு சிக்கலான ஆர்சனேட்டு கனிமமாகும். முதன்முதலில் 2020 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. மேலும் இது இலிரோகோனைட்டு கனிமத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இலிரோகோனைட்டு கனிமத்தில் இடம்பெற்றுள்ள அலுமினியத்திற்கு பதிலாக கெர்னோவைட்டில் இரும்பு இடம்பெற்றுள்ளது. எனவே நீல நிறத்திற்குப் பதிலாக பச்சை நிறமாக மாறுகிறது.[3][4] கார்னிசு மொழியில் கார்ன்வாலின் பெயரான கெர்னோவிலிருந்து கெர்னோவைட்டு என்ற பெயர் பெறப்பட்டது. இக்கனிமம் கார்ன்வாலின் செயிண்ட் டே, வீல் கோர்லேண்ட்டு சுரங்கத்தில் சுமார் 1800 ஆம் ஆண்டில் வெட்டப்பட்ட ஒரு பாறையில் கண்டுபிடிக்கப்பட்டது.[3][5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ P. C. Burns; R. K. Eby; F. C. Hawthorne (1991). "Refinement of the structure of liroconite, a heteropolyhedral framework oxysalt mineral". Acta Crystallographica]] 47 (5): 916–919. doi:10.1107/S0108270190010939. Bibcode: 1991AcCrC..47..916B.
- ↑ "Kernowite". mindat.org. Retrieved 2020-12-24.
- ↑ 3.0 3.1 "Kernowite: New mineral found on rock mined in Cornwall". BBC News. 2020-12-23. Retrieved 2020-12-23.
- ↑ "Beautiful new emerald-green mineral described from Cornwall". Natural History Museum, London. Retrieved 2020-12-23.
- ↑ "Kernowite: New mineral species discovered on rock mined in Cornwall 220 years ago". Sky News. Retrieved 2020-12-23.